பயனர்:Mathisri/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யக்ஷி யின் சிலை, இந்த கதையில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரம்

நாங் சிப் பாடல் (นางสิบสอง) அலல்து தாய் தென்கிழக்காசியா நாட்டுப்புறக் கதையில் ப்ரா ரொட் மொி (พระรถเมรี) என்று அழைக்கப்படும் தி பன்னிரண்டு சகோதிரிகள் அல்லது பன்னிரண்டு பெண்களின் புராணக்கதை, இது ஆசிரியா் பெயா் அறியப்படாத பன்னசா ஐாதகா தொகுப்பில் உள்ள ரதசெனா ஐாதகாவில் இருக்கும் ஒரு ஜாதக கதை. இது புத்தரின் முந்தைய வாழ்க்கையின் கதைகளில் ஒன்றாகும், அதில் பன்னிரண்டு பெண்களில் ஒருவரின் மகனான ரதசேனாவே போதிசத்துவர் ஆவாா்.[1]

பின்னணி[தொகு]

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தாய்லாந்து, கம்போடியா மற்றும் லாவோஸ் போன்ற சில நாடுகளின் நாட்டுப்புற பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக பன்னிரண்டு சகோதரிகளின் கதை உள்ளது, மேலும் அதிலிருந்து பெறப்பட்ட நாட்டுப்புறக் கதைகள் வெவ்வேறு பதிப்புகளில் வருகின்றன, பெரும்பாலும் நாட்டைப் பொறுத்து வெவ்வேறு தலைப்புகளின் கீழ். இந்த புராணக்கதை மலேசிய சியாமியர்களால் மலேசியா விற்கும் கொண்டு வரப்பட்டது, இது மலேசிய சீனர் சமூகத்தினரிடையே பிரபலமானது.[2]

இது பெற்றோா்களால் கைவிடப்பட்டு ஒரு அழகான பெண்மணியாக மாறுவேடமிட்டு வந்து அரக்கி ( லாவோ சுந்தரா; கெமர்: சந்தோமியா; தாய்: சந்துமாலா) யால் தத்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு சகோதரிகளின் நீ்ண்ட கதை. இந்த கதையின் முடிவு, பன்னிரண்டு சகோதரிகளின் ஒரே மகன் ரதசேனா (தாய்: ஃபிரா ரோதாசென் พระ รถ รถ; கெமர்: ரிதிசென் அல்லது புதிசென்; லாவோ: புத்தாசென்) மற்றும் அரக்கி சுந்தரா வின் வளர்ப்பு மகளான மனோரா வின் (தாய்: மேரி เม เม; லாவோ: கங்காரி;கெமர்: காங் ரெய்) சோகக் காதல் கதை. இறுதியில் இருவரும் ஒரு ஏரியின் நீண்ட மற்றும் தனிமையான கரையில் ஒன்றாக இறந்தனர்.

தாய் பதிப்பு[தொகு]

நீண்ட காலத்திற்கு முன்பு, ஒரு பணக்கார வணிகரும் அவரது அழகான மனைவியும் ஒரு பெரிய வீட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். அவர்களின் நல்ல அதிர்ஷ்டம் இருந்ததாலும் அந்த தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. ஒரு நாள், அவர்கள் இருவரும் சோ்ந்து ஒரு கோயிக்குச் சென்று, அங்கு இருந்த ஒரு வனத்தேவதைக்கு பன்னிரண்டு வாழைப்பழங்களை பிரசாதமாக வழங்கினாா்கள். அதன்பிறகு அவன் மனைவி கர்ப்பமாகினாள், குழந்தை ஒரு பையனாக இருக்க வேண்டும் என்று பணக்காரன் தன் முழு வலிமையுடனும் விரும்பினான், ஆனால் அவன் மனைவி ஒரு பெண்ணைப் பெற்றெடுத்தாள். அவரது மனைவி மீண்டும் மீண்டும் கருத்தரித்தாள். அவள் பன்னிரண்டு முறை கர்ப்பமாகிவிட்டாள், ஒவ்வொரு முறையும் அவளுக்கு ஒரு மகள் பிறந்தாள். அந்த சமயத்தில் வேறொரு நாட்டில் விற்க தனது பொருட்களை எடுத்துச் சென்ற கப்பல்கள் பல முறை கொள்ளையடிக்கப்பட்டதால், அவரது வணிகம் அவருக்கு தவறாகத் தொடங்கியது. இறுதியாக பணக்கார வணிகர் தனது வணிக சிக்கல்களை சரிசெய்ய நண்பர்களிடமிருந்து நிறைய பணம் கடன் வாங்கினார். ஆனாலும், அவர் என்ன செய்தாலும், அவரது குடும்பத்தினர் ஏழ்மை நிலையில் இருந்து விடுப்படவில்லை.

குடும்பம் பெரிதானதால் அனைவருக்கும் உணவளிக்க முன்னால் பணக்காரருக்கு கடினமாக இருந்ததது. எனவே தனது மகள்களை காட்டில் கைவிட ஒரு திட்டம் தீட்டினாா். அவர் இந்த திட்டத்தை தனது மனைவியிடமிருந்து மறைத்தார், ஆனால் அவரது இளைய மகள் பாவோ அதைப் பற்றி அறிந்தாள். ஆழமான காட்டில் அவர்களின் தந்தை அவர்களைத் தனியாக விட்டுச் சென்றபோது, ​​பன்னிரண்டு சிறுமிகள் வீட்டிற்குத் திரும்புவதற்கான வழியை அவா்களின் இளைய தங்கை வழி முழுக்க விட்டுச்சென்ற வழிதடங்களின் முழம் கண்டறிந்தாா்கள். ஆனால் அவர்களின் தந்தை மீண்டும் முயன்றார், இந்த சமயம் அவர்களால் வீடு திரும்பும் வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் காடுகளுக்குள் ஆழமாக சென்று பல நாட்கள் அங்கு கழித்து மிகவும் பசியுடன் இருந்தார்கள். அவர்களின் தந்தை அவர்களுக்கு பன்னிரண்டு சிறு அரிசி பைகளைக் கொடுத்திருந்தார், ஆனால் அவர்கள் திறந்தபோது அதில் பதினொரு பையில் மணல் நிரப்பப்பட்டிருப்பதைக் கண்டனா், அதில் ஒன்றில் மட்டுமே அரிசி இருந்தது. அவர்கள் அந்த சிறிய உணவைப் பகிர்ந்து சாப்பிட்டார்கள், தங்கள் துரதிர்ஷ்டத்தைப் நினைத்து அழுதாா்கள். இலட்சியமின்றி அலைந்து திரிந்து பன்னிரண்டு சிறுமிகளும் ஒரு ஏரிக்கு வந்தார்கள், அங்கு அவர்கள் பசியைப் போக்க மீன்களைப் பிடிக்க முயன்றனர். சகோதரிகள் ஒவ்வொருவரும் ஒரு மீனைப் பிடிப்பதில் வெற்றி பெற்றனர், அவர்களில் பதினொரு பேர் தங்கள் மீன்களின் கண்களை கூர்மையான கிளைகளால் குத்தினர், ஆனால் அந்த இளைய சிறிமியால் ஒரே ஒரு கண்ணை மட்டுமே குத்த முடிந்தது.

இறுதியாக அவர்கள் யக்ஷ இராச்சியத்திற்கு வந்தார்கள், அங்கு சந்துமலா என்ற ஒரு அரக்கி மயக்கமடைந்த சிறுமிகளை ஒரு மரத்தின் அடியில் கண்டு அவர்களை தத்தெடுக்க முடிவு செய்தது. அது தன்னை ஒரு மனிதனாகவும், இனிமையான தோற்றமுடைய பெண்ணாகவும் மாற்றி, பன்னிரண்டு சகோதரிகளையும் தனது வீட்டிற்கு அழைத்து வந்தது. பல ஆண்டுகளாக அது அவர்களை தனது சொந்த மகள்களாகவே கருதியது, அந்த பன்னிரண்டு சிறுமிகளும் அழகான இளம் பெண்களாக வளர்ந்தனர்.

ஒரு நாள், சந்துமாலா வேட்டையாட சென்றபோது, பன்னிரண்டு சகோதரிகளும் ஒரு வயதானவரைச் சந்தித்தனர், அவர் சந்துமாலா ஒரு மனிதர் அல்ல, ஆனால் அவர்களைப் போன்ற இளம் பெண்களை சாப்பிட விரும்பிய ஒரு அரக்கி என்று கூறினார். ஆகவே, அவர்கள் அந்த ராஜ்யத்திலிருந்து தப்பி ஓடினா், பல நாட்கள் அலைந்து திரிந்தது ஒரு தெளிவான நதிக்கு வந்து அடைந்தாா்கள். அங்கு அவர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள குளித்தார்கள். உள்ளூர் மன்னர் பன்னிரண்டு பெண்கள் தண்ணீரில் விளையாடுவதைக் கண்டு அவர்களைக் காதலிக்த்தொடங்கினாா். எனவே அவர் அவர்களை தனது அரண்மனைக்கு அழைத்து வந்து பன்னிரண்டு சகோதரிகளையும் மணந்தார்.

சந்துமாலா தனது வீட்டிற்கு திரும்பி வந்தப்போது அந்தப் பெண்கள் போய்விட்டதைக் கண்டு மிகவும் கோபமடைந்தாள். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை உடநடியாக கண்டுபிடிததாள், தன்னை ஒரு அழகான இளம் பெண்ணாக மாற்றிக் கொண்டாள், பன்னிரண்டு சகோதரிகளில் யாரையும் விட அழகாக இருந்தாள்; அவள் ராஜாவின் நகரத்திற்குச் சென்று அவனைச் சந்திக்க அனுமதி வேண்டினாள். மன்னர் சந்துமாலாவின் அழகைக் கண்டு மயங்கிப்போய் அவளை விரைவாக மணந்து, முதல் ராணி பதவிக்கு உயர்த்தினார். அதைப் பார்த்து பொறாமை கொண்ட பன்னிரண்டு சகோதரிகள் ராஜாவுக்கு முன்னால் அவர்கள் அவளிடம் கண்ணியமாக இருந்தபோதிலும், புதிய ராணியிடம் தனிப்பட்ட முறையில் கடுமையாக நடந்துக்கொண்டாா்கள். பன்னிரண்டு சகோதரிகளை பழிவாங்க, பிடித்த ராணியான சந்துமாலா நோய்யுற்றவாளாக நடித்தாள், ராஜா மிகவும் கவலையடைந்தாா். தன் நோய்க்கு காரணம் மற்ற பன்னிரண்டு மனைவிகள் அவளிடம் கடுமையாக நடந்துக்கொள்வதே என்றும், அவளை குணமாக்கும் ஒரே விஷயம் பன்னிரண்டு சகோதரிகளின் கண்களிலிருந்து செய்யப்படும் மருந்தாலையே என்றும் அவள் ராஜாவிடம் சொன்னாள்.

மன்னர் சந்துமாலா மீது மிகுந்த மோகம் கொண்டிருந்ததனால், அவர் இதற்க்கு ஒப்புக்கொண்டார். அவரது உத்தரவின் படி பதினொரு மனைவிகளின் இரு கண்களையும் எடுத்தனா், ஆனால் இளையவளக்கு ஒரே ஒரு கண் மட்டுமே அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பன்னிரண்டு சகோதரிகளையும் ஒரு ஆழமான இருண்ட குகைக்கு வெளியேற்றப்பட்டனர். பின்னர் ராஜா தனது வேலையாட்களிடம் அவா்களுக்கு எந்த உணவையும் கொண்டு வர வேண்டாம் என்றும் பன்னிரண்டு சகோதரிகளுக்கு எந்த வகையிலும் உதவ வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

பன்னிரண்டு சகோதரிகளும் கர்ப்பமாக இருந்தார்கள், அனைவரும் அடுத்தடுத்து குழந்தைகளைப் பெற்றெடுத்தனர், ஆனால் அனைத்துக் குழந்தைகளும் இறந்தனர். சந்துமாலாவின் கடுமையான கட்டளைகளின் கீழ் பன்னிரண்டுப் பெண்களுக்கும் உணவு அழிக்கப்படவில்லை அதனால் பசியில் ஒவ்வொருவரும் தனது குழந்தையின் உடலை பன்னிரண்டு துண்டுகளாக நறுக்கி மற்ற சகோதரிகளுடன் பகிர்ந்து உண்டாா்கள். பாவோ உயிருடன் இருந்த ஒரு அழகான பையனைப் பெற்றெடுத்தபோது, ​​தன் மகன் இறந்துவிட்டதாக தன் சகோதரிகளிடம் பொய் சொன்னாள். பாவோவுக்கு ஒரு அழகிய மகன் பிறந்தான், அதை தன் சகோதரிகளிடம் இருந்து அவள் மறைத்தாள். தனது மகனுக்கு ரோதசென் என்று பெயரிட்டு அவனை நன்கு கவனித்துக்கொண்டாள். அவன் வளர்ந்தவுடன் ஆழமான குகையில் இருந்து வெளியே செல்ல ஒரு ரகசிய வழியைக் கண்டுபிடித்தான். அனைத்து சேவல் சண்டை யிலும் வெற்றி பெரும் ஒரு சேவல் அவனிடம் இருந்தது. அதில் வென்று வரும் பரிசுத் தொகையில் அவன் அரிசி வாங்கினான், அதன் பின்னர் அவன் தனது தாய்க்கும் பதினொரு அத்தைகளுக்கும் தவறாமல் உணவைக் கொண்டு வந்தான். ஆண்டுகள் செல்ல செல்ல ரோதசென் ஒரு அழகான இளைஞனாக ஆனான். ராஜா அவனைக் கேள்விப்பட்டதும், அவனை அரண்மனைக்கு அழைத்தார், அங்கு ரோதசென் மன்னரிடம் தாயக் கட்டை விளையாட்டில் தன் திறமையைக் காட்டினான்.

பன்னிரண்டு சகோதரிகளும் உயிரோடு இருப்பதை சந்துமாலா அறிந்தாள், தனது பழிவாங்கும் திட்டம் தோல்வியடைந்தததை நினைத்து கோபமடைந்தாள் அதனால் மீண்டும் அவள் நோயை்யுற்வள் போல் நடித்தாள், தன் ராஜ்யத்தில் வளரும் ஒரு குறிப்பிட்ட பழத்தால் மட்டுமே தன்னை குணப்படுத்த முடியும் என்று ராஜாவிடம் சொன்னாள். ஃபிரா ரோதசென் மட்டுமே அதைப் எடுத்து வர முடியும் என்றும் அவள் ராஜாவிடம் சொன்னாள். பின் அவள் தனது வளர்ப்பு மகள் மேரிக்கு அரக்கிகளின் மொழியில் பின்வரும் கடிதத்தை எழுதினாள்: "இந்த இளைஞன் காலையில் நம் ராஜ்யத்திற்கு வந்தால், காலையில் அவனை விழுங்கிவிடு; ஒருவேளை அவன் இரவில் வந்தால், அவனை இரவில் விழுங்கிவிடு"

ராஜ்யத்திற்கு செல்லும் வழியில் ஃபிரா ரோதசென் ஒரு வயதான ரிஷி யைச் சந்தித்தான், அவர் பாச்சி என்ற பறக்கும் குதிரையை அவன் சவாரி செய்யக் கொடுத்தார், ரோதசெனுக்கு மிகச்சிறந்த விருந்தோம்பல் கொடுத்தார். அவன் தூங்கும்போது முனிவர் கடிதத்தின் அர்த்தத்தை மாற்றியமைத்தாா் "அவனை விழுங்கிவிடு" என்ற வார்த்தைகளை "திருமணம் செய்து கொள்" என்று மாற்றினார்.

அந்த அரக்கிகளின் ராஜ்யத்திற்கு வந்த ஃபிரா ரோதசென், நேராக மேரியிடம் சென்று கடிதத்தைக் காட்டினான். நல்லொழுக்கம் மற்றும் அழகு இரண்டம் நிறைந்த அந்த இளைஞனைப் பார்த்ததில் மேரி ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தாள், அவள் அவனைக் காதலிக்கத்தொடங்கினாள், கடிதத்தில் உள்ளவாரு அவனைத் திருமணம் செய்ய தயாா் ஆனாள்.

மேரி ஒரு கனிவான மற்றும் அழகான பெண். ஃபிரா ரோதசென் அவளுடன் சிறிது காலம் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தான், ஆனால் அவன் தனது கண் இழந்த தாயையும், இருண்ட குகையில் தங்கியிருக்கும் அத்தைகளையும் நினைவு கூர்ந்தான். அரண்மனையை அவனுக்குக் காண்பிக்கும் போது, ​​ஃபிரா ரோதசனின் தாய் மற்றும் அத்தைகளின் கண்கள் உள்ளிட்ட சில மந்திர மருந்துகள் பூட்டிய அறையில் வைக்கப்பட்டுள்ளதைக் குறித்து மேரி ரோதசனிடம் தெரிவித்திருந்தாள். ஒரு நாள் அவன் மேரிக்கு மது அருந்தவதைத்து அவளை தூங்கவைத்துவிட்டு, தனது தாய் மற்றும் அத்தைகளின் கண்களையும் பல மந்திர மருந்துகளையும் பூட்டிய அறையிலிருந்து அவன் திருடினான். மேரி எழுந்து தன் கணவனைத் தேடினாள், ஆனால் அவன் பறக்கும் குதிரையில் ஏரிச் சவாரி செய்வதைப் பார்த்தாள். அவள் திடீரென்று ஒரு ராட்சசியாக வளர்ந்து, ஃபிரா ரோதசெனை அழுதுக்கொண்டே உரத்த குரலில் அவனை அழைத்தாள். அவளைத் தடுக்க, ஃபிரா ரோதசென் ஒரு மந்திரக் கிளையை எறிந்தான், அது அவர்களுக்கு இடையில் ஒரு ஆழமான ஏரியையும் உயரமான மலையையும் உருவாக்கியது. கணவன் தன்னிடமிருந்து தப்பித்து போவதைப் பார்த்த மேரி, அவனை நிறுத்த முயன்றாள். ஃபிரா ரோதசென் தனது மனைவியின் சோகமான அலறல்களால் மனம் நெகிழ்ந்து, தனது அவசர பணியை முடித்த பின்னர் அவன் திரும்பி வருவதாக பதிலழித்தான். பின்னர் ஃபிரா ரோதசென் பறந்து சென்றான், மேரி உடைந்த இதயத்துடன் ஏரியின் கரையில் அழுதாள்.

ஃபிரா ரோதசென் மீண்டும் தனது நகரத்திற்கு வந்து தீய சந்துமாலாவை ஒரு மந்தரத்தால் கொன்றான். பின்னர் அவன் அந்த இருண்ட குகைக்குள் சென்று தனது தாய் மற்றும் அத்தைகளின் கண்களை ஒரு மந்திர மருந்தின் மூலம் மீண்டும் அந்த இடத்தில் வைத்து குணப்படுத்தினான். அவரது தாயும் அத்தைகளும் தங்கள் குகையை விட்டு வெளியேறி, ராஜாவுடன் தங்கள் முந்தைய நிலையை மீண்டும் பெற்றனர். அவர்கள் அவனை தங்களோடு அரண்மனையில் வாழ அழைத்தார்கள், ஆனால் ஃபிரா ரோதசென், அவனுக்காகக் காத்திருக்கும் மேரியுடன் வாழ, திரும்பிப் போக வேண்டும் என்று அவர்களிடம் கூறினான்.

ஆனால் இதற்கிடையில் மேரி, ரோதாசென்னை பிறிந்த துக்கம் தாங்க முடியாமல் இறந்துவிட்டாள். அவள் அந்த நீண்ட காத்திருப்பின் போது விட்ட கண்ணீரால், அவள் குருடாகினாள். அவள் இறப்பதற்கு முன், ஃபிரா ரோதசென்னின் ஒவ்வொரு மறுபிறவி களிலும் அவனை பின்தொடா்வேன் என்று உறுதியளித்தாள். பின்னர் அவள் பாட்டியின் பக்கத்திலும் தன் ஊழியர்களால் சூழப்பட்டபடி அழுதவாறே இறந்தாள்.

ஃபிரா ரோதசென் அவள் ராஜ்யத்திற்கு வந்தபோது, ​​அது மிகவும் தாமதமானதை உணர்ந்தான். அவன் மேரியின் சபதத்தைப் பற்றி கேள்விப்பட்டு மனைவியின் உடலை எடுத்துச் சென்றான். எல்லாவற்றையும் இழந்ததில் சோகம் நிறைந்த அவன், மனைவியை கைகளில் பிடித்துக் கொண்டுபடியே இறந்தான். இறுதியாக, அவர்களின் ஆவிகள் தங்களின் அடுத்த மறுபிறப்பை நோக்கி ஒன்றாக பறந்தன, அங்கு அவர்கள் இருவரும் மீண்டும் இணைக்கப்படுவார்கள்.

சோன்பூரி மாகாணத்தின் ஃபனாத் நிகோம் மாவட்டத்தில் உள்ள தம்பன் மோன் நாங்கில், பன்னிரண்டு சகோதரிகளுக்கு, வனாந்தரத்தில் அலைந்து திரிந்தபோது அவா்கள் தலையணையாகப் பயன்படுத்திய பாறையையும், கரிசா காரண்டா மரத்தையும் கொண்ட ஒரு கோயில் உள்ளது.[3]

சோன்பூரி மாகாணத்தில் உள்ள சா சிலியம் (สระ สี่เหลี่ยม) என்பது பன்னிரண்டு சகோதரிகள் இருண்ட குகையில் இருந்தப்போது அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்காக சேவல் சண்டைகள் போட்ட, ​​ஃபிரா ரோதசென் தனது சேவலக்கு தண்ணீர் தர வந்த குளம் என்று கூறப்படுகிறது. இது அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு புராணக்கதை.[4]

கம்போடியன் பதிப்பு[தொகு]

 1. Ian Harris, Cambodian Buddhism: History and Practiதொடர் பங்களிப்புக்கு நன்றி

  வணக்கம், Mathisri/மணல்தொட்டி!

  நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

  தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

  மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

  பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

  இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

  ce, University of Hawaii Press, 2008, ISBN 978-0824832988
 2. The Thai Menora in Malaysia: Adapting to the Penang Chinese Community
 3. Phra Rot Meri - Chonburi
 4. Chonburi - Square Pool
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mathisri/மணல்தொட்டி&oldid=2930166" இருந்து மீள்விக்கப்பட்டது