பாசடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Moss
புதைப்படிவ காலம்:கார்பனிபெரசுக் காலம்[1]present
தரையிலும் மரங்களின் அடிப்பகுதியிலும் பாசம்Allegheny National Forest, Pennsylvania, USA.
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
Bryophyta

Classes
வேறு பெயர்கள்
  • Musci L.
  • Muscineae Bisch.

குளம் குட்டைகளிலும், நீரோடைகளிலும், பச்சை நிறத்தில் பாசம்(Moss) அல்லது பாசடை படர்ந்திருக்கும். இது ஒருவகைத் தாவரம். பிரையோபைட்டா (Bryophyta) என்னும் தாவரப் பிரிவைச் சேர்ந்தது. உலகில் முதன் முதலில் தோன்றிய உயிரினங்களில் பாசடையும் ஒன்று. உலகின் பெரும்பகுதி நீரில் மூழ்கியிருந்தபோது, மிக எளிய அமைப்புடைய பாசடைகளே வாழ்ந்தன. பல இலட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு நிலப்பகுதி வெளிப்பட்டதும் இத்தாவரங்கள் தோன்றிப் பெருகின.

அமைப்பும் பரவும் முறையும்[தொகு]

பாசங்கள் எளிய அமைப்பு உடையவை. இவற்றுக்கு வேர், தண்டு, இலை, பூ, விதை முதலியவை இல்லை. ஆனால் அவற்றையொத்த சில அமைப்புகள் மட்டும் உண்டு. பாசங்களின் காம்பின் நுனியில் சிறு உறைகள் காணப்படும். அவற்றில் விதைத்தூள்கள் (Spores) உண்டாகும். விதைத் தூள் முற்றியதும் உறை வெடித்துச் சிதறிக் காற்றில் அடித்துச் செல்லப்படும். ஈரமான இடங்களில் விதைத்தூள் வீழ்ந்து, அங்கு முளைத்து வளரும்.

பாசங்களின் வகைகள்[தொகு]

பாசங்களில் சுமார் 16,000 வகைகள் உள்ளன. அவற்றை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை

  • பெரணிப்பாசம்,
  • மரப்பாசம்,
  • சதுப்புப் பாசம்

பெரணிப்பாசம்[தொகு]

பெரணிகளில் மிகச்சிறிய இனம் பெரணிப்பாசம் ஆகும்.

மரப்பாசம்[தொகு]

பாசங்களில் எல்லாம் பெரியது மரப்பாசம். இது 15 செ.மீ வரை உயரமாக வளரும். சில கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு மிக நுண்ணியவை. இவை மிக நெருக்கமாக வளர்ந்து பச்சை மெத்தை விரித்தது போலக் காட்சி தரும்.

சதுப்புப் பாசம்[தொகு]

சதுப்புப் பாசம் நீரைப் பெருமளவில் உறிஞ்சித் தேக்கி வைத்துக்கொள்ளக்கூடியது. இதனால், இதைக் கொண்டு பிற தாவரங்களின் கன்றுகளின் வேரைச் சுற்றிவைத்துப் பல நாள்கள் வரை வாடாமல் காக்கலாம். நீர்ப்பாசம் 30 செ.மீ வரை படர்ந்து வளரும். அயர்லாந்து போன்ற நாடுகளில் நிலக்கரி கிடைப்பதில்லை. எனவே அங்கெல்லாம் சதுப்புப் பாசத்தைக் கொண்டு பீட் (Peat) என்னும் எரிபொருள் தயாரிக்கிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hubers, M.; Kerp, H. (2012). "Oldest known mosses discovered in Mississippian (late Visean) strata of Germany". Geology 40 (8): 755–758. doi:10.1130/G33122.1. 

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://149.152.32.5/Plant_Biology/moss.html பரணிடப்பட்டது 2005-07-07 at the வந்தவழி இயந்திரம்
  2. http://www.britishbryologicalsociety.org.uk/ பரணிடப்பட்டது 2019-05-31 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசடை&oldid=3879111" இலிருந்து மீள்விக்கப்பட்டது