பழுப்பு புள்ளி வங்காள மரத் தவளை
பழுப்பு புள்ளி வங்காள மரத் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ராகோபோரிடே
|
பேரினம்: | பாலிபீடேட்சு
|
இனம்: | பா. பெங்காலென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
பாலிபீடேட்சு பெங்காலென்சிசு புர்காயசுதா மற்றும் பலர், 2019 | |
வேறு பெயர்கள் | |
இராக்கோபோரசு டேனியாடசு |
பாலிபீடேட்சு பெங்காலென்சிசு (Polypedates bengalensis), பழுப்பு புள்ளி வங்காள மரத் தவளை, இராகோபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1]
சொற்பிறப்பியல்
[தொகு]பெங்கலென்சிசு என்ற குறிப்பிட்ட சிற்றினப் பெயர், இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் அமைந்துள்ள சிற்றின வகை வட்டாரத்தைக் குறிக்கிறது.
பரவல்
[தொகு]கிழக்கு இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தச் சிற்றினம், மேற்கு வங்காளத்தில் உள்ள கோர்டனாஹலா, தெற்கு 24 பர்கனா மற்றும் படு, வடக்கு 24 பர்கானா ஆகிய பகுதிகளில் முதலில் விவரிக்கப்பட்டது. இதன் பின்னர் இது இந்தியாவின் ஒடிசாவிலும் பதிவாகியுள்ளது.[2]
விளக்கம்
[தொகு]இத்தவளை நடுத்தர அளவிலானது. ஆண் தவளை 4.8-5.4 செ.மீ. நீளமும், பெண் தவளை 7.2 செ.மீ. நீளமும் உடையது. இது மஞ்சள்-பழுப்பு முதல் பச்சை-பழுப்பு நிறத்திலிருக்கும். இதன் உடல் ஆறு முதல் ஒன்பது அடர் பழுப்பு நிறப் புள்ளிகளைக் கொண்டுள்ளது. விரலிடைச் சவ்வு காணப்படுவதில்லை. முன்கையில் தோல் மடிப்பு இல்லை. ஆண் தவளை ஓரிணை குரல் பைகளைக் கொண்டுள்ளன.[3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Zootaxa".
- ↑ Sethy, P. G. S.; Deuti, Kaushik (2020-09-06). "First Record of the Brown Blotched Bengal Tree Frog ( Polypedates bengalensis ) from Odisha, India" (in en). Records of the Zoological Survey of India 120 (3): 281–284. doi:10.26515/rzsi/v120/i3/2020/150700. பன்னாட்டுத் தர தொடர் எண்:2581-8686. https://recordsofzsi.com/index.php/zsoi/article/view/150700.
- ↑ "‘Visibly elusive’ Bengal tree frog gets recorded as new species" (in en-IN). https://www.thehindu.com/sci-tech/science/visibly-elusive-bengal-tree-frog-gets-recorded-as-new-species/article29877245.ece.
- ↑ "Polypedates bengalensis Purkayastha & Das & Mondal & Mitra & Chaudhuri & Das 2019" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-26.
- ↑ "Species New to Science: [Herpetology • 2019] Polypedates bengalensis • A New Species of Polypedates Tschudi, 1838 (Anura: Rhacophoridae) from West Bengal State, Eastern India". பார்க்கப்பட்ட நாள் 2022-12-26.