பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் (Women's One Day International (WODI) பெண்களுக்கான வரையிட்ட நிறைவுகள் துடுப்பாட்டம் ஆகும். ஆண்கள் துடுப்பாட்டம் போலவே பெண்களுக்கும் 50 நிறைவுகள் கொண்ட போட்டியாக நடைபெறுகிறது. இங்கிலாந்தில் 1973 ஆம் ஆண்டில் பெண்களுக்கான முதல் ஒருநாள் போட்டி மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது. 1000 ஆவது ஒருநாள் போட்டி தென்னாப்பிரிக்க பெண்கள் அணி மற்றும் நியூசிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையே அக்டோபர் 13, 2016இல் நடைபெற்றது.[1]

தகுதி பெற்றுள்ள அணிகள்[தொகு]

2006 ஆம் ஆண்டில், ஐ.சி.சி முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களுக்கு மட்டுமே தேர்வு மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட தகுதி பெறும் என்று அறிவித்தது.அதனால், 2011 மகளிர் துடுப்பாட்ட உலகக் கோப்பை தகுதிப் போட்டியின் போது நெதர்லாந்து தனது ஒருநாள் போட்டியில் விளையாடும் தகுதியினை இழந்தது. நெதர்லாந்து அணிக்குப் பதிலாக வங்காளதேச அணி தகுதி பெற்றது.[2]

தற்போது ஒரு நாள் அந்தஸ்துள்ள நாடுகள்:

பின்வரும் அணிகள் ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளன, ஆனால் தற்போது ஒருநாள் போட்டிக்கு தகுதி பெறவில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் அந்த நிலையை மீண்டும் பெற அவர்கள் தகுதி பெறலாம்.

  • டென்மார்க் (1989–1999)
  • சப்பான் (2003)
  • நெதர்லாந்து (1984–2011)
  • இசுக்காட்லாந்து (2001–2003)

தரவரிசை[தொகு]

அக்டோபர் 2018 க்கு முன்பு, ஐ.சி.சி பெண்கள் இருபது -20 துடுப்பாட்ப் போட்டிக்கு எனத் தனியாக தரவரிசையை பராமரிக்கவில்லை, அதற்கு பதிலாக விளையாட்டின் மூன்று வடிவங்களுக்குமான செயல்திறனை ஒட்டுமொத்த மகளிர் அணிகள் தரவரிசையில் சேர்த்தது. [3] ஜனவரி 2018 இல், ஐ.சி.சி இணை நாடுகளுக்கிடையேயான அனைத்து போட்டிகளுக்கும் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தகுதியினை வழங்கியதுடன், பெண்களுக்கு தனி இ20 தரவரிசைகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அறிவித்தது. [4]

ஐசிசி பெண்கள் ஒபது தரவரிசை
Rank Team Matches Points Rating
1  ஆத்திரேலியா 15 2,436 162
2  இந்தியா 17 2,035 120
3  இங்கிலாந்து 17 1,993 117
4  தென்னாப்பிரிக்கா 21 2,328 111
5  நியூசிலாந்து 18 1,696 94
6  மேற்கிந்தியத் தீவுகள் 12 1,025 85
7  பாக்கித்தான் 15 1,101 73
8  வங்காளதேசம் 5 306 61
9  இலங்கை 11 519 47
10  அயர்லாந்து 2 25 13
Reference: ICC Women's ODI rankings, ESPNcricinfo rankings, 10 March 2021

அணிகளுக்கான புள்ளிவிரரங்கள்[தொகு]

அணிகள் ஆண்டு போட்டிகள் வெற்றி தோல்வி சமன் NR வெற்றி

சதவீதம்

 ஆத்திரேலியா 1973– 329 258 63 2 6 80.18
 வங்காளதேசம் 2011– 38 9 27 0 2 25.00
 டென்மார்க் 1989–1999 33 6 27 0 0 18.18
 இங்கிலாந்து 1973– 348 204 131 2 11 60.83
 இந்தியா 1978– 272 151 116 1 4 56.52
 International XI 1973–1982 18 3 14 0 1 17.64
 அயர்லாந்து 1987– 148 39 103 0 6 27.46
 ஜமேக்கா 1973 5 1 4 0 0 20.00
 சப்பான் 2003 5 0 5 0 0 0.00
 நெதர்லாந்து 1984–2011 101 19 81 0 1 19.00
 நியூசிலாந்து 1973– 335 170 157 2 6 51.97
 பாக்கித்தான் 1997– 165 48 113 1 3 29.93
 இசுக்காட்லாந்து 2001–2003 8 1 7 0 0 12.50
 தென்னாப்பிரிக்கா 1997– 193 94 88 3 8 51.62
 இலங்கை 1997– 167 56 106 0 5 34.56
 டிரினிடாட் மற்றும் டொபாகோ 1973 6 2 4 0 0 33.33
 மேற்கிந்தியத் தீவுகள் 1979– 177 80 91 1 5 46.80
Young England 1973 6 1 5 0 0 16.66
Source: Cricinfo, as 14 December 2019. The result percentage excludes no results and counts ties as half a win.


மேற்கோள்கள்[தொகு]

  1. "South Africa and New Zealand to feature in 1000th women’s ODI". ICC. 12 October 2016. Archived from the original on 13 அக்டோபர் 2016. https://web.archive.org/web/20161013081440/http://www.icc-cricket.com/news/2016/news/96485/south-africa-and-new-zealand-to-feature-in-1000th-womens-odi. 
  2. "Ireland and Bangladesh secure ODI status". ICC. 24 November 2011 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "ICC Women's Team Rankings launched". International Cricket Council. 25 December 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 January 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Women's Twenty20 Playing Conditions" (PDF). International Cricket Council. 24 July 2011 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 9 February 2010 அன்று பார்க்கப்பட்டது.