பிரதான் பருவா
பிரதான் பருவா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 22 நவம்பர் 2016 | |
முன்னையவர் | சர்பானந்த சோனாவால் |
தொகுதி | லக்கிம்பூர் |
சட்டமன்ற உறுப்பினர் for தேமாஜி | |
பதவியில் 19 மே 2016 – 22 நவம்பர் 2016 | |
முன்னையவர் | சுமித்ரா பத்திர் |
பின்னவர் | ரனோஜ் பேகு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 30 ஏப்ரல் 1965 சிலாபத்தார், தேமாஜி, அசாம் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | Aஅருனிமா பருவா |
பிள்ளைகள் | 2 |
வாழிடம்(s) | தேமாஜி, அசாம் |
வேலை | சமூக சேவகர் அரசியல்வாதி |
As of 12 திசம்பர், 2016 மூலம்: [1] |
பிரதான் பருவா (Pradan Baruah) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் நவம்பர் 2016 முதல் அசாம் மாநிலம் லக்கிம்பூர் தொகுதியிலிருந்து 16வது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 நவம்பரில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அசாமின் முதல்வராக சர்பானந்தா சோனோவால் பதவி ஏற்றதால் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது. முன்னதாக பருவா தேமாஜி மாவட்டத்தில் உள்ள தேமாஜி சட்டமன்றத் தொகுதியில் (எண் 113) போட்டியிட்டு வெற்றிபெற்று அசாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். முன்னதாக, பருவா இந்தியத் தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்தார். 2016-ல் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மாவுடன் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரசிலிருந்து விலகினார்.[1][2][3][4][5][6] மீண்டும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Winning Lakhimpur seat Assam CM's priority – Times of India". பார்க்கப்பட்ட நாள் 28 September 2016.
- ↑ "9 Rebel Congress Lawmakers in Assam Join BJP". பார்க்கப்பட்ட நாள் 28 September 2016.
- ↑ Trade, TI. "The Assam Tribune Online". Archived from the original on 1 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 September 2016.
- ↑ Trade, TI. "The Assam Tribune Online". Archived from the original on 1 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 September 2016.
- ↑ "Assam election results: Highest and lowest margin, the man behind BJP's historic win". 20 May 2016. பார்க்கப்பட்ட நாள் 28 September 2016.
- ↑ Trade, TI. "The Assam Tribune Online". Archived from the original on 1 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 September 2016.