பனங்காட்டு அணில்
பனங்காட்டு அணில்[1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | ப. திரிசுதிரியேடசு
|
துணையினம்: |
|
இருசொற் பெயரீடு | |
பன்னாம்புலசு திரிசுதிரியேடசு வாட்டர்கவுசு, 1837 |
பனங்காட்டு அணில் (Jungle palm squirrel), காட்டு கோடு அணில், அல்லது மேற்குத் தொடர்ச்சி மலை அணில் (பன்னாம்புலசு திரிசுதிரியேடசு) என்பது இந்தியாவில் மட்டும் காணப்படும் சையூரிடே எனும் அணில் குடும்பத்தில் உள்ள கொறிணிச் சிற்றினமாகும். இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் காடுகள் மற்றும் தோட்டங்கள் ஆகும்.[3] இந்த இனம் வாழ்விட மாற்றங்களைப் பொறுத்துக்கொள்கிறது. இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பொதுவாகக் காணக்கூடியது. இந்த அணில் இந்தியத் தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையில் உள்ள உயரமான மரங்கள் கொண்ட காடுகளில் மட்டுமே வாழ்கின்றது.[4][5] பனங்காட்டு அணில், கொக்கோ, மாம்பழம், திராட்சை மற்றும் சப்போட்டா போன்றவற்றின் தீங்குயிரியாக உள்ளது. இந்த ஆண் அணில்களின் எண்ணிக்கை பெண் அணில்களைவிட அதிகமாகக் காணப்படுகின்றது.[6] சீரற்ற பாலின விகிதத்திற்கான சாத்தியமான காரணிகளாக "நிலைத்தன்மை, இறப்பு, பரவல் மற்றும் வேட்டையாடும் அழுத்தம்" உள்ளன.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Thorington, R.W. Jr.; Hoffmann, R.S. (2005). "Family Sciuridae". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: a taxonomic and geographic reference (3rd ed.). The Johns Hopkins University Press. pp. 754–818. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8018-8221-4. இணையக் கணினி நூலக மைய எண் 26158608.
- ↑ Molur, S.; Nameer, P.O. (2016). "Funambulus tristriatus". IUCN Red List of Threatened Species 2016: e.T8704A22259512. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T8704A22259512.en. https://www.iucnredlist.org/species/8704/22259512. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Chandrasekar-Rao, Anjali; Sunquist, Melvin E. (1996). "Ecology of small mammals in tropical forest habitats of southern India". Journal of Tropical Ecology 12 (4): 561–571. doi:10.1017/S0266467400009779.
- ↑ Kumara, Honnavalli N.; Singh, Mewa (2006). "Distribution and relative abundance of giant squirrels and flying squirrels in Karnataka, India / Distribution et abondance relative des espèces d'écureuils géants et volants à Karnataka, Inde". Mammalia 70 (1–2). doi:10.1515/mamm.70.1-2.40.
- ↑ Bhat, S Keshava; Mathew, D. N. (1984). "Population of the Western Ghats squirrel,Funambulus tristriatus Waterhouse in South India". Proceedings: Animal Sciences 93 (2): 131–139. doi:10.1007/BF03186070. https://archive.org/details/sim_proceedings-animal-sciences_1984-03_93_2/page/131.
- ↑ Advani, Ranjan; Sujatha, A. (1984). "Body weights, sex ratio and population structure of the Western ghat squirrel,Funamhulus tristriatus". Proceedings: Animal Sciences 93 (5): 491–496. doi:10.1007/bf03186296. https://archive.org/details/sim_proceedings-animal-sciences_1984-09_93_5/page/491.
- ↑ Advani, Ranjan; Sujatha, A. (1984). "Body weights, sex ratio and population structure of the Western ghat squirrel,Funamhulus tristriatus". Proceedings: Animal Sciences 93 (5): 491–496. doi:10.1007/BF03186296. https://archive.org/details/sim_proceedings-animal-sciences_1984-09_93_5/page/491.