பண்டுவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டுவா
கிண்ணத்தில் பண்டுவா
வகைஇனிப்பு
பரிமாறப்படும் வெப்பநிலைஇனிப்பு
தொடங்கிய இடம்மேற்கு வங்காளம், இந்தியா
பகுதிவங்காளம் இந்தியத் துணைக்கண்டப் பகுதி
தொடர்புடைய சமையல் வகைகள்இந்தியத் துணைக்கண்டம், வங்காளதேசம்
முக்கிய சேர்பொருட்கள்ரவை, கோவா பால், நெய் சர்க்கரை

பண்டுவா (வங்காள மொழி: পান্তুয়া; ஆங்கிலம்: Pantua) என்பது இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த தின்பண்டமாகும். இது மேற்கு வங்காளம், கிழக்கு இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் குறிப்பிடத்தக்க இனிப்பாக உள்ளது.[1] இது ரவை, சேனா, பால், நெய் மற்றும் சர்க்கரை பாகு ஆகிய பொருட்களால் உருண்டையாக தயாரிக்கப்பட்டு நன்கு வறுத்த பாரம்பரிய வங்காள இனிப்பு ஆகும். பண்டுவா எவ்வளவு நேரம் வறுக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து இதன் நிறமானது வெளிர் பழுப்பு நிறத்திலிருந்து கிட்டத்தட்டக் கருப்பு நிறம் வரை இருக்கும். பன்னீர், ஏலக்காய் அல்லது பிற சுவை பொருட்கள் இனிப்புடன் சில நேரங்களில் சேர்க்கப்படுகின்றன.

பண்டுவா பாலாடைக்கட்டி அடிப்படையிலான வறுத்த இனிப்பு என்பதால் இது லேடிகேனியினை மிகவும் ஒத்திருக்கிறது.[2] லேடிகேனி என்ற பெயர் "லேடி கேனிங்" என்பதன் மொழிபெயர்ப்பாகும், இது முதன்முதலில் பீம் சந்திர நாக் என்ற மிட்டாய் வியாபாரியால் பயன்படுத்தப்பட்டது. இவர் இந்திய வைசுராய் கானிங் பிரபுவின் மனைவி கவுண்டஸ் சார்லோட் கேனிங்கின் பிறந்தநாளின் போது சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட பண்டுவாக்களுக்கு மறுபெயரிட்டார்.[3] நவீன பண்டுவா மற்றும் லேடிகேனியினை ஒத்த ஒரு இனிப்பாகும். ஆனால் அரிசி மாவினால் ஆனது. 12ஆம் நூற்றாண்டின் சமசுகிருத மொழி உரையான மனசொல்லாசாவில் பண்டுவா குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.[4]

பண்டுவா குலாப் ஜாமூனைப் போன்றது.[1] எனவே பண்டுவாவினைப் வங்காள வகை என்று அழைக்கலாம்.[5]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Madhushree Basu Roy. "Pantua- The Bengali Gulab Jamun but it's Different". pikturenama.com. பார்க்கப்பட்ட நாள் 10 October 2021.
  2. Ishita Dey (2015). Darra Goldstein. ed. The Oxford Companion to Sugar and Sweets. Oxford University Press. பக். 743. https://books.google.com/books?id=XPNgBwAAQBAJ&pg=PT743. 
  3. Krondl, Michael (2011). Sweet invention: A history of dessert. USA: Chicago Review Press. பக். 67–69. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-55652-954-2. https://books.google.com/books?id=gN6ySQnUnfwC&pg=PA69. 
  4. Michael Krondl (2011). Sweet Invention: A History of Dessert. Chicago Review Press. பக். 41–42. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-55652-954-2. https://books.google.com/books?id=gN6ySQnUnfwC&pg=PA41. 
  5. Charmaine O'Brien (3 February 2003). Flavours Of Delhi: A Food Lover's Guide. Penguin Books Limited. பக். 145–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-5118-237-5. https://books.google.com/books?id=xeSXAAAAQBAJ&pg=PT145. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டுவா&oldid=3392724" இலிருந்து மீள்விக்கப்பட்டது