பஞ்செட்டி

ஆள்கூறுகள்: 13°16′17″N 80°09′04″E / 13.271461°N 80.151068°E / 13.271461; 80.151068
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்செட்டி
Panjetty

பஞ்சேஷ்டி[1]
புறநகர்ப் பகுதி
பஞ்செட்டி Panjetty is located in தமிழ் நாடு
பஞ்செட்டி Panjetty
பஞ்செட்டி
Panjetty
பஞ்செட்டி, திருவள்ளூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 13°16′17″N 80°09′04″E / 13.271461°N 80.151068°E / 13.271461; 80.151068
நாடு இந்தியா
மாநிலம்=Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர் மாவட்டம்
ஏற்றம்62 m (203 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்601 204[2]
அருகிலுள்ள ஊர்கள்காரனோடை,செங்குன்றம், பாடியநல்லூர், புழல், அலமாதி, பொன்னேரி, கவரைப்பேட்டை, கும்மிடிப்பூண்டி
மாவட்ட ஆட்சித் தலைவர்மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப.

பஞ்செட்டி (ஆங்கில மொழி: Panjetty) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[3][4][5] தேவயக்ஞம், பித்ருயக்ஞம், பூதயக்ஞம், மானுஷ்ய யக்ஞம் மற்றும் பிரம்மயக்ஞம் என பஞ்ச இஷ்டிகள் (ஐந்து இஷ்டிகள்) கடைப்பிடித்து அகத்திய முனிவர் இந்த இடத்தில் தங்கியிருந்ததால் பஞ்சேஷ்டி என்று இந்தப் பகுதி அழைக்கப்பட்டு, பின்னர் மருவி பஞ்செட்டி என்று அழைக்கப்படுகிறது.[6]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 62 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பஞ்செட்டி பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 13°16′17″N 80°09′04″E / 13.271461°N 80.151068°E / 13.271461; 80.151068 ஆகும். காரனோடை, செங்குன்றம், பாடியநல்லூர், புழல், அலமாதி, பொன்னேரி, கவரைப்பேட்டை, கும்மிடிப்பூண்டி ஆகியவை பஞ்செட்டி பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.

வேலம்மாள் நிறைநிலை மேல்நிலைப் பள்ளி என்ற தனியார் பள்ளி ஒன்று பஞ்செட்டி பகுதியில் அமைந்துள்ளது.[7]

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அகத்தீசுவரர் கோயில் ஒன்று பஞ்செட்டி பகுதியில் அமையப் பெற்றுள்ளது.[8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. மாலை மலர் (2019-08-17). "பஞ்சேஷ்டி ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-05.
  2. "PANJETTI Pin Code - 601204, Ponneri All Post Office Areas PIN Codes, Search TIRUVALLUR Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-05.
  3. Tamil Nadu (India) (1982). State Administration Report (in ஆங்கிலம்). Government Central Press.
  4. Irrigation and Power (in ஆங்கிலம்). The Board. 1993.
  5. Preprints of Papers: Third International Conference on Finite Elements in Water Resources, May 19-23, 1980, the University of Mississippi, Oxford (in ஆங்கிலம்). Agricultural Research (Southern Region), Science and Education Administration, U.S. Department of Agriculture. 1980.
  6. Ganesh (2021-01-06). "Sri Agatheeswarar Temple – Pancheshti/ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயில் - பஞ்சேஷ்டி" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-05.
  7. L.குமார். "பொன்னேரி அடுத்த பஞ்செட்டி வேலம்மாள் நிறைநிலை மேல்நிலை பள்ளியில் 21ம் கல்வியாண்டின் என்சிசி,ஜேஆர்சி சாரண சாரணியர் ஆண்டு விழா". thegreatindianews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-05.
  8. "Arulmigu Agatheeswarar Temple, Panchetty - 601204, Tiruvallur District [TM001595].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-05.
  9. "பஞ்செட்டி அகத்தியர் தீர்த்தம் தூர்வார பக்தர்கள் கோரிக்கை - Dinamalar Tamil News". Dinamalar. 2018-04-27. பார்க்கப்பட்ட நாள் 2023-07-05.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்செட்டி&oldid=3749928" இலிருந்து மீள்விக்கப்பட்டது