பிரையன் ஆடம்ஸ்
பிரையன் ஆடம்ஸ் | |
---|---|
![]() 2024-இல் ஆடம்ஸ் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | பிரையன் கய் ஆடம்ஸ் |
பிறப்பு | நவம்பர் 5, 1959 கிங்ஸ்டன், ஒன்றாரியோ, கன்டா |
இசை வடிவங்கள் | |
தொழில்கள் |
|
இசைத்துறையில் | 1975–தற்போது வரை |
இணையதளம் | bryanadams |
பிரையன் கை ஆடம்ஸ் (Bryan Guy Adams: பிறப்பு: நவம்பர் 5, 1959) ஒரு பிரித்தானிய மற்றும் கனடிய பாடகரும்-பாடலாசிரியரும், இசைக்கலைஞரும், இசைப்பதிவு தயாரிப்பாளரும் மற்றும் புகைப்படக் கலைஞரும் ஆவார். உலகளவில் இவர் 75 மில்லியன் [2] முதல் 100 மில்லியனுக்கும் அதிகமான இசைத் தொகுப்புகள் மற்றும் தனிப்பாடல்களை விற்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, [3] [4] இவர் அதிகம் விற்பனையாகும் இசைக் கலைஞர்களின் பட்டியலில் இடம்பிடித்தார். 2010களில் கனடிய வானொலியில் இவரது பாடலகள் அதிகம் இசைக்கப்பட்டது. [5] மேலும் கனடாவில் 25 முதல் 15 தனிப்பாடல்களையும், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆத்திரேலியாவில் பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட பாடல் நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்..
ஆடம்ஸ் தனது 20 வயதில் தனது பெயரிடப்பட்ட முதல் இசைத் தொகுப்பை வெளியிட்டார். 1983 ஆம் ஆண்டு வெளியான முதல் பத்து தொகுப்புகளான கட்ஸ் லைக் எ நைஃப் மூலம் வட அமெரிக்காவில் இவர் புகழ் பெற்றார்; இந்தத் தொகுப்பில் அதன் தலைப்புப் பாடல் மற்றும் " ஸ்ட்ரெய்ட் ஃப்ரம் தி ஹார்ட் " என்ற கவிதை இடம்பெற்றன. இது இவரது முதல் அமெரிக்க வெற்றிப் பாடலாக அமைந்தது. 1984 ஆம் ஆண்டு ரெக்லெஸ் என்ற பாடல் கனடா மற்றும் அமெரிக்காவில் முதலிடத்தை பிடித்து பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், அமெரிக்கா மற்றும் கனடாவில் முதல் பத்து வெற்றிகளைப் பெற்ற " ரன் டு யூ " மற்றும் " சம்மர் ஆஃப் '69 " உள்ளிட்ட ஆறு தரவரிசைப் பாடல்களும் இவரை உலகளாவிய நட்சத்திரமாக்கியது. இரண்டும் அமெரிக்கா மற்றும் கனடாவில் முதல் பத்து வெற்றிகளைப் பெற்றவை.[6] 1987 ஆம் ஆண்டு வெளியான இன்டூ தி ஃபயர் என்ற இவரது இசைத்தொகுப்பு கனடாவில் இரண்டாவது இடத்தையும், அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் முதல் பத்து இடங்களையும் பிடித்தது.
பில்போர்டு என்ற அமெரிக்க பத்திரிகையால் வாரந்தோறும் வெளியிடப்படும் பாடல்களுக்கான அமெரிக்காவில் இசைத் துறையின் என்ற பட்டயலில் எல்லா காலத்திலும் சிறந்த கலைஞர்களின் பில்போர்டு ஹாட் 100 பட்டியலில் ஆடம்ஸ் 48வது இடத்தைப் பிடித்துள்ளார்.[7] இசையில் அவர் செய்த பங்களிப்புகள் ஆடம்ஸுக்கு ஏராளமான விருதுகளையும் பரிந்துரைகளையும் பெற்றுத் தந்துள்ளன. ஆடம்ஸ் 16 கிராமி பரிந்துரைகளில் 20 ஜூனோ விருதுகளையும், விஷுவல் மீடியாவிற்காக எழுதப்பட்ட சிறந்த பாடலுக்கான கிராமி விருதையும், 1 எம்டிவி வீடியோ இசை விருதையும், 5 கோல்டன் குளோப் விருதுக்கான பரிந்துரைகளும் மற்றும் 3 அகாடமி விருதுக்கான பரிந்துரைகளையும் வென்றுள்ளார். மேலும் திரைப்படங்களுக்கான பாடல் எழுதியதற்காக ஐந்து கோல்டன் குளோப் விருதுகளுக்கும் மூன்று அகாடமி விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். [8] ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம், கனடாவின் வாக் ஆஃப் ஃபேம், கனடிய பிராட்காஸ்ட் ஹால் ஆஃப் ஃபேம், [9] கனடிய இசை ஹால் ஆஃப் ஃபேம் [10] மற்றும் கனடிய பாடலாசிரியர்கள் ஹால் ஆஃப் ஃபேம் ஆகியவற்றில் ஆடம்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். மே 1, 2010 அன்று, ஆடம்ஸ் தனது 30 ஆண்டுகால கலைப் பங்களிப்புகளுக்காக, நிகழ்த்து கலைகளுக்கான கனடா ஆளுநரின் விருதுகளைப் -வாழ்நாள் கலை சாதனையாளர்-பெற்றார். [11]
வாழ்க்கை
[தொகு]பிரையன் கை ஆடம்ஸ் நவம்பர் 5, 1959 அன்று ஒன்ராறியோவின் கிங்ஸ்டனில் பிறந்தார்.[12] இவர் 1950களில் தென்மேற்கு இங்கிலாந்தின் பிளைமவுத்திலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்த ஆங்கிலேயத் தம்பதியினரான எலிசபெத் ஜேன் மற்றும் கான்ராட் ஜே. ஆடம்ஸின் மகனாவார்.[13]இவரது தந்தை, கனடிய இராணுவத்தில் சேர்ந்து பின்னர் ஐக்கிய நாடுகள் அவையின் அமைதி காக்கும் குழுவில் பார்வையாளராகவும், கனேடிய வெளியுறவுச் சேவை தூதராகவும் பணியாற்றினார். [14]
இந்தியாவில் ஆடம்ஸ்
[தொகு]ஆடம்ஸும் அவரது இசையும் இந்தியாவில் பிரபலமாக உள்ளன.[15] பல இசைத் துறை நிர்வாகிகள் ஆடம்ஸ் இந்தியாவில் மிகவும் பிரபலமான வெளிநாட்டு இசைக் கலைஞர் என்று கூறியுள்ளனர்.[15][16] 1990 களின் முற்பகுதியில் இந்தியாவில் பெரிய அளவிலான இசை நிகழ்ச்சியை நடத்திய முதல் வெளிநாட்டினரில் இவரும் ஒருவர். மேலும் பல முறை இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.[15] செப்டம்பர் 2018 ரோலிங் ஸ்டோன் என்ற அமெரிக்க மாத இதழின் இந்தியப் பதிப்பின் அட்டைப்படத்தில் ஆடம்ஸ் இடம் பெற்றார். அந்த இதழில் வந்த ஒரு கட்டுரையில், ஆடம்ஸ் "இந்தியாவில் அவர் வாசித்த ஒவ்வொரு நகரத்திலும் அவரது இசை நிகழ்ச்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு ராக் இசைக்கலைஞர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. [17] இவரது "சம்மர் ஆஃப் '69" இந்தியாவில் நீண்ட காலமாக மிகவும் பிரபலமாக இருந்து வருவதாகவும், அது "கிட்டத்தட்ட இப்போது ஒரு இந்தி பாடலாக" இருப்பதாகவும், பெரும்பாலும் ஒரு பாரம்பரிய இந்திய திருமணத்தில் இசைக்க அனுமதிக்கப்படும் ஒரே "மேற்கத்திய" பாடலாகும் என்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[15] 1994 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் ஆடம்ஸ் ஐந்து முறை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தன்னை இந்தியக் கலாச்சாரத்தை நேசிக்கும் ஒருவராகவே அழைத்துக் கொண்டார்.[18] [19]
மனிதாபிமானப் பணிகள்
[தொகு]ஆடம்ஸின் பெரும்பாலான மனிதாபிமான நடவடிக்கைகள் பிரையன் ஆடம்ஸ் அறக்கட்டளை மூலம் செய்யப்படுகின்றன. இந்த அந்த அறக்கட்டளை உலக்மெங்கும் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு கல்வி மற்றும் கற்பித்தல் வாய்ப்புகளை வழக்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.[20] இந்த அறக்கட்டளைக்கு பெரும்பாலும் ஆடம்ஸே நிதியளிக்கிறார்.
பல்வேறு காரணங்களுக்காக நிதி திரட்டவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆடம்ஸ் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பிற செயல்பாடுகளில் பங்கேற்று வருகிறார்.[21] 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தால்[22][23][24] பாதிக்கப்பட்டவர்களுக்காக டொரண்டோவில் நிவாரணநிதி கச்சேரி ஒன்றை நடத்தினார். உலகின் மிகப் பிரபலமான கித்தார் கலைஞர்கள் கத்தரில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்து கையெழுத்திட்டுக் கொடுத்தனர். அதன் ஏலம் மூலம் £1.5மில்லியன் ($2,617,000) வசூலானது. இந்நிதி ஆசியக்கண்டத்தின் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு உதவுவதற்காக அளிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதிப் பணம் தாய்லாந்தில் ஒரு பள்ளிக்கூடம் கட்டுவதற்கும் இலங்கையில் புதிய விளையாட்டு மையம் கட்டுவதற்கு செலவிடப்பட்டது.

ஜனவரி 29, 2006 அன்று, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு, 2005 காஷ்மீர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவும், ஏழைக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்காகவும் நிதி திரட்டுவதற்காக ஷெஹ்சாத் ராயின் ஒரு இசை நிகழ்ச்சியில் இணைந்து, பாக்கித்தானின் கராச்சியில் நிகழ்ச்சி நடத்திய முதல் மேற்கத்திய கலைஞரானார்.[25][26] [27]
விலங்கு உரிமைகள் செயல்பாடு
[தொகு]1992-1994 ஆம் ஆண்டு சுற்றுப்பயணங்களின் போது, ஆடம்ஸ் கிரீன்பீஸ் தலைவர் டேவிட் மெக்டகார்ட்டுடன் தெற்கு பெருங்கடல் திமிங்கல சரணாலயத்திற்காக வெற்றிகரமாக பிரச்சாரம் செய்தார். இந்த சரணாலயம் 1994 ஆம் ஆண்டு சர்வதேச திமிங்கல வேட்டை ஆணையத்தால் உருவாக்கப்பட்டது.[28] [29] [30]
அழிந்து வரும் மலை கொரில்லாக்களின் பாதுகாப்பிற்கான ஒரு தொண்டு நிறுவனமான டயான் ஃபோஸி கொரில்லா என்ற நிறுவனத்துடன் நவம்பர் 10, 2002 அன்று, இலண்டனில் உள்ள அரச கழக ஓபரா ஹவுஸில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் ஆடம்ஸ் பங்கேற்றார். மேலும் பிரையன் மே உடன் சேர்ந்து " ரன் டு யூ " மற்றும் " கிரேஸி லிட்டில் திங் கால்டு லவ் " ஆகிய பாடலையில் மேடையில் பாடினார்.[31]
புகைப்பட ஆர்வம்
[தொகு]ஆடம்ஸ் ஒரு புகைப்படக் கலைஞராகவும் பணியாற்றுகிறார். ஆடம்ஸின் புகைப்படங்கள் பல ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. 2002 ஆம் ஆண்டில், பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த பிற புகைப்படக் கலைஞர்களுடன் சேர்ந்து, ஆடம்ஸ் ஐக்கிய இராச்சியத்தின் இராணி இரண்டாம் எலிசபெத்தின் பொன்விழாவின் போது புகைப்படம் எடுக்க அழைக்கப்பட்டார். இந்த அமர்வின் புகைப்படங்களில் ஒன்று 2004 ஆம் ஆண்டு கனேடிய அஞ்சல் தலையாகவும், மீண்டும் 2005 ஆம் ஆண்டும் பயன்படுத்தப்பட்டது. இராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் இருவரின் மற்றொரு உருவப்படம் இப்போது இலண்டனில் உள்ள தேசிய உருவப்படக் காட்சியகத்தில் உள்ளது.[32]
தனது புகைப்படகளுக்காக ஜெர்மனியில் மூன்று முன்னணி விருதுகளை வென்றார்.[33] அலங்காரம், கலை, இலக்கியம் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் சூ மேகசின் என்ற இதழையும் நிறுவினார்.[34][35] இந்த பத்திரிகை இப்போது ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்படுகிறது.
சொந்த வாழ்க்கை
[தொகு]ஆடம்ஸ் 1989 ஆம் ஆண்டு, 29 வயதாக இருந்தபோது, ஒரு சைவ உணவு உண்பவராக மாறினார். மேலும் இந்த முடிவின் விளைவாக தனக்கு அதிக ஆற்றல் கிடைத்ததாகவும் கூறினார். "நீங்கள் விலங்குகளை நேசித்தால், அவற்றை சாப்பிடாதீர்கள்." என்றும் கூறினார்.[36][37][38]
ஆடம்ஸ் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவில்லை. 1990களில், 12 ஆண்டுகள், அவர் டேனிஷ் மாடல் சிசிலி தாம்சனுடன் உறவில் இருந்தார். வேல்ஸ் இளவரசி டயானாவுடன் தனக்கு ஒரு தொடர்பு இருந்ததாக தாம்சன் கூறினார். ஆனால், தாங்கள் வெறும் நண்பர்கள் என்று ஆடம்ஸ் வலியுறுத்துகிறார். [39]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Connolly, Amanda (September 18, 2018). "Here's why Canadian rock star Bryan Adams wants politicians to change copyright laws". Global News. Archived from the original on September 18, 2018. Retrieved April 22, 2024.
- ↑ Jones, Chris (March 9, 2018). "An exclusive behind the scenes look at the 'Pretty Woman' musical, coming to Chicago". Chicago Tribune இம் மூலத்தில் இருந்து January 20, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240120130547/https://www.chicagotribune.com/entertainment/theater/ct-ae-pretty-woman-premiere-0311-story.html.
- ↑ Krewen, Nick (September 10, 2013). "Brian Chater helped build Canadian music industry". Toronto Star இம் மூலத்தில் இருந்து January 20, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240120130548/https://www.thestar.com/entertainment/music/brian-chater-helped-build-canadian-music-industry/article_d17c6a39-7a7f-5925-b630-ef0c1cf96920.html.
- ↑ Krewen, Nick (March 17, 2022). "Bryan Adams On Family Bonding, Writing a Musical and Releasing Upbeat Tunes in Troubled Times". Toronto Star இம் மூலத்தில் இருந்து January 20, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240120130549/https://www.thestar.com/entertainment/music/bryan-adams-on-family-bonding-writing-a-musical-and-releasing-upbeat-tunes-in-troubled-times/article_884ea9ab-2ed0-56df-b85d-8383e75eb920.html.
- ↑ Mielke, Christine (March 11, 2023). "Most-played artist on Canadian radio in the 2010s Crossword Clue". TryHardGuides இம் மூலத்தில் இருந்து January 20, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240120130549/https://tryhardguides.com/most-played-artist-on-canadian-radio-in-the-2010s-crossword-clue/.
- ↑ Bagish, Corinne (November 20, 2014). "Bryan Adams' iconic album 'Reckless' turns 30". மாசபிள் இம் மூலத்தில் இருந்து January 20, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240120130548/https://mashable.com/archive/bryan-adams-reckless-turns-30.
- ↑ "Greatest of All Time Hot 100 Artists". Billboard. Archived from the original on April 2, 2022. Retrieved January 20, 2024.
- ↑ "Golden Globe Awards for 'Bryan Adams'". கோல்டன் குளோப் விருது. Archived from the original on January 19, 2021. Retrieved November 29, 2020.
- ↑ "Canada's Walk of Fame: Bryan Adams". Canada's Walk of Fame. Archived from the original on August 3, 2008.
- ↑ "Bryan Adams". Canadian Music Hall of Fame. Archived from the original on January 25, 2024. Retrieved January 20, 2024.
- ↑ "Bryan Adams". Governor General's Awards. Archived from the original on January 20, 2024. Retrieved January 20, 2024.
- ↑ Pound, Kara (June 26, 2015). "Canadian singer-songwriter Bryan Adams is a busy man". St. Augustine Record.
- ↑ Jenkins, David (March 30, 2008). "The charmed life of Bryan Adams". த டெயிலி டெலிகிராப் (இலண்டன்) இம் மூலத்தில் இருந்து January 11, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://ghostarchive.org/archive/20220111/https://www.telegraph.co.uk/culture/music/3672213/The-charmed-life-of-Bryan-Adams.html.
- ↑ .
- ↑ 15.0 15.1 15.2 15.3 Westhead, Rick (February 11, 2011). "Bryan Adams' star burns brightly in India". Toronto Star. Archived from the original on April 22, 2024. Retrieved January 20, 2024.
- ↑ "Indians love Bryan Adams because 'Summer of 69' is almost a Hindi song now" இம் மூலத்தில் இருந்து July 10, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220710014208/https://qz.com/india/1422034/why-bryan-adams-songs-are-still-so-popular-in-india/.
- ↑ Singh, Nirmika (September 2018). "Can't Stop This Thing We Started Bryan Adams Is Back In India!". Rolling Stone. Archived from the original on April 22, 2024. Retrieved November 17, 2020 – via Magzter.
- ↑ "As Bryan Adams releases his 15th album, here's a love letter to India's favourite Canadian rocker" இம் மூலத்தில் இருந்து March 14, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220314054811/https://www.firstpost.com/entertainment/as-bryan-adams-releases-his-15th-album-heres-a-love-letter-to-indias-favourite-canadian-rocker-10436661.html.
- ↑ "Bryan Adams: It's always an adventure whenever I've been in India" இம் மூலத்தில் இருந்து June 23, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210623175744/https://indianexpress.com/article/entertainment/music/bryan-adams-india-concert-5400487/.
- ↑ "About Us". The Bryan Adams Foundation. Archived from the original on July 22, 2019. Retrieved August 10, 2019.
- ↑ "1985: Was Live Aid the best rock concert ever?" இம் மூலத்தில் இருந்து December 23, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081223200325/http://news.bbc.co.uk/onthisday/hi/witness/july/13/newsid_3041000/3041494.stm.
- ↑ "Benefit concerts: An abbreviated history". CBC News. January 21, 2010 இம் மூலத்தில் இருந்து April 22, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240422164928/https://www.cbc.ca/news2/arts/things-that-go-pop-blog/2010/01/benefit-concerts-an-abbreviated-history.html.
- ↑ Singh, Gurmukh (January 8, 2005). "Bryan Adams stars in Canadian tsunami concert". ஹிந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து July 24, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210724121424/https://www.hindustantimes.com/world/bryan-adams-stars-in-canadian-tsunami-concert/story-kv6FujZeEVe2iBi6jDoUdO.html.
- ↑ "CBC tsunami benefit raises more than $4 million". CBC News. January 14, 2005. https://www.cbc.ca/news/entertainment/cbc-tsunami-benefit-raises-more-than-4-million-1.547355.
- ↑ "Bryan Adams performs to Karachi". BBC News. January 29, 2006 இம் மூலத்தில் இருந்து October 1, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091001194641/http://news.bbc.co.uk/2/hi/south_asia/4659782.stm.
- ↑ "Bryan Adams hails Karachi concert 'eye-opening', 'amazing'". CBC News. February 1, 2006 இம் மூலத்தில் இருந்து July 7, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220707113237/https://www.cbc.ca/news/entertainment/bryan-adams-hails-karachi-concert-eye-opening-amazing-1.621607.
- ↑ "Bryan Adams in Pakistan for quake relief gig". The New Zealand Herald. January 29, 2006 இம் மூலத்தில் இருந்து April 22, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240422165502/https://www.nzherald.co.nz/world/bryan-adams-in-pakistan-for-quake-relief-gig/DZFXJZIZLA46F6J5AWY6JOXILU/.
- ↑ Heilbron, Alexandra (January 18, 2010). "Bryan Adams to receive humanitarian award". Tribute இம் மூலத்தில் இருந்து April 22, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240422165432/https://www.tribute.ca/news/bryan-adams-to-receive-humanitarian-award/2010/01/18/.
- ↑ "Pitch perfect". Evening Chronicle. June 2, 2006 இம் மூலத்தில் இருந்து April 22, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240422165504/https://www.chroniclelive.co.uk/whats-on/music/pitch-perfect-1536996.
- ↑ "Bryan Adams set to bring highly anticipated tour to the BIC next week". Bournemouth Daily Echo. April 24, 2016 இம் மூலத்தில் இருந்து April 22, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240422165437/https://www.bournemouthecho.co.uk/news/14440643.bryan-adams-set-to-bring-highly-anticipated-tour-to-the-bic-next-week/.
- ↑ "Brian May live at the Royal Opera House, London, UK (Dian Fossey Gorilla Fund) [10.11.2002]". queenconcerts.com. November 10, 2002. Retrieved November 26, 2020.
- ↑ (March 20, 2007). "Bryan Adams attends the official unveiling of the new Queen stamp". செய்திக் குறிப்பு.
- ↑ "Singer Bryan Adams smiles during the LEAD Awards 2006 at the..." Getty Images (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). March 16, 2006. Retrieved January 17, 2020.
- ↑ Drier, Melissa (November 3, 2014). "Bryan Adams Talks Zoo Magazine". Wwd.com (in ஆங்கிலம்). Retrieved January 17, 2020.
- ↑ Drier, Melissa (November 3, 2014). "Bryan Adams Talks Zoo Magazine". Wwd.com (in ஆங்கிலம்). Retrieved January 17, 2020.
- ↑ "Bryan Adams on Animal Rights and Being Vegan". விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள். April 21, 2009.
- ↑ Jacques, Adam (November 9, 2014). "Bryan Adams: The singer-songwriter and photographer on falling asleep at the wheel, his vegan diet and his shots of wounded servicemen". The Independent. https://www.independent.co.uk/news/people/profiles/bryan-adams-the-singersongwriter-and-photographer-on-falling-asleep-at-the-wheel-his-vegan-diet-and-his-shots-of-wounded-servicemen-9847548.html.
- ↑ "Bryan Adams". Viva!.
- ↑ "Bryan Adams Insists He Was Just "Great Friends" With Princess Diana". https://www.eonline.com/news/947091/bryan-adams-insists-he-was-just-great-friends-with-princess-diana.
மேலும் படிக்க
[தொகு]- Goode, Jay. Bryan Adams. Photographed by Al Purdi & Rick Stern. [s.l.]: Monarch Books, 1986. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-921183-01-1