பிலிப்பீன்சு சிறிய காகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிலிப்பீன்சு சிறிய காகம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
கோர்விடே
பேரினம்:
காகம் (வகை)
இனம்:
C. samarensis
இருசொற் பெயரீடு
Corvus samarensis
Steere, 1890
வேறு பெயர்கள்
  • Corvus enca samarensis Steere, 1890

பிலிப்பீன்சு சிறிய காகம் (Small crow)(கோர்வசு சாமாரென்சிசு) என்பது கோர்விடே குடும்பத்தின் கோர்வசு பேரினத்தைச் சேர்ந்த ஒரு பாசரின் பறவைச் சிற்றினம் ஆகும். இது முன்பு மெலிந்த காகத்தின் (கோர்வசு என்கா) துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் தொகுதி பிறப்புச் சான்றுகள் இரண்டும் தனித்துவமான சிற்றினங்கள் என்பதைக் குறிக்கிறது. மேலும் இது பன்னாட்டு பறவையியலாளர்கள் சங்கத்தால் பிரிக்கப்பட்டது.[1][2]

வாழ்விடம்[தொகு]

இது பிலிப்பீன்சு தீவில் மட்டுமே அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநிலக் காடுகள் ஆகும்.

துணையினங்கள்[தொகு]

சிறிய காகச் சிற்றினம், இரண்டு துணையினங்களைக் கொண்டுள்ளது. ஒன்று வடக்கு பிலிப்பீன்சிலும் மற்றொன்று தெற்கிலும் காணப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-29.
  2. Birds of the Philippines. http://worldcat.org/oclc/1286814135. 
  3. (in en) IOC World Bird List 11.2. doi:10.14344/ioc.ml.11.2. http://www.worldbirdnames.org/ioc-lists/crossref.