பரங்கி நாற்காலி வாகனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரங்கி நாற்காலி வாகனம்
பரங்கி நாற்காலி வாகனம் ஓவியம்
பரங்கி நாற்காலி வாகனம் ஓவியம்
உரிய கடவுள்: பெருமாள், ஆண்டாள்
வகைகள்: பரங்கி நாற்காலி வாகனம்,
இரட்டை பரங்கி நாற்காலி வாகனம்

பரங்கி நாற்காலி வாகனம் என்பது வைணவ கோயில்கள் சிலவற்றில் இறைவன் உலா வருவதற்கு பயன்படுத்தும் வாகனமாகும்.[1] இந்த வாகனம் 17ம் நூற்றாண்டில் தஞ்சாவூர் நாயக்கர்கள் பயன்படுத்திய பெரிய சதுர வடிவிலான பரங்கி நாற்காலியை போன்று செய்யப்பட்டது.

கோயில்களில் உற்சவ நாட்கள்[தொகு]

  • நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா திருக்குறுங்குடி நம்பி கோவிலில் பங்குனி பிரமோற்சவம் திருவிழா முதல் நாள் இரவில் பெருமாள் பரங்கி நாற்காலியில் உலா வருகிறார்.
  • கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணித் திருவிழா இரண்டாம் நாள் இரவு பரங்கி நாற்காலி வாகனத்தில் அய்யா வைகுண்டர் உலா வருகிறார்.‌

இவற்றையும் காண்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hindu Gods Vaganas drawings
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆதாரங்கள்[தொகு]

  1. புத்தகம்:தமிழகக் கோயில் வாகனங்கள். ஆசிரியர்:சக்கரவர்த்தி, பிரதீப் - பக்கம் 81 ஆவண இருப்பிடம் டாக்டர் உ.வே.சா. நூலகம்
  2. https://www.maalaimalar.com/amp/news/district/flag-hoisting-of-perungulam-mayakkutha-perumal-temple-585208
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரங்கி_நாற்காலி_வாகனம்&oldid=3711882" இலிருந்து மீள்விக்கப்பட்டது