பயன் (கான்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பயன்
ஆட்சிக்காலம்1302-1309
முன்னையவர்கோச்சு
பின்னையவர்சசிபுகா
பிறப்புதெரியவில்லை
இறப்பு1309
மதம்தெங்கிரி மதம்

பயன் (அல்லது புயன்; நையன்) (கசாக்கு: Баян хан) (ஆட்சி. 1302-1309) என்பவர் வெள்ளை நாடோடிக் கூட்டத்தின் மிகப்பிரபலமான கான்களில் ஒருவராவார். மங்கோலிய மொழியில் பயன் என்றால் "செழிப்புமிக்க" மற்றும் புயன் என்றால் "நற்செயல்" (மதத்தில் குறிப்பிடப்படுவது போல) என்று பொருள்.

தங்க நாடோடிக் கூட்டத்தின் பிரிவுகளான வெள்ளை மற்றும் நீல நாடோடிக் கூட்டங்கள் ஆகிய அனைத்தும் மங்கோலியர்களால் ஆளப்பட்டன. இந்த நாடுகளின் உயர் வகுப்பினராக மங்கோலியர்கள் இருந்தனர். குடிமக்களாக கசக் மக்கள் இருந்தனர். பயன் கான் பதவிக்கு வந்தபோது அவரது உறவினர்கள் பயனுக்கு எதிராக எதிர்ப்புக் காட்டினர். கய்டு மற்றும் துவாவால் ஆதரிக்கப்பட்ட பயனின் உறவினரான கோப்லெக் இவரை எதிர்த்தார். தன்னை எதிர்த்த உறவினரான கோப்லெக் மற்றும் கய்டுவின் படைகளுக்கு எதிராகப் பலமுறை பயன் போரிட்டு உள்ளார். தங்க நாடோடிக் கூட்டம் மற்றும் நீல நாடோடிக் கூட்டத்தின் ஆட்சியாளரான தோக்தாவிடம் பயன் உதவி கோரினார். இச்சூழ்நிலையைக் கண்டு தோக்தா கோபமடைந்தார். எதிர்ப்பாளர்களுக்கு உதவி செய்யக் கூடாது என கய்டுவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

யுவான் அரசமரபின் தெமுர் கானுடன் கூட்டணி வைக்கப் பயன் முயற்சி செய்தார். மங்கோலியப் பேரரசின் ராஜாதிராஜனாகிய அவருடன், சகதாயி கானரசு மற்றும் கய்டு ஆகியோருக்கு எதிராக இக்கூட்டணியை ஏற்படுத்த அவர் முயற்சித்தார். எனினும் பயன் மற்றும் தெமுர் கான் ஆகிய இருவரின் அமைவிடங்களுக்கு இடைப்பட்ட தொலைவானது இவர்களின் கூட்டணியைப் பயனற்றதாக்கியது.[1] இறுதியில் பயன் தனது எதிரிகளைத் தோற்கடித்தார். 1309 ஆம் ஆண்டுவரை தனது நாடோடிக் கூட்டத்தை ஆட்சி புரிந்தார். பயனின் இராணுவத்தில் சிர்காசியர்கள், உருசியர்கள் மற்றும் அங்கேரியர்கள் (பஷ்கிர்களாக இருந்திருக்கலாம்) ஆகியோர் பணியாற்றியதாகக் கூறப்பட்டது.[2]

1880 இல் எழுதிய ஹோவொர்த்[3], காசுனி மற்றும் பாமியான் ஆகிய இடங்களைத் தனது இருப்பிடமாகக் கோப்லெக் கொண்டிருந்திருக்கலாம் என்று கருதுகிறார். ஹுலாகுவுக்குச் சில துருப்புகளைப் பெர்கே கடன் கொடுத்ததாக ஹோவொர்த் கூறுகிறார். இருவருக்குமிடையில் பகை ஏற்பட்டபோது அத்துருப்புகளில் சிலர் கிழக்கு நோக்கிச் சென்றனர். தற்போதைய ஆப்கானித்தான் அமைந்திருக்கும் பகுதியில் ஒரு புதிய சமஸ்தானத்தை நிறுவினர். தொலை தூரத்தில் இருந்த தங்க நாடோடிக் கூட்டத்தின் குடிமக்கள் தாங்கள் எனக் கூறிக் கொண்டனர்.

பரம்பரை[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. René Grousset-The Empire of the Steppes: A History of Central Asia, p. 211.
  2. Encyclopedia of Mongol Empire, see White Horde.
  3. Howorth, History of the Mongols, part 2, pp. 114, 219, 220.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயன்_(கான்)&oldid=3164414" இலிருந்து மீள்விக்கப்பட்டது