உள்ளடக்கத்துக்குச் செல்

பி. என். முகர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. என். முகர்ஜி
பிறப்பு1 சனவரி 1932
வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு4 ஏப்ரல் 2013 ( 81 வயதில்)
கொல்கத்தா, இந்தியா
பணிவரலாற்றாசிரியர்
எழுத்தாளர்
நாணயவியலாளர்
கல்வெட்டியலாளர்
பிள்ளைகள்ஒரு மகன்
விருதுகள்பத்மசிறீ
எச்.சி. ராய்சௌதுரி நூற்றாண்டு பதக்கம்

பிரதீந்திர நாத் முகர்ஜி (Bratindra Nath Mukherjee, 1 சனவரி 1932 - 4 ஏப்ரல் 2013) என்பவர் ஒரு இந்திய வரலாற்றாசிரியர், நாணயவியல் நிபுணர், கல்வெட்டு நிபுணர், படிமவியலாளர் ஆவார். இவர் சோக்டியன் போன்ற மத்திய ஆசிய மொழிகளில் புலமை பெற்றதற்காக அறியப்படுகிறார். [1] இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கான கார்மைக்கேல் இருக்கை பேராசிரியராக இருந்தார். இவர் பல பண்டைய எழுத்துக்களை அறிந்வதவர் என்று கூறப்படுகிறது. [2] இவர் பண்டைய வரலாறு, நாணயவியல், கல்வெட்டுகள் பற்றிய 50 புத்தகங்களையும், 700 க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். [1] இந்திய அரசாங்கம் 1992 இல் இவருக்கு குடிமக்களுக்கு வழங்கப்படும் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதை வழங்கியது. [3]

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]
சாரநாத்தின் அசோக தூணில் உள்ள பிராமி எழுத்துக்கள் .

பி. என். முகர்ஜி 1932 ஆம் ஆண்டு புத்தாண்டு நாளில் பிறந்தார் [4] இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவரின் ஆசிரியர்களாக சரசி குமார் சரஸ்வதி, ஜே. என் . பானர்ஜி, ஆர். ஜி. பாசக் ஆகியோர் இருந்தனர். லண்டனில் உள்ள கீழை மற்றும் ஆப்பிரிக்கப் படிப்பு பள்ளியில், பேரராசிரியாக பணியாற்றிய புகழ்பெற்ற அறிஞரும் வரலாற்றாசிரியருமான ஆர்தர் லெவெல்லின் பாசாமை நெறியாளராக கொண்டு அவரின் கீழ் ஆய்வு மேற்கொண்டார். இவர் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஹரோல்ட் வால்டர் பெய்லியின் கீழ் மேற்கு மற்றும் நடு ஆசியாவின் வரலாற்று மொழியியல் பற்றிய ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். இவரது அந்த ஆய்வுகளின் வழியாக ஈரானிய, சாகா, சாகா-கோட்டானீஸ், அரமேயம் ஆகியவற்றி கவனம் செலுத்தினார். [4]

பாண்டித்தியம்

[தொகு]

முகர்ஜி மத்திய ஆசியாவின் கல்வெட்டு மற்றும் படிமவியல் பற்றிய பல புத்தகங்களை எழுதினார். அவை குறிப்பாக குசானர், உயேசி குறித்தவை. இவரது 1989 நூலான, தகுசானர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும், ஆரம்பலாக மத்திய ஆசியாவில் இந்தியா (1996), 2004 இல் வெளியிடப்பட்ட இவரது கடைசி படைப்புகளான குசானர் ஆய்வுகள், இந்த தலைப்புகளான நூல்கள் குறிப்பிடத்தக்கவை. பண்டைய இந்தியாவைப் பற்றிய இவரது ஆய்வுகள் இவரை நாணயவியல் ஆய்வுகளுக்கு இட்டுச் சென்றது. அதன் தொடர்ச்சியாக இவர் இந்திய நாணயவியல் கலை, வங்காளத்தின் நாணயங்கள் என்ற இரண்டு புத்தகங்களை எழுதினார். [1] இவரது மூன்று புத்தகங்களான, குசானர் மரபியலும் காலவரிசையும் (1967), ஒரு அக்ரிப்பன் சான்று: இந்தோ-பார்த்தியன் வரலாற்றில் ஆய்வுகள் (1969), ஐந்து ஆறுகளின் நிலத்தில் குசானர் நாணயங்கள் (1978) ஆகியவை நாணய ஆய்வுகளினால் சக-குசான காலங்களின் அரசியல் மற்றும் வம்ச வரலாறுகளை மறுகட்டமைப்பதற்கான வழிமுறையாகப் பயன்படுகின்றன.[4]அரமேயம் மற்றும் கிரேக்க கல்வெட்டுகளின் அறிஞர் என்று அறியப்பட்ட இவர், மௌரியப் பேரரசின் ஆய்வுக்கு உதவிய அசோகரின் கல்வெட்டு ஆணைகளை தெளிவுபடுத்தினார். இந்த ஆணைகள் பிராகிருத கல்வெட்டுகளின் மொழிபெயர்ப்பு மற்றும் ஒலிபெயர்ப்பு என்று இவர் வலியுறுத்தினார். [4] இவரது கண்டுபிடிப்புகள், அசோகரின் அரமேயக் கட்டளைகள் (1984) என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டன.

பண்டைய இந்தியாவின் அரசியல் வரலாறு: பரிக்சித்து பதவி ஏற்றது முதல் குப்த வம்சத்தின் அழிவு வரை என்ற ஹேம் சந்திர ராய்சௌதுரியால் எழுதப்பட்ட நூலுக்கு முகர்ஜி 300 பக்க திறனாய்வு உரையை எழுதினார். [4] இவரது ஆய்வுகள் பிராமி, கரோஷ்டி எழுத்துக்கள் மற்றும் அவற்றின் சொற்பிறப்பியல்களைப் புரிந்துகொள்ள உதவியது. இவரது எழுத்து நடையில் பெரிதும் அடிக்குறிப்புகளை கொண்டிருக்கும். மேலும் இவரது கண்டுபிடிப்புகள் சில நேரங்களில் விமர்சனங்களை ஈர்த்தன. [5] [6] 50 புத்தகங்கள் எழுதியதைத் தவிர,  இவரது 700 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் வெளியாகியுள்ளன. [7] [8]

கௌரவங்கள்

[தொகு]

முகர்ஜி கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். மேலும் 1975 முதல் 1998 வரை பண்டைய இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கான கார்மைக்கேல் இருக்கையின் தலைவராக இருந்தார். [9] இவர் இங்கிலாந்தின் ராயல் ஏசியாடிக் சொசைட்டியின் உறுப்பினராக இருந்தார். [9] இந்திய அரசு இவருக்கு 1992 இல் பத்மசிறீ விருதை வழங்கியது. [3] இவர் இந்திய வரலாற்றுப் பேராயத்தின் தலைவராக பொறுப்பு வகித்தார். இவருக்க கொல்கத்தாவின் ஆசியடிக் சொசைட்டியின் எச். சி. ராய்சவுத்ரி நூற்றாண்டு பதக்கம் வழங்கப்பட்டது. [4]

முகர்ஜி 4 ஏப்ரல் 2013 அன்று தனது 79 வயதில் இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். [1]

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

[தொகு]
  • B. N. Mukherjee (1981). Mathurā and Its Society: The ʼSakæ-Pahlava Phase (in ஆங்கிலம்). Firma K.L.M. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780836415896.
  • B. N. Mukherjee (1984). Studies in the Aramaic Edicts of Asoka. India Museum.
  • B. N. Mukherjee (1996). India in Early Central Asia. Harman Publishing House. p. 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8185151984.
  • B. N. Mukherjee (2004). Kushana Studies; New Perspectives. Firma KLM Private Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8171021093.
  • Bratindra Nath Mukherjee (2005). Origin of Brāhmī and Kharoshṭī scripts. Progressive Publishers. p. 69.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Bratindra Nath Mukherjee passes away". 5 April 2013. பார்க்கப்பட்ட நாள் 18 October 2015.
  2. "Padmashri winner historian Bratindra Nath Mukherjee passes away at 79". 4 April 2013. பார்க்கப்பட்ட நாள் 18 October 2015.
  3. 3.0 3.1 "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Ranabir Chakravarti (2014). "Remembering an Extra Large Scholar". Indian Historical Review 41 (1): 151–154. doi:10.1177/0376983614521722. https://www.academia.edu/7852916. 
  5. R. E. Emmertck (February 1970). "Studies in Kushana Genealogy and Chronology". Bulletin of the School of Oriental and African Studies 33 (1): 241. doi:10.1017/S0041977X0014563X. http://journals.cambridge.org/action/displayAbstract?fromPage=online&aid=4025416. 
  6. R. Morton Smith (1971). "Reviewed Work: The Kushana Genealogy by B. N. Mukherjee". Journal of the American Oriental Society 91 (2): 318–320. doi:10.2307/600117. 
  7. "Worldcat profile". Worldcat. 2015. பார்க்கப்பட்ட நாள் 18 October 2015.
  8. "Renowned Historian Professor Bratindra Nath Mukherjee Died". Jagaran Josh. 5 April 2013. பார்க்கப்பட்ட நாள் 18 October 2015.
  9. 9.0 9.1 "Historian Bratindra Nath Mukherjee Dead". Outlook. 4 April 2013. பார்க்கப்பட்ட நாள் 18 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._என்._முகர்ஜி&oldid=3685122" இலிருந்து மீள்விக்கப்பட்டது