பரங்கி நாற்காலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரங்கி நாற்காலி என்பது கால்களை மடித்து உட்கார்ந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட நாற்காலி ஆகும். 17ம் நூற்றாண்டின் தஞ்சாவூர் நாயக்கர்கள் இந்த வகை நாற்காலிகளை பயன்படுத்தி வந்துள்ளனர். [1]

சொல்லிலக்கணம்[தொகு]

பரங்கி என்னும் வார்த்தை பிரெஞ்ச் என்பதன் மருவாகக் கருதப்படுகிறது. பிரெஞ்சுக்காரர்களை பரங்கியர்கள் என அழைத்துள்ளனர். இந்த நாற்காலிகள் மனிதர்கள் தங்கள் கால்களை மடித்து அமர்ந்து கொள்ளும் வகையில், பெரிய அளவிலான சதுர வடிவில் அமைக்கப்படுகிறது.

பரங்கி நாற்காலி வாகனம்[தொகு]

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வைணவ தலங்கள் சிலவற்றில் பரங்கி நாற்காலி வாகனம் உள்ளது. [1] இதில் திருமால், ஆண்டாள் ஆகிய இறைகள் அமர்ந்து உலா செல்கின்றனர்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 புத்தகம்:தமிழகக் கோயில் வாகனங்கள். ஆசிரியர்:சக்கரவர்த்தி, பிரதீப் - பக்கம் 81 ஆவண இருப்பிடம் டாக்டர் உ.வே.சா. நூலகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரங்கி_நாற்காலி&oldid=3711884" இலிருந்து மீள்விக்கப்பட்டது