பலவான் காகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பலவான் காகம்
நேச்சுரலிசு பல்லுயிர் மையத்தில் பதனப்படுத்தப்பட்ட மாதிரி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
கோர்விடே
பேரினம்:
காகம் (வகை)
இனம்:
C. pusillus
இருசொற் பெயரீடு
Corvus pusillus
துவீடேல், 1878

பலவான் காகம் (Palawan crow)(கோர்வசு புசிலசு) என்பது கோர்விடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பசாரின் பறவை சிற்றினம் ஆகும். இது கோர்வசு பேரினத்தைச் சேர்ந்தது. இது முன்பு மெலிந்த அலகுக் காகத்தின் (கோர்வசு என்கா) துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் தொகுதி வரலாற்றுச் சான்றுகள் இவை தனித்தனி சிற்றினங்கள் எனத் தெரிவிக்கின்றன. மேலும் பலவான் காகம் பன்னாட்டு பறவையியலாளர்கள் சங்கத்தால் தனிச் சிற்றினமாகப் பிரிக்கப்பட்டது.[1][2]

இது பிலிப்பீன்சு தீவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. இது மிண்டோரோ, பலவான் மற்றும் கலாமியன் தீவுகளில் காணப்படுகிறது.[3] இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-29.
  2. Allen (2020). Birds of the Philippines. http://worldcat.org/oclc/1286814135. 
  3. (in en) IOC World Bird List 11.2. doi:10.14344/ioc.ml.11.2. http://www.worldbirdnames.org/ioc-lists/crossref. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலவான்_காகம்&oldid=3793389" இலிருந்து மீள்விக்கப்பட்டது