பால்டிக் நாடுகள்
பால்டிக் நாடுகள் | |
---|---|
![]() | |
நாடுகள் | ![]() ![]() ![]() |
நேர வலயம் |
பால்டிக் நாடுகள் (Baltic states அல்லது Baltic countries) என்பது எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா ஆகிய நாடுகளைக் குறிக்கும் ஒரு புவிசார் அரசியல் சொல் ஆகும். இம்மூன்று நாடுகளும், வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம், ஐரோ வலயம், பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு, ஐரோப்பியப் பேரவை ஆகியவற்றில் உறுப்பினர்களாக உள்ளன. இந்த மூன்று இறைமையுள்ள நாடுகளும், பால்டிக் கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளமையால், இவை பால்டிக் நாடுகள் எனக் குறிப்பிடப்படுகின்றன. வரலாற்றுப் பதிவுகளிலும் இந்நாடுகளைப் பலவிதமான பெயர்களில் பால்டிக் கடலோடு தொடர்புபடுத்தி பால்டிக் குடியரசுகள், பால்டிக் நிலங்கள், பால்டிக்குகள் என குறிப்பிடுகின்றனர்.[1]
இந்த மூன்று பால்டிக் நாடுகளும், உலக வங்கியால் அதிக வருமானமுள்ள நாடுகளாகப் பட்டியல் இட்டுள்ளன. இந்நாடுகள் மிக அதிக மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணைக் கொண்டுள்ளன.[2] இந்த மூன்று நாடுகளும் தங்களுக்குள்ளே நிருவாக ஒத்துழைப்பும், சட்டத்துறை ஒத்துழைப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்பு, ஆற்றல், போக்குவரத்து போன்றவற்றில் கூட்டுறவாக மேலாண்மை செய்து கொள்கின்றன.[3]
வரலாறு
[தொகு]பால்டிக் நாடுகள் என்ற சொல் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, பால்டிக் கடலுக்கு அருகிலுள்ள சுவீடன், டென்மார்க், சில சமயங்களில் செருமானியப் பேரரசு, உருசியப் பேரரசு ஆகிய நாடுகளின் சூழலில் பயன்படுத்தப்பட்டது. நோர்டிக் சங்கங்களின் வருகையுடன், பால்டிக் நாடுகள் என்ற சொல் சுவீடன், டென்மார்க் ஆகியவற்றைக் குறிக்கப் பயன்படுத்தப்படவில்லை.[4][5]
முதலாம் உலகப் போருக்குப் பிறகு (1914–1918) "பால்டிக் நாடுகள்" என்ற சொல் முன்னாள் உருசியப் பேரரசில் இருந்து விடுதலை பெற்ற பால்டிக் கடலால் சூழப்பட்ட நாடுகளைக் குறிக்கத் தொடங்கியது. இந்தச் சொற்றொடரில் எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, பின்லாந்து (பின்லாந்து பின்னர் நோர்டிக் நாடுகளில் ஒன்றாக இணைக்கப்பட்டது) ஆகியவை அடங்கும்.[6][7]
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு (1939–1945), 1991 வரை சோவியத் ஒன்றியத்தால் கைப்பற்றப்பட்ட எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா ஆகிய மூன்று நாடுகளைத் தொகுக்க இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. அதே வேளையில், பின்லாந்து, நோர்டிக்கு நாடுகள் என்ற மற்றொரு புவிசார் அரசியல் குழுவின் உறுப்பினராகக் குறிப்பிடப்படுகிறது.[8][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Baltic Sea region: cultures, politics, societies. Uppsala: Baltic University Press. 2002. p. 32. ISBN 978-91-973579-8-2.
- ↑ "Colombia and Lithuania join the OECD". France 24. 30 May 2018.
- ↑ Republic of Estonia. "Baltic Cooperation". Ministry of Foreign Affairs. Archived from the original on 6 May 2017. Retrieved 8 ஏப்பிரல் 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ l.l.b, charles mayo (1804). a compendious view of universal history (in ஆங்கிலம்). Archived from the original on 13 May 2018. Retrieved 12 May 2018.
- ↑ Mahan, Alfred Thayer (2006). The Life of Nelson (in ஆங்கிலம்). Bexley Publications. ISBN 978-1-4116-7198-0. Archived from the original on 13 May 2018. Retrieved 12 May 2018.
- ↑ 6.0 6.1 Maude, George (2010). Aspects of the Governing of the Finns (in ஆங்கிலம்). Peter Lang. p. 115. ISBN 978-1-4331-0713-9.
Soon Gripenberg called in again, asking why the British had brought in the Baltic States (meaning here, Finland, too) when the simple option of a tripartite agreement between the three Powers would have been possible.
- ↑ Norkus, Zenonas: Post-Communist Transformations in Baltic Countries, p. 8, 154. Springer, 2023. ISBN 978-3-031-39496-6.
- ↑ Bojtár, Endre (1999). Forward to the Past – A Cultural History of the Baltic People. Budapest: Central European University Press. ISBN 978-963-9116-42-9.