பட்டாணி ஆறு

ஆள்கூறுகள்: 6°53′N 101°16′E / 6.883°N 101.267°E / 6.883; 101.267
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டாணி ஆறு
Pattani River
அமைவு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுபெத்தோங் மாவட்டம், கெடா மாநிலம்
யாலா மாநிலம்
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
தாய்லாந்து வளைகுடா
 ⁃ ஆள்கூறுகள்
6°53′N 101°16′E / 6.883°N 101.267°E / 6.883; 101.267
நீளம்214 km

பட்டாணி ஆறு (ஆங்கிலம்: Pattani River; தாய்: แม่น้ำปัตตานี); தா. பொ. எ.; Maenam Pattan); என்பது தென் தாய்லாந்து, பட்டாணி மாநிலம், பட்டாணி நகரத்தில் உள்ள ஆறு.

இந்த ஆறு மலேசியா, கெடா பெத்தோங் மாவட்டம்; மற்றும் தாய்லாந்து யாலா மாநிலம்; ஆகிய பகுதிகளில் உற்பத்தி ஆகிறது. இந்த ஆற்றுப் படுகையின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் பல மலைத்தொடர்கள் உள்ளன. வடக்குப் பகுதியில் பட்டாணி ஆற்றுச் சமவெளியை இந்த ஆறு ஆதிக்கம் செலுத்துகிறது.

பொது[தொகு]

பட்டாணி மாநிலம்; யாலா மாநிலம் ஆகிய மாநிலங்களின் வழியாகப் பாயும் இந்த ஆறு, பின்னர் பட்டாணி நகரத்தைக் கடந்து தாய்லாந்து வளைகுடாவில் கலக்கிறது.

தீபகற்ப மலேசியாவில் உற்பத்தியாகும் தாய்லாந்து ஆறுகளில் பட்டாணி ஆறுதான் மிக நீளமானது. 214 கிலோமீட்டர் நீளம் கொண்டது. யாகா ஆறு (Yaha River); மற்றும் நோங் சிக் ஆறு (Nong Chik River); ஆகிய இரு ஆறுகளைத் துணை ஆறுகளாகக் கொண்டுள்ளது.

யாலா மாநிலத்தில் பட்டாணி ஆற்றைத் தேக்கி ஓர் அணையைக் கட்டி ஒரு நீர்த்தேக்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதன் பெயர் பாங் லாங் நீர்த்தேக்கம் (Bang Lang Reservoir). பாங் லாங் நீர்த்தேக்கத்தில் இருந்து மற்றொரு நீர்த்தேக்கமான பட்டாணி நீர்த்தேக்கத்தையும் (Pattani Dam) உருவாக்கி இருக்கிறார்கள்.[1]

சான் காலா கிரி மலை[தொகு]

இந்த ஆற்றின் வழித்தடத்தில் சான் காலா கிரி மலை (San Kala Khiri); மற்றும் பைலோ மலை (Pilo Mountain); என இரண்டு பெரிய மலைகள் உள்ளன. அவை தாய்லாந்து மற்றும் மலேசியா நாடுகளுக்கு இடையே இயற்கையான எல்லைகளாகவும் உள்ளன.[1]

பெரும்பான்மையான மக்கள், ஏறத்தாழ 715,000 மக்கள், பட்டாணி ஆற்றுப் படுகையில் (Pattani River Basin) வாழ்கின்றனர். விவசாயமும் கால்நடை வளர்ப்புமே இவர்களின் தொழில்கள்.[2]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டாணி_ஆறு&oldid=3603206" இருந்து மீள்விக்கப்பட்டது