பழுப்புக் கீச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பழுப்புக் கீச்சான்
ஒரு பழுப்புக் கீச்சான், ஏற்காடு
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
Phylum: முதுகுநாணி
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: கீச்சான்
பேரினம்: உலானியசு
இனம்: L. cristatus
இருசொற் பெயரீடு
Lanius cristatus
(லின்னேயசு, 1758)
துணையினங்களின் வாழ்விடம்
வேறு பெயர்கள்

Otomela cristata

பழுப்புக் கீச்சான் (ஆங்கிலப் பெயர்: brown shrike, உயிரியல் பெயர்: Lanius cristatus) என்பது ஒரு வகைக் கீச்சான் குடும்பப் பறவை ஆகும். ஆண் பறவை 27-34 கிராமும், பெண் பறவை 28-37 கிராமும் இருக்கும்.

மற்ற கீச்சான் பறவைகளைப் போலவே இதன் கண்களின் மேல் ஒரு கருப்புக் கோடு போடப்பட்டதைப்போல் உள்ளது. இதன் காரணமாக முகமூடி அணிந்ததைப்போல் உள்ளது. இந்த முகமூடி போன்ற கருப்பு நிறம் பளபளப்பாக இருக்கும். இந்தக் கருப்பு நிறத்திற்கு மேல் வெள்ளை நிறப் புருவம் காணப்படுகிறது. இது பொதுவாகப் புதர்ப் பகுதிகளில் காணப்படும். முட்புதர்களின் மேல் தன் கால்களால் இருகப் பற்றியபடி இரையைத் தேடியவாறு உட்கார்ந்து இருக்கும். இவை ஏற்காட்டிற்கு வலசை வருகின்றன.

துணையினங்கள்[தொகு]

இதில் நான்கு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]

  • கிரிஸ்டேடஸ் பழுப்புக் கீச்சான் L. c. cristatus Linnaeus, 1758 – மத்திய, கிழக்கு சைபீரியா மற்றும் வடக்கு மங்கோலியா, இந்தியா முதல் மலாய் தீபகற்பம் வரை
  • L. c. confusus Stegmann, 1929 – கிழக்கு மங்கோலியா, தென்கிழக்கு உருசியா மற்றும் வடகிழக்கு சீனா மலாய் தீபகற்பம் மற்றும் சுமத்ரா
  • L. c. lucionensis Linnaeus, 1766 – கிழக்கு சீனா, கொரிய தீபகற்பம் மற்றும் தெற்கு ஜப்பான் தென்கிழக்கு சீனா, பிலிப்பைன்ஸ், போர்னியோ மற்றும் சுலவேசி
  • L. c. superciliosus Latham, 1801 – சாகலின் தீவு (தென்கிழக்கு உருசியா) மற்றும் வடக்கு, மத்திய யப்பான் தென்கிழக்கு சீனா மற்றும் கிழக்கு இந்தோசீனா முதல் சிறு சுண்டாத் தீவுகள் வரை

விளக்கம்[தொகு]

இளம்பறவை, கொல்கத்தா

இதன் மேல்புறம் பழுப்பு நிறமாகக் காணப்படும். கருப்பு முகமூடியானது குளிர்காலத்தில் வெளிரிக் காணப்படும். தலை ஆண் பறவைக்கு அடர்ந்த பழுப்பு நிறத்திலும், பெண் பறவைக்கு சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும் காணப்படும். இதன் இறக்கைகள் பழுப்பு நிறத்தில் இருக்கும். இவற்றின் வாலில் சிறிய பிளவு காணப்படும்.[3]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lanius cristatus
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழுப்புக்_கீச்சான்&oldid=3797813" இருந்து மீள்விக்கப்பட்டது