பயனர்:RR Ranjithkumar vetharavi/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

FILM MEKAR

VISCOM

CUDDAL


ஈ.வெ.ராமசாமி பற்றிய கட்டுரை: ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் விருது பற்றி[தொகு][தொகு]

ஈ.வெ.ராமசாமி பற்றிய கட்டுரையில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் ஈவேரா அவர்களுக்கு விருது வழங்கியதற்குச் சரியான ஆதாரம் எதுவும் கிடையாது. 1998 வரை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் விருது பெற்றவர்கள் பட்டியலை அந்த நிறுவனத்தின் வலைத்தளத்திலிருந்து கொடுத்துள்ளேன். அதில் ஈவேரா அவர்கள் பெயர் இல்லை. ஆகவே இந்தத் தகவல் நீக்கப்பட வேண்டும். https://unesdoc.unesco.org/ark:/48223/pf0000111158?fbclid=IwAR3ccSps4KjbY3tmnsHfv17yhUujZn9kJr27PFs0HRjj_QbQ_zBAJp-yHzk நான் இதைச் செய்தால் உங்கள் பதிப்பாசிரியர்கள் இதை அனுமதிப்பதில்லை.−முன்நிற்கும் கருத்து Jag2019 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

பாராட்டு சான்றிதழ் தான் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருது அல்ல. எனவே பாராட்டு சான்றிதழ் விவரங்களை எல்லாம் யுனெசுக்கோ வலைத்தளத்தில் சேர்க்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். எனவே தகவல் சட்டத்தில் தரப்பட்டுள்ள தகவலை மட்டும் நீக்கலாம். கட்டுரையில் உள்ள தகவலை நீக்கத் தேவையில்லை. மேலதிக மேற்கோள்(கள்) கேட்கலாம்.--Kanags (பேச்சு) 22:13, 30 மார்ச் 2019 (UTC)

@Jag2019: நண்பருக்கு வணக்கம் //நான் இதைச் செய்தால் உங்கள் பதிப்பாசிரியர்கள் இதை அனுமதிப்பதில்லை.// விக்கிப்பீடியாவில் பதிப்பாசிரியர்கள் என யாரும் இல்லை. பெரியார் போன்ற ஆளுமைகள் பற்றிய கட்டுரையில் ஒரு தகவலை நீக்க விரும்பினால் அதற்கான காரணத்தை உரையாடல் பக்கத்தில் தெரிவித்து நீக்கினால் நலமாக இருக்கும். நீங்கள் நீக்கியதை நான் மீளமைத்த பிறகே நீங்கள் அந்த வலைத்தள சான்றினைக் கொடுத்துள்ளீர்கள். பொதுவாக அரசியல் தலைவர்கள் பற்றிய கட்டுரைகளில் இவ்வாறு சான்றுகள் இல்லாமல் சேர்க்கப்படும் தகவல்களை இயன்றவரை களைந்தும் சான்று தேவைஎன்ற வார்ப்புருவும் சேர்க்கப்பட்டுள்ளதை அறியவும். நன்றி ஸ்ரீ (talk) 14:35, 31 மார்ச் 2019 (UTC)

சில ஊராட்சி கட்டுரைகளில் திருத்தம் தேவை[தொகு][தொகு]

இங்கு பட்டியலிடப்பட்டுள்ளக் கட்டுரைகளில் 200+ ஊராட்சி கட்டுரைகள் உள்ளன. இவை அனைத்தும் இரண்டிற்கும் மேற்பட்ட மாவட்ட வார்ப்புருக்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை திருத்தப்பட வேண்டும். --அஸ்வின் (பேச்சு) 16:13, 20 ஏப்ரல் 2019 (UTC)

பொதுவகத்தில் படங்கள் தேவை[தொகு][தொகு]

தமிழில் சில கட்டுரைகள் எழுதும் போது அவற்றிற்கான ஒளிப்படங்கள் பொதுவகங்களில் காணப்படாமல் உள்ளது. உதாரணமாக, அபிநந்தன், கோமதி மாரிமுத்து போன்றோரின் படங்கள், தமிழ்த்திரைப்படங்கள் வெளியாகும் போது அவை தொடர்பான படங்கள் கிடைப்பதில்லை. ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள படங்களில் சில தமிழ் கட்டுரைகளில் பயன்படுத்துவது எளிதாக இல்லை. யாராவது இவற்றுக்கு உதவினால் பரவாயில்லை.--TNSE Mahalingam VNR (பேச்சு) 01:07, 25 ஏப்ரல் 2019 (UTC)

கோமதி மாரிமுத்து, அபிநந்தன் போன்றோரின் படங்களை எவ்வாறு பொதுவகத்தில் ஏற்றலாம்? இதற்கான உதவியை யாரிடம் கோரலாம்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:50, 25 ஏப்ரல் 2019 (UTC)

Antan o ,balaji, Thilakshan போன்றவர்களிடம் கேட்டலாம். ஸ்ரீ (talk) 17:00, 25 ஏப்ரல் 2019 (UTC)
வாழும் நபர்களின் புகைப்படங்கள் கண்டிப்பாக கற்றற்ற உரிமங்களில் இருக்கவேண்டும். காப்புரிமை பெற்ற புகைப்படங்கள் உபயோகப்படுத்த முடியாது. ஆங்கில விக்கிப்பீடியாவில் புகைப்படங்கள் இருந்தால் அந்த புகைப்படத்தில் எந்த உரிமம் உள்ளது என்று பாருங்கள். அதே உரிமத்தைப் பயன்படுத்தி தமிழ் விக்கிப்பீடியாவிலும் பயன்படுத்தலாம். காமன்சில் கற்றற்ற உரிமங்கள் மற்றும் சில பொதுகள உரிமங்கள் உள்ள புகைப்படங்களை மட்டுமே பதிவேற்ற முடியும். மேலும் விளக்கம் வேண்டும் என்றால் கேளுங்கள். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:42, 26 ஏப்ரல் 2019 (UTC)

பாலாஜி , இவ்வாறு ஊடகங்களில் அவர்களின் அப்போதைய சாதனைகளால் புகழின் உச்சிக்குச் செல்லும் ஆளுமைகளின் ஒளிப்படங்களை ஊடகத் துறைகளில் உள்ள நண்பர்களின் உதவியைப் பெற்றாவது விக்கி காமன்சுக்காக பதிவேற்றம் செய்ய ஒரு ஏற்பாடு செய்யலாமே?. இதே போல முனைய துணைக்கோள் ஏவுகலன்கள் பற்றிய படங்களையும் பொது நன்மைக்காக பயன்படும் தமிழ் விக்கிப்பீடியாவிற்காக பொதுவகத்தில் ஏற்ற ஏற்பாடுகள் செய்யலாமே? இன்னும் சில படங்கள் ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளவை கூட தமிழ் விக்கியில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. உதாரணமாக, சில திரைப்பட சுவரொட்டிகள். என்ன செய்யலாம்?--TNSE Mahalingam VNR (பேச்சு) 05:15, 26 ஏப்ரல் 2019 (UTC)

@TNSE Mahalingam VNR: தங்கள் கோரிக்கைகளை இரண்டு விதமாக பிரிக்கிறேன்.
  • ஊடகத் துறையின்றோடு, அவர்களை அவர்களுது ஊடக கோப்புகளை பொது கள உரிமத்தில் காமன்சில் வெளியிட முனைவது.
முதல் கோரிக்கையை நாம் யாராவது முன்னெடுக்க வேண்டும். தாங்களே கூட முன்னெடுக்கலாம். ஆனால் அத்தனை எளிதள்ள. ஊடகவியலாளர்கள் பொதுகள உரிமத்தில் வெளியிடுவார்களா என்பது சந்தேகமே. அப்படி யாரேனும் முன் வந்தால் பாராட்டுக்குறியது.
  • மற்ற மொழி விக்கிகளில் உள்ள நியாயமான பயன்பாடு பட கோப்புகளை தமிழ் விக்கிப்பீடியாவில் கிடைக்கச் செய்வது.
இரண்டாவது கோரிக்கை எளிது. ஏற்கனவே ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள நியாயமான பயன்பாடு உள்ள படங்களை தங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்படி செய்யும் பொழுது தக்க உரிம செய்திகளை கொடுக்க வேண்டும். இதனை தானியக்கமாக செய்ய @Tshrinivasan: அவரிடன் ஒரு நிரல் எழுத கோரிக்கை வைத்துள்ளேன். அதன் விவரங்களை இங்கு காணலாம். தங்களுக்கு தெரிந்த நிரலாளர்கள் யாராவது இருந்தால் இந்நிரலை எழுத முன்வரு முடியுமா என்று கேட்டுப்பாருங்கள்.
  • //இதே போல முனைய துணைக்கோள் ஏவுகலன்கள் பற்றிய படங்களையும் பொது நன்மைக்காக பயன்படும் தமிழ் விக்கிப்பீடியாவிற்காக பொதுவகத்தில் ஏற்ற ஏற்பாடுகள் செய்யலாமே?//
துணைக்கோள் முதலிய படங்கள், இஸ்ரோவால் ஏற்கனவே Government Open Data License (GODL) என்னும் உரிமத்தில் வெளியிடுகின்றன. அந்தப் படங்கள் ஏற்கனவே காமன்சில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டு pslv c45 ஏப்ரல் 1, 2019 அன்று ஏவப்பட்டது. அதன் கோப்பு ஏற்கனவே காமன்சில் இங்கு உள்ளது. அங்கு சென்று அதன் உரிம விவரங்களை பாருங்கள்.

மேலும் ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள். நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:15, 26 ஏப்ரல் 2019 (UTC)

பாலாஜி , தங்களின் பதில்களுக்கு நன்றி. --TNSE Mahalingam VNR (பேச்சு) 08:36, 26 ஏப்ரல் 2019 (UTC)

சொற்களுக்கிடையேயான இடைவெளி[தொகு][தொகு]

சில கட்டுரைகளை மொழிபெயர்க்கும் பொழுது இரண்டு சொற்களுக்கிடையே தேவைக்குமேல் இடைவெளி ஏற்படுகிறது. ஒவ்வொன்றாகச் சென்று திருத்தம் செய்தால் நேரவிரயம் ஏற்படுகிறது. இதற்கு ஏதேனும் தானியக்கக் கருவிகள் உள்ளனவா? எப்படி சரி செய்வது? உதவி தேவை.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:53, 16 மே 2019 (UTC)

இதுவரை அப்படித் தமிழுக்குக் கருவியில்லை சில உதாரண கட்டுரைகளைக் காட்டினால் அவ்வாறு கருவிகள் எதிர்காலத்தில் உருவாக்க மற்றவர்களுக்குப் பயன்படும். -நீச்சல்காரன் (பேச்சு) 08:38, 19 மே 2019 (UTC)
புதுப்பயனர் போட்டியில் மொழிபெயர்ப்பு மூலம்(content translation) உருவாக்கப்பட்ட கட்டுரைகள். பெரும்பான்மை நானே சரி செய்துவிட்டேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:11, 11 சூன் 2019 (UTC)

நாட்டுத் தகவல் வார்ப்புருக்களை சீர்திருத்த உதவி தேவை[தொகு][தொகு]

இங்கு உள்ள நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள் விக்கித்தரவில் இணைக்கப்படவில்லை. என்னால் இயன்றவரை இணைத்துவிட்டேன். இவற்றை இணைக்க வேண்டும் இல்லையேல் இன்னொரு பயனர் புதிதாக ஒன்றை இயற்றலாம். மேலும் நாட்டுத் தகவல் வார்ப்புருக்களில் Country Data XXXX என்றவை தேவையற்றவை. கிட்டதட்ட 200 வார்ப்புருக்கள் அவ்வாறு உள்ளன. இவற்றை நீக்கிவிடலாமா? அல்லது வழிமாற்றிடலாமா? --அஸ்வின் (பேச்சு) 16:03, 11 சூன் 2019 (UTC)

ஆமாம் விக்கித்தரவில் இணைப்பதே பரிந்துரைக்கப்பட்ட முறை. வார்ப்புரு:Flagicon வழியாகத்தான் பெரும்பாலும் இவ்வார்ப்புருக்கள் பயன்படுகின்றன. அதனால் பயன்படாத Country Data XXXX வார்ப்புருக்களை நீக்கிவிடலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 06:39, 13 சூன் 2019 (UTC)

கல்லூரிகளில் விக்கி பயிற்சி[தொகு][தொகு]

வணக்கம். சேலம் பயிற்சி பட்டறையில் புதிய திட்டங்கள் பற்றி விவாதித்தோம். அவற்றில் விக்கிப்பீடியா பற்றிய விழிப்புணர்வை பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடையே பயிற்சி பட்டறை வாயிலாக ஏற்படுத்தலாம் என்று கூறினோம். அதற்கான ஒரு முயற்சியாக கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் ஒரு பயிற்சி பட்டறை நடத்துவதற்கு தமிழ் துறை வாயிலாக அனுமதி பெற முயற்சித்து வருகிறேன். இதற்கான பயிற்சி பட்டறை ஒருங்கிணைப்பிற்கு என்னுடன் பணியை பகிர்ந்துகொள்ள உதவிகள் தேவைப்படுகிறது. நன்றி-- divya_kaniyam (பேச்சு) 09.57, 28 சூன்