பழுப்பு நிறக் காட்டு ஆந்தை
பழுப்பு நிறக் காட்டு ஆந்தை | |
---|---|
![]() | |
சத்தால், உத்தரகண்டம் | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
Phylum: | முதுகுநாணி |
வரிசை: | இசுடிரிங்கிபார்மிசு |
குடும்பம்: | இசுடிரிங்கிடே |
பேரினம்: | Strix |
இனம்: | S. leptogrammica |
இருசொற் பெயரீடு | |
Strix leptogrammica தெம்மினிக், 1832 |
பழுப்பு நிறக் காட்டு ஆந்தை (Brown wood owl, உயிரியல் பெயர்: Strix leptogrammica ) என்பது இந்தியா, வங்காளதேசம், இலங்கை, இந்தோனேசியா, தைவான், தெற்கு சீனாவில் காணப்படும் ஒரு ஆந்தை இனமாகும். பழுப்பு நிற காட்டு ஆந்தை தெற்காசியாவில் இனப்பெருக்கம் செய்து வசிப்பவை ஆகும். இந்த இனம் உண்மையான ஆந்தை (ஸ்ட்ரிகிடே) குடும்பத்தின் ஒரு பகுதியாகும். இந்தக் குடும்பத்தில் பெரும்பாலான ஆந்தைகள் உள்ளன. இது காது கொம்புகளற்ற ஆந்தை வகையைச் சேர்ந்தது. இது ஸ்ட்ரிக்ஸ் பேரினத்தைச் சேர்ந்தது.
பழுப்பு நிற காட்டு ஆந்தை நடுத்தர அளவிலான பெரிய பறவை (45-57 செமீ நீளம்) ஆகும். உடலின் மேல்பகுதி ஒரே மாதிரியாக அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். தோள்பட்டை இறக்கைகளில் மங்கலான வெள்ளைப் புள்ளிகளைக் காணலாம். அடிப்பகுதி பழுப்பு நிற கோடுகளுடன் கூடியது. முக வட்டம் பழுப்பு அல்லது செம்பழுப்பு நிறத்திலும், வெள்ளை நிற விளிம்புகளுடன் இருக்கும். கண்கள் அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். தொண்டையில் தூய வெள்ளை நிறப் பட்டையைக் காணலாம். பாலினங்களிடையே தோற்ற வேறுபாடு குறிப்பிடத்தக்க அளவு இல்லை.

இவை (ஹூ) ஹூ ஹூ ஹூ, அல்லது ஆழ்ந்த கோகே-கோகே-கா-லூஓ அல்லது உரத்த அலறலை வெளிப்படுத்தும். இவற்றின் எச்சரிக்கைக் குரல் பார்க்ட, வாவ்-வாவ் என்றிருக்கும். சில கிளையினங்கள் தனித்தனி குரல்களைக் கொண்டுள்ளதாக அறியப்படுகின்றன; அவை தோற்றத்திலும் இணைவாழிடச் சிறப்பினத்திலும் வேறுபட்டவை, மேலும் அவை வேறுபட்ட இனங்களாக இருக்கலாம்.
இந்த இனம் ஒரு இரவாடியாகும். பொதுவாக இது அடர்ந்த காடுகளில் காணப்படுகிறது. பழுப்பு நிறக் காட்டு ஆந்தையின் உணவில் முக்கியமாக சிறிய பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன போன்றவை உள்ளன.
துணை இனங்கள்[தொகு]
இதில் 14 கிளையினங்கள் உள்ளன. [3]
- இசு. லெப்டோகிராமிகா பார்டெல்சி - பார்டெலின் காட்டு ஆந்தை அல்லது ஜாவன் பழுப்பு நிறக் காட்டு ஆந்தை [4]
- இசு. லெப்டோகிராமிகா காலிகேடா- பார்மோசன் பழுப்பு நிறக் காட்டு ஆந்தை [5]
- இசு. லெப்டோகிராமிகா சாசீனி
- இசு. லெப்டோகிராமிகா இந்திராணீ
- இசு. லெப்டோகிராமிகா லாவோடியானா
- இசு. லெப்டோகிராமிகா லெப்டோகிராமிகா
- இசு. லெப்டோகிராமிகா மைங்காய்
- இசு. லெப்டோகிராமிகா மிர்தா
- இசு. லெப்டோகிராமிகா நியூஅரென்சிசு- இமயமலைக் காட்டு ஆந்தை
- இசு. லெப்டோகிராமிகா நியாசென்சிசு
- இசு. லெப்டோகிராமிகா நிக்டிபாசுமா
- இசு. லெப்டோகிராமிகா ஓக்ரோஜெனிசு- இலங்கைக் காட்டு ஆந்தை [6]
- இசு. லெப்டோகிராமிகா தைசெகுசுட்டி
- இசு. லெப்டோகிராமிகா வேகா
மேற்கோள்கள்[தொகு]
- ↑ BirdLife International (2016). "Strix leptogrammica". IUCN Red List of Threatened Species 2016: e.T22689071A93217052. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22689071A93217052.en. https://www.iucnredlist.org/species/22689071/93217052. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ "Appendices | CITES". https://cites.org/eng/app/appendices.php.
- ↑ Holt, Denver (2017). "Brown Wood-Owl (Strix leptogrammica)". Cornell Lab of Ornithology இம் மூலத்தில் இருந்து 2020-08-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200812155944/https://birdsoftheworld.org/bow/species/brwowl1/cur/introduction.
- ↑ "Javan brown wood owl (Bartel's wood-owl)" இம் மூலத்தில் இருந்து 2022-01-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220101065233/https://zootierliste.de/en/?klasse=2&ordnung=220&familie=22006&art=50906306.
- ↑ "Formosan brown wood owl (Strix leptogrammica caligata)" இம் மூலத்தில் இருந்து 2022-01-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220101065235/https://zootierliste.de/en/?klasse=2&ordnung=220&familie=22006&art=55009111.
- ↑ "Sri Lankan wood owl (Strix leptogrammica ochrogenys)" இம் மூலத்தில் இருந்து 2022-01-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220101065233/https://zootierliste.de/en/?klasse=2&ordnung=220&familie=22006&art=2150205.
வெளி இணைப்புகள்[தொகு]
பொதுவகத்தில் பழுப்பு நிறக் காட்டு ஆந்தை தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.