பி. சி. சர்க்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோதுல் சந்திர சர்க்கார்
பிறப்பு(1913-02-23)23 பெப்ரவரி 1913
தங்காயில், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது டாக்கா கோட்டம், வங்காளதேசம்)
இறப்பு6 சனவரி 1971(1971-01-06) (அகவை 57)
அசஹிகாவா, ஹொக்கைடோ, யப்பான்
தேசியம் இந்தியா
பணிமாய வித்தையாளர்
வாழ்க்கைத்
துணை
வசந்தி தேவி
பிள்ளைகள்3 மகன்கள், மாணிக் சர்க்கார், இளைய பி. சி. சர்க்கார், மிக இளைய பி. சி. சர்க்கார்

புரோதுல் சந்திர சர்க்கார் (Protul Chandra Sorcar; 23 பிப்ரவரி 1913 – 6 ஜனவரி 1971) ஒரு இந்திய மாய வித்தையாளர் ஆவார். [1] இவர் 1950கள் மற்றும் 1960கள் முழுவதும் சர்வதேச அளவில் செயல்பட்ட மாய வித்தைக்காராக இருந்தார், நேரடி பார்வையாளர்கள் மற்றும் தொலைக்காட்சியில் இவர் இந்திரஜால் என்ற நிகழ்ச்சியை நிகழ்த்தினார். 1971 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி, யப்பானின் ஹொக்கைடோவில் உள்ள அசஹிகாவாவில், தனது 57 வயதில் மாரடைப்பால் இறந்தார். [2]

தொழில்[தொகு]

21 வயதில், சர்க்கார் முறையான கல்வியை கைவிட முடிவு செய்தார் (ஒரு பொறியியலாளராக படிக்க வாய்ப்பிருந்தது). மேலும் இந்தியாவில் தொழில் நடத்த குறைந்த அளவே வாய்ப்பிருந்தாலும், மாய வித்தை செய்பவபராக மாற முடிவு செய்தார். [3] :151

1930களின் நடுப்பகுதியில் கொல்கத்தாவிலும் யப்பான் போன்ற பல நாடுகளிலும் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியபோது சர்க்கார் பிரபலமானார். தனது பிற நிகழ்ச்சிகளிடையே 1964இல் பூமிக்கு மேலே மிதக்கும் ஒரு பெண்ணின் சாகசத்தை நிகழ்த்தினார். [4] கணபதி சக்கரவர்த்தி இவருக்கு வழிகாட்டியாக இருந்தார். [5]

1956 இல், பிபிசியின் பனோரமா நிகழ்ச்சியில் மாயைவித்தையில் ஒரு பெண்ணை இரண்டாக அறுக்கும் நிகழ்ச்சியை இவர் நிகழ்த்தினார். [6] அதை நேரடியாக தொலைக்காட்சி நிகழ்ச்சியாக நிகழ்த்தியபோது, ஐக்கிய ராச்சியத்தில் அது பெரும் கவனத்தை ஈர்த்தது. ஏனெனில் முடிவில் பெண்கள் உண்மையில் பாதியாக வெட்டப்பட்டு இறந்தது போல் தோன்றியது, இது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. [7]

இவர் "உலகின் சிறந்த மந்திரவாதி" என தனக்குத்தானே பெயரிட்டுக் கொண்டார். [8] :152

சர்க்கார் 1971 இல் யப்பானில் இறந்தார். [9] :153

சொந்த வாழ்க்கை[தொகு]

சர்க்கார், வசந்தி தேவி என்பவரை மணந்தார். இவர்களுக்கு மாணிக் சர்க்கார் மற்றும் இளைய பி. சி. சர்க்கார் உட்பட மூன்ரு மகன்கள் இருந்தனர்.

விருதுகள்[தொகு]

  • இந்திய அரசு கொல்கத்தாவில் உள்ள ஒரு பெரிய தெருவுக்கு ஜாதுசாம்ராட் பிசி சர்கார் சரணி என இவரது பெயரை சூட்டியுள்ளது
  • 26 ஜனவரி 1964 அன்று இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது

அஞ்சல் முத்திரை[தொகு]

இந்தியாவின் 2010 அஞ்சல் முத்திரையில் சர்க்கார்

பிப்ரவரி 23, 2010 அன்று, இந்திய அஞ்சல் துறை இவரை கௌரவிக்கும் வகையில் ஒரு நினைவு முத்திரையை வெளியிட்டது. [10] [11]

சான்றுகள்[தொகு]

  1. Banglapedia: National Encyclopedia of Bangladesh. 
  2. "PC Sorcar: India's 'maharajah of magic' who terrified the UK". BBC.
  3. James Randi (1992). Conjuring. New York: St. Martin's Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-312-08634-2. இணையக் கணினி நூலக மையம்:26162991. https://www.worldcat.org/oclc/26162991. 
  4. "Magic of PC Sorcar Senior". Archived from the original on 27 November 2013. பார்க்கப்பட்ட நாள் 2 January 2014.
  5. "P. C. Sorcar | The Asian Age Online, Bangladesh". The Asian Age (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-15.
  6. "PC Sorcar: India's 'maharajah of magic' who terrified the UK" (in en-GB). BBC News. 2018-06-02. https://www.bbc.com/news/world-asia-india-44316854. 
  7. "PC Sorcar: India's 'maharajah of magic' who terrified the UK" (in en-GB). BBC News. 2018-06-02. https://www.bbc.com/news/world-asia-india-44316854. 
  8. James Randi (1992). Conjuring. New York: St. Martin's Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-312-08634-2. இணையக் கணினி நூலக மையம்:26162991. https://www.worldcat.org/oclc/26162991. Randi, James (1992). Conjuring. New York: St. Martin's Press. ISBN 0-312-08634-2. OCLC 26162991.
  9. James Randi (1992). Conjuring. New York: St. Martin's Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-312-08634-2. இணையக் கணினி நூலக மையம்:26162991. https://www.worldcat.org/oclc/26162991. Randi, James (1992). Conjuring. New York: St. Martin's Press. ISBN 0-312-08634-2. OCLC 26162991.
  10. "Postage Stamps". India Post.
  11. "Postage stamp on P.C. Sorcar issued". The Hindu. 24 February 2010. http://www.thehindu.com/news/national/article112380.ece. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சி._சர்க்கார்&oldid=3801264" இலிருந்து மீள்விக்கப்பட்டது