கோச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோச்சு
ஆட்சிக்காலம்1280-1302
முன்னையவர்குன் குரான்
பின்னையவர்பயன்
பிறப்புதெரியவில்லை
இறப்பு1302
மரபுபோர்சிசின்
மதம்தெங்கிரி மதம்

கோச்சு என்பவர் வெள்ளை நாடோடிக் கூட்டத்தின் கான் ஆவார். இவர் 1280 முதல் 1302 வரை ஆட்சி செய்தார். இவர் சர்தக்தய் மற்றும் கொங்கிராடு இன கியூஜியன் ஆகியோரின் மூத்த மகன் ஆவார். ஓர்டா கானின் பேரன் ஆவார்.

கோச்சுவிடம் ஏராளமான மக்கள் இருந்ததாக மார்க்கோபோலோ கூறியுள்ளார். ஆனால் இவர் யாருடனும் போர் புரியவில்லை. இவரது மக்கள் மிகுந்த அமைதியுடன் வாழ்ந்து வந்தனர். 1280 ஆம் ஆண்டு முதல் கோச்சு குப்லாய் கானுக்கு நட்பு ரீதியிலான கடிதங்களை அனுப்பினார். கூட்டணி வைத்துக் கொள்வதற்காக பெருமளவிலான தானியங்கள் மற்றும் சீனாவின் மற்ற முக்கியமான பொருட்களை யுவான் அரசமரபு கோச்சுவுக்குக் கொடுத்தது. ரசீத்தல்தீன் அமாதனியின் கூற்றுப்படி தனது உறவினர்களான பாரசீகத்திலிருந்த ஈல்கானரசுடன் கோச்சு மிகுந்த நட்பு ரீதியிலான உறவு முறையைப் பின்பற்றினார். ரசீத்தல்தீன் அமாதனியின் கூற்றுப்படி கோச்சு, கய்டு பக்கம் இணைந்தார்.

காசுனி மற்றும் பாமியான் ஆகிய பகுதிகளைக் கோச்சு வைத்திருந்தார். இப்பகுதிகளுக்கு சகதாயி கானரசு அல்லது ஈல்கான் ராஜாதி ராஜனாக இருந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.[1] 1269 ஆம் ஆண்டு ஈரானைத் தாக்குவதற்கு முன்னர் அப்பகுதிகளை விட்டுவிடுமாறு சகதை கானரசின் ஆட்சியாளரான பரக் கேட்டுக்கொண்ட போது கோச்சு விட்டுக் கொடுக்க மறுத்தார். தன்னுடைய கூட்டணி யாருடன் என்பதை காட்டினார்.

கோச்சு செல்வாக்கு மிகுந்த கானாக இருந்தார். நடு ஆசியாவில் குப்லாய்க்கு ஆதரவாகச் செயல்பட்ட போர்சிசின் இளவரசர்கள் பிறகு அவருக்கு எதிராக கிளர்ந்து எழுந்த போது ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டனர். அவர்கள் கோச்சுவிடம் முறையிட்டனர். அண்ணளவாக 1302 ஆம் ஆண்டு உடல் பருமன் காரணமாகக் கோச்சு உயிரிழந்தார்.

பரம்பரை[தொகு]

  • சர்தக்தய்
  • கோச்சு

உசாத்துணை[தொகு]

  1. Stanley Lane-Poole-The Mohammedan Dynasties, p. 227.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோச்சு&oldid=3539582" இருந்து மீள்விக்கப்பட்டது