பயனர் பேச்சு:Arasut
வாருங்கள், Arasut!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
- பங்களிப்பாளர் கவனத்திற்கு
- தொகுத்தல் உதவிப் பக்கம்
- விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி
- விக்கிப்பீடியா:பயனர் பக்கம்
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--ரவி 15:38, 13 நவம்பர் 2009 (UTC)
வேண்டுகோள்
[தொகு]தயவு செய்து நேரடியாக விக்கியில் இருந்து மற்ற பங்களிப்பாளர்களுடன் ஒருங்கிணைந்து பங்களிக்க முன்வாருங்கள். ஏற்கனவே விக்கியில் உள்ள சில கட்டுரைகளை நீங்கள் தமிழாக்குவதால் உங்கள் உழைப்பும் வீணாகக் கூடும். பார்க்க: விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கம். நன்றி.--ரவி 15:38, 13 நவம்பர் 2009 (UTC)
வேண்டுகோள்
[தொகு]Arasut வணக்கம்! உங்கள் பங்களிப்புகள் பல துறைகளைச் சார்ந்து உள்ளன; ஆங்கில விக்கியிலிருந்து கூகுள் மொழிபெயர்ப்புக் கருவியின் துணைக்கொண்டு செய்துள்ளதாகக் கூறியுள்ளீர்கள். இரண்டு விடயங்கள்:
- அதை எவ்விதம் செய்வது? சற்று விளக்குவீர்களா? (ஏனெனில், நான் பயன்படுத்திப் பார்த்த போது மிகக்குறைவான அளவே மொழிபெயர்ப்பு நிகழ்கிறது)
- ஆங்கில விக்கியில் எவ்வளவு தான் தரமான பக்கம் இருந்தாலும், அதைத் தமிழாக்கியதோடு நம் பணி நின்று விடுவதில்லை. தமிழ்ப் பயனர்களுக்கு உகந்த வகையில் திருத்தங்களும் செப்பனிடுதலும் தேவை அல்லவா? மேலும், தொடர்ந்து இயக்கத்திலிருந்து புதுப்பித்தல் (active updation) அவசியம் அல்லவா?
நன்றி! --பரிதிமதி 18:34, 18 நவம்பர் 2009 (இந்திய நேரம்)
நீங்கள் காற்றுச்சீரமைப்பி(Air conditioner) என்ற தலைப்பில் மொழிபெயர்த்த கட்டுரை தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைத் தலைப்பிடும் நடைமுறைக்கேற்ப காற்றுச்சீரமைப்பி என்ற தலைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது. சிறந்த மொழிபெயர்ப்பு, நன்றி.--Kanags \பேச்சு 00:17, 25 டிசம்பர் 2009 (UTC)
உங்கள் கட்டுரைகளை மேம்படுத்த வேண்டுகிறோம் (1/3)
[தொகு]தமிழ் விக்கிப்பீடியா என்பது பள்ளி மாணவர்களும் கூட அன்றாடம் பயன்படுத்தும் ஒரு கலைக்களஞ்சியம். எனவே, இங்குள்ள கட்டுரைகள் சீரான, நல்ல தமிழ் நடையில் இருப்பதும் பக்கங்கள் பிழையின்றி முழுமையாக இருப்பதும் முக்கியம் ஆகும். விக்கிப்பீடியா ஒரு கூட்டு முயற்சி என்பதால் அனைத்துப் பங்களிப்பாளர்களும் கூடி உரையாடிச் செயல்பட்டால் தான் கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்த இயலும்.
- கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் எழுதப்படும் சில கட்டுரைகளில் ஒரு வகையான வறண்ட, எந்திரத்தனமான மொழிபெயர்ப்பு உள்ளதாக உணரப்படுகிறது. ஒருவேளை, இது கருவியின் பிழையாகவோ கருவி உங்களின் செயல்திறனை மட்டுப்படுத்துவதாகவோ உணர்ந்தால், தயவு செய்து உங்கள் கருத்தை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி உருவாக்கக் குழுவுக்குத் தெரிவியுங்கள். அல்லது, இக்கருவியை விடுத்து நேரடியாக கைப்பட மொழிபெயர்க்கலாம்.
- கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் அளிக்கப்பட்ட கட்டுரைகளில் தேவைப்படும் மேம்பாடுகளைக் காணுங்கள். புதிய கட்டுரைகளை உருவாக்கும் முன் தாங்கள் ஏற்கனவே மொழிபெயர்த்த கட்டுரைகளில் இக்குறைகள் இருந்தால், தயவு செய்து திருத்தத் தொடங்குங்கள். இவை பொதுவான குறைகள் என்பதால் இவற்றைத் திரும்பத் திரும்ப ஒவ்வொரு கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலும் குறிப்பிடுவது நடைமுறைச் சாத்தியமற்றது. நீங்கள் விக்கிப்பீடியாவில் புகுபதிந்த பிறகு விக்கிப்பீடியாவின் வல மேற்புறத்தில் "என் பங்களிப்புகள்" என்று ஒரு இணைப்பு இருக்கும். இந்தப் பக்கத்தில் இருந்து உங்கள் பழைய கட்டுரைகளை இனங்கண்டு திருத்தத் தொடங்கலாம்.
- தங்கள் பயனர் பேச்சுப் பக்கத்திலும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்திலும் நிகழும் உரையாடல்களில் கலந்து கொள்ளுங்கள். விக்கிப்பீடியர்களிடையே கூடிய புரிந்துணர்வு ஏற்படவும், கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் இது மிகவும் முக்கியம்.
- தங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். உதவக் காத்திருக்கிறோம்.
இது கூகுள் கருவி மூலம் பங்களிக்கும் அனைத்துப் பங்களிப்பாளர்களுக்கும் விடுக்கப்படும் பொதுவான வேண்டுகோள். இந்த வேண்டுகோளில் உள்ள சில விசயங்களை நீங்கள் ஏற்கனவே கவனத்தில் எடுத்திருக்கலாம். சில விசயங்கள் பொருந்தாமல் இருக்கலாம். எனினும், இப்பொதுவான வேண்டுகோளை ஏற்று, தங்கள் பழைய கட்டுரைகளில் தேவையான மாற்றங்களைச் செயற்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த வேண்டுகோள் குறித்த அடுத்தடுத்த நினைவூட்டல்கள் மே 3, 2010 அன்றும் மே 10, 2010 அன்றும் இடப்படும். அதற்குப் பிறகும் இவ்வேண்டுகோளுக்கு ஏற்ப தங்கள் பழைய கட்டுரைகளில் தேவையான மாற்றங்களைக் காண இயலாவிட்டால், மே 15, 2010 முதல் தாங்கள் புதிய கட்டுரைகள் எழுதுவதை நிறுத்தி வைக்க வேண்டி வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.
--ரவி 17:09, 26 ஏப்ரல் 2010 (UTC)
நன்றி ரவி. பழைய கட்டுரைகளைத் திருத்தும் பணிகள் தொடங்கியாயிற்று.
அவ்வப்போது திருத்தம் செய்த பழைய கட்டுரைகளைப் பற்றியும் புதிதாக மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகளைப் பற்றியும் அவ்வப்போது விக்கி சமூகத்திற்கு தெரியப்படுத்துகிறேன், தாங்கள் எங்கள் கட்டுரைகளை மேம்படுத்த பரிந்துரைகளையும் கருத்துகளையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
--சிற்றரசன் 09:22, 12 மே 2010 (UTC)
உதவிக் குறிப்புகள்
[தொகு]வணக்கம்,
நீங்கள் நேரடியாக விக்கியிலேயே செய்து வரும் மாற்றங்கள் கண்டு மகிழ்ச்சி. உங்களுக்கு உதவக் கூடிய சில பக்கங்கள்:
- விக்கி குறித்த பொதுவான உதவிகள் கேட்க: ஒத்தாசைப் பக்கம்
- விக்கிக் கட்டுரை நடை குறித்த ஐயங்கள் கேட்க: நடைக் கையேட்டின் பேச்சுப் பக்கம்
- கலைச்சொல் உதவி: கலைச்சொல் ஒத்தாசைப் பக்கம், தமிழ் விக்சனரி, தமிழ் விக்சனரி மடற் குழுமம்
கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள கூகுள் மொழிபெயர்ப்பு வார்ப்புருவை நீக்க வேண்டாம். கூகுள் கட்டுரைகளைத் தரப்படுத்த இவ்வார்ப்புரு தேவை. நன்றி--ரவி 11:25, 12 மே 2010 (UTC)
மகிழ்ச்சி
[தொகு]நீங்கள் கூகுள் கட்டுரைகளில் செய்து வரும் மாற்றங்கள் கண்டு மகிழ்ச்சி. நன்றி--ரவி 18:54, 11 ஜூலை 2010 (UTC)
நன்றி ரவி!--சிற்றரசன் 04:36, 23 ஜூலை 2010 (UTC)
பங்களிப்பு வேண்டுகோள்
[தொகு]தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:29, 21 சூலை 2011 (UTC)
இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011 |
---|
வணக்கம் Arasut,
முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். |