பயனர் பேச்சு:Pallavarayar

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Pallavarayar, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--சோடாபாட்டில்உரையாடுக 07:19, 7 பெப்ரவரி 2012 (UTC)

வேண்டுகோள்[தொகு]

வணக்கம், தாங்கள் பக்தி நாதம் என இரு கட்டுரைகளை உருவாக்கியுள்ளீர்கள் .. அருள்கூர்ந்து தமிழ் தலைப்பிலுள்ள கட்டுரையை மட்டும் மேம்படுத்துங்கள். ஆங்கிலத் தலைப்புக் கட்டுரை நீக்கப்பட்டுவிடும்..விக்கிப்பீடியா கட்டுரைகளின் தலைப்பு தமிழில் இருக்க வேண்டும். பார்க்க விக்கிப்பீடியா:புதிய பக்கத்தை உருவாக்குதல் நன்றி...--shanmugam (பேச்சு) 08:25, 12 மார்ச் 2012 (UTC) .

பல்லவராயர் ... உங்களைப் பற்றிய தகவல்களை உங்களின் பயனர் பக்கத்தில் தரவும். உங்களைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்ள இது உதவும் - --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:25, 12 மார்ச் 2012 (UTC)

பதில்கள்[தொகு]

மிக்க நன்றி. விதிமுறைகள் சரியாக தெரியாமல் உருவாக்கி விட்டேன். பயனர் பக்கத்தில் என்னைப் பற்றி விபரங்களைச் சோ்த்துள்ளேன். --Pallavarayar (பேச்சு) 11:07, 15 மார்ச் 2012 (UTC)

பக்திநாதம்[தொகு]

அருள் கூர்ந்து இந்த கட்டுரையின் இணைப்பைத் தொடர்பில்லா கட்டுரைகளில் சேர்ப்பதைத் தவிருங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 10:22, 12 மார்ச் 2012 (UTC)

பக்தி நாதம் என்ற இதழ் மின்னிதழ் என்று கட்டுரையில் தந்திருக்கிறீர்கள். அந்த இதழுக்கான இணைய இணைப்பையும் சேருங்கள்.--Kanags \உரையாடுக 11:46, 12 மார்ச் 2012 (UTC)

வணக்கம் அருண், உங்களைப் பற்றி நீங்களே கட்டுரை எழுத முடியாது. இது விளம்பரமாகக் கருதப்படும். உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் மட்டும் தந்தால் போதும். மேலே நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் தரவில்லை.--Kanags \உரையாடுக 07:14, 14 மார்ச் 2012 (UTC)

பதில்கள்[தொகு]

மிக்க நன்றி. இணைப்புகள் சேர்க்கப்பட்டுவிட்டன. தங்களது ஆலோசனைகளை மனதில் கொண்டு வருங்காலத்தில் கவனமாக விக்கிபீடியாவில் கட்டுரைகள் எழுத முயல்கிறேன்.--Pallavarayar (பேச்சு) 11:05, 15 மார்ச் 2012 (UTC)

இன்னொரு வேண்டுகோள்[தொகு]

பல்லவராயர்...
பக்திநாதம் கட்டுரையில் உங்களின் பெயரிலிருந்து உங்களின் பயனர் பக்கத்திற்கு இணைப்பு கொடுத்துள்ளீர்கள். இது விக்கிப்பீடியாவின் விதிமுறைக்கு உட்பட்டதல்ல. படித்துப் பார்க்க: விக்கிப்பீடியா:வெளியிணைப்புகள்

நான் நேற்று அந்த இணைப்பினை 'அகற்றல்' செய்தேன். நீங்கள் மீண்டும் இன்று இணைப்பு கொடுத்துள்ளீர்கள். அந்த இணைப்பினை நீக்கிவிடுங்கள். இங்கு சக பயனர் ஏதேனும் மாற்றம் செய்திருந்தால் அதற்கு காரணம் கண்டிப்பாக இருக்கும். அந்த மாற்றத்தின் மீது உங்களுக்கு உடன்பாடு இல்லையென்றால்.... அக்கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் அல்லது அப்பயனரின் பேச்சுப் பக்கத்தில் தெரிவியுங்கள்.
விக்கிப்பீடியா என்பது ஒரு ஊடகம் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இது ஒரு கலைக் களஞ்சியம். இங்கு கட்டுரைகளில் எவரையும், எதையும் முன்னிலைப்படுத்தி எழுதுவதை தவிர்க்கவேண்டும். நாங்கள் இங்கு தங்களுக்கு தரும் தகவல்களை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். தமிழ் விக்கியின் முன்னேற்றத்திற்காகவே நாம் அனைவரும் செயல்படுகிறோம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:21, 15 மார்ச் 2012 (UTC)


பதில்கள்[தொகு]

நன்றி நண்பர்களே. நான் விக்கிபீடியாவுக்கு புதிது என்பதால் விதிமுறைகள் சரிவர தெரியவில்லை. சில பயனர்கள் காரணம் சொல்லாமல் மாற்றம் செய்வதால் மறுபடி மறுபடி நான் அதே பதிவை செய்கிறேன். அது மீண்டும் மாற்றம் செய்யப்படுவது கண்டு குழம்பிவிடுகிறேன். சிலர் சரியான காரணத்தைக் கூறி மாற்றம் செய்கின்றனர். அப்போது என்னால் தவறை உணர்ந்து சரி செய்துகொள்ள முடிகிறது. Kanags மற்றும் Selvasivagurunathan ஆகியோர் தெளிவாக வேண்டுகோள் விடுக்கிறார்கள். Selvasivagurunathan அவர்கள் விதிமுறைகளை தெரிந்துகொள்ள சரியான இணைப்புகளையும் வழங்குகிறார். இது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. மிக்க நன்றி.--Pallavarayar (பேச்சு) 11:00, 15 மார்ச் 2012 (UTC)

புரிந்து கொண்டமைக்கு நன்றி! பயனுள்ள கட்டுரைகள் பலவற்றை இங்கு தந்து, தமிழுக்கும் தகவல் களஞ்சிய உலகத்திற்கும் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களின் கட்டுரைகளில்... தேவைப்படும் திருத்தங்களையும் முன்னேற்றங்களையும் பிற பயனர்கள் செய்வார்கள். பிற கட்டுரைகளை நீங்களும் முறைப்படி திருத்தலாம். நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:57, 16 மார்ச் 2012 (UTC)

இணைப்பு[தொகு]

நீங்கள் தந்துள்ள பக்திநாதம் மின்னிதழின் இணைய இணைப்பு அறுந்துள்ளது. சரியான முகவரியைத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 10:07, 16 மார்ச் 2012 (UTC)

மாற்றத்திற்கான முகவரி[தொகு]

வணக்கம், தமிழ் விக்கியில் உள்ள கட்டுரைகள் குறைந்த பட்சம் மூன்று வரிகள் ஆவது இருக்க வேண்டும்.. எனவே மாற்றத்திற்கான முகவரி கட்டுரையில் கூடுதல் உள்ளடக்கத்தை உங்களால் இயன்றவரை சேர்த்து விட்டு {{speed-delete-on|{{CURRENTDAY}}-{{CURRENTMONTHNAME}}-{{CURRENTYEAR}}}} எனும் வார்ப்புருவை நீக்கி விடுங்கள்.. நன்றி--shanmugam (பேச்சு) 15:26, 16 மார்ச் 2012 (UTC)

kangs பேச்சுப் பக்கத்திற்கான பதில்[தொகு]

வணக்கம் Pallavarayar, நீங்கள் kangs பேச்சுப் பக்கத்தில் கூறியிருந்ததை பார்த்தேன்.. அந்த புத்தகத்தில் இருந்து எடுத்திருந்தாலும் அப்புத்தகம் இந்திய காப்புரிமை சட்டப்படி 60 வருடத்திற்கு முந்தையதாக இருக்க வேண்டும், மேலும் அப்புத்தகத்தின் காப்புரிமை வேறு எவரிடமும் இருக்கக் கூடாது..அப்படி இருந்தால் மட்டுமே அப்புத்தகத்தில் உள்ளவற்றை நாம் உபயோகிக்க இயலும். மற்றொரு குறிப்பு: மற்றொருவர் வலைத்தளத்தில் எழுதியதை அப்படியே நகலெடுத்து ( வரலாற்று உண்மை எனினும் ) ஓட்ட வேண்டாம்.. தங்களுடைய சொந்த நடையில் எழுத வேண்டும்.. நன்றி--shanmugam (பேச்சு) 15:45, 7 ஏப்ரல் 2012 (UTC)

kangs பேச்சுப் பக்கத்திற்கான Pallavarayar (பேச்சு) 05:31, 9 ஏப்ரல் 2012 (UTC) பதில்[தொகு]

நன்றி சண்முகம் அவர்களே. இதே போல பதிவுகளை நீக்கும் போதும் திருத்தம் செய்யும் போதும் விதிமீறல் குறித்தான தகவல்களை தெளிவாகக் கூறினால் வருங்காலத்தில் அதே தவறுகள் செய்வது தவிர்க்கப்படும். ஏனென்றால் அனைவருக்கும் விக்கிபீடியாவின் விதிகள் முழுவதுமாக தெரிந்திருப்பதில்லை. தங்களது வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி. Pallavarayar (பேச்சு) 05:31, 9 ஏப்ரல் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Pallavarayar&oldid=1083091" இருந்து மீள்விக்கப்பட்டது