உள்ளடக்கத்துக்குச் செல்

பல்கலைக்கழக ஓவல், துனெடின்

ஆள்கூறுகள்: 45°51′57″S 170°31′31″E / 45.86583°S 170.52528°E / -45.86583; 170.52528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்கலைக்கழக ஓவல்
"பல்கலை ஓவல்"

பல்கலைக்கழக ஓவல் மைதானமும் பார்வையாளர் அரங்கமும் - 2009இல் நியூசிலாந்து, பாக்கித்தான் அணிகளுக்கிடையேயான தேர்வுப் போட்டியின்போது
இடம் துனெடின், நியூசிலாந்து
அமைவு 45°51′57″S 170°31′31″E / 45.86583°S 170.52528°E / -45.86583; 170.52528
எழும்பச்செயல் ஆரம்பம் 1913
திறவு 1920
சீர்படுத்தது 1979
பரவு 2004, 2012
உரிமையாளர் துனெடின் நகர மன்றம்
தரை புற்றரை
முன்னாள் பெயர்(கள்) லோகன் பூங்கா நீள்வட்டம்
குத்தகை அணி(கள்) ஒடாகோ துடுப்பாட்டச் சங்கம்
ஒடாகோ வோல்ட்சு
ஒடாகோ பல்கலைக்கழக இரக்பி காற்பந்துச் சங்கம்
அமரக்கூடிய பேர் 3500 (தற்காலிகமாக 6000 வரை உயர்த்தலாம்)
2007 பெப்ரவரியில் ஒடாகோவிற்கும் வடக்கு மாவட்டங்களுக்குமான ஆட்டம்.

பல்கலைக்கழக ஓவல் (University Oval) நியூசிலாந்து நாட்டு துனெடின் நகர லோகன் பூங்காவில் அமைந்துள்ள விளையாட்டு மைதானமாகும். இதன் உரிமையாளராக துனெடின் நகர மன்றம் உள்ளது. முன்னதாக ஒடாகோ பல்கலைக்கழகத்திற்கு சொந்தமாகவிருந்த இதன் உரிமை 2000களில் மேம்படுத்தப்பட்டபோது நகர மன்றத்திற்கு மாற்றியளிக்கப்பட்டது.

இந்த விளையாட்டுக் களம் ஒடாகோ துடுப்பாட்டச் சங்கத்திற்கும் ஒடாகோ பல்கலைக்கழக இரக்பி காற்பந்தாட்டச் சங்கத்திற்கும் பொதுவான தாயகமாக உள்ளது. ஐலாண்டர் இரக்பி குழுவின் பயிற்சி மைதானமாகவும் விளங்குகின்றது. நடுவர் முடிவு மீளாய்வு முறைமை கீழ் ஆடப்பட்ட முதல் துடுப்பாட்டப் போட்டி இங்குதான் அரங்கேறியது; நியூசிலாந்திற்கும் பாக்கித்தானிற்கும் இடையேயான மூன்றாவது தேர்வுப் போட்டியில் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டது.[1][2]

தேர்வுப் போட்டிகள்

[தொகு]
அணி (ஏ) அணி (பி) வாகையாளர் வெற்றி வீச்சு ஆண்டு
 நியூசிலாந்து  வங்காளதேசம்  நியூசிலாந்து 9 இலக்குகளில் 2008
 நியூசிலாந்து  மேற்கிந்தியத் தீவுகள் சமன் 2008
 நியூசிலாந்து  பாக்கித்தான்  நியூசிலாந்து 32 ஓட்டங்களில் 2009
 நியூசிலாந்து  தென்னாப்பிரிக்கா சமன் 2012
 நியூசிலாந்து  இங்கிலாந்து சமன் 2013
 நியூசிலாந்து  மேற்கிந்தியத் தீவுகள் சமன் 2013
 நியூசிலாந்து  ஆத்திரேலியா 2016

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்

[தொகு]
அணி (ஏ) அணி (பி) வாகையாளர் வெற்றி வீச்சு ஆண்டு
 நியூசிலாந்து  வங்காளதேசம்  நியூசிலாந்து 5 இலக்குகளில் 2010
 நியூசிலாந்து  சிம்பாப்வே  நியூசிலாந்து 90 ஓட்டங்களில் 2012
 நியூசிலாந்து  இலங்கை 2014
 நியூசிலாந்து  இலங்கை 2014
 நியூசிலாந்து  இசுக்காட்லாந்து 2015
 ஆப்கானித்தான்  இலங்கை 2014
 ஆப்கானித்தான்  இசுக்காட்லாந்து 2014

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Decision Review System set for debut". Cricketnext.in. 23 Nov 2009. Archived from the original on 2009-11-26. பார்க்கப்பட்ட நாள் 2010-02-18.
  2. "Official debut for enhanced review system". Cricinfo. 23 Nov 2009. பார்க்கப்பட்ட நாள் 2010-02-18.

வெளி இணைப்புகள்

[தொகு]