பஞ்சாப் விளையாட்டு பல்கலைக்கழகம்
குறிக்கோளுரை | Nishe Kar Apni Jeet karon |
---|---|
வகை | மாநில, விளையாட்டுப் பல்கலைக்கழகம் |
சார்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
வேந்தர் | பஞ்சாப் ஆளுநர், பன்வாரிலால் புரோகித் |
துணை வேந்தர் | ஜக்பீர் சிங் சீமா |
அமைவிடம் | , , 30°23′33″N 76°19′04″E / 30.3924261°N 76.3178994°E |
இணையதளம் | mbspsu |
பஞ்சாப் விளையாட்டு பல்கலைக்கழகம் (Punjab Sports University), என்பது அதிகாரப்பூர்வமாக மகாராஜா பூபிந்தர் சிங் பஞ்சாப் விளையாட்டு பல்கலைக்கழகம் என அழைக்கப்படுகிறது. இந்த இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலாவில் அமைந்துள்ளது. இந்த மாநில பல்கலைக்கழகம் உண்டு உறைவிட வகையினைச் சார்ந்தது.[1]
வரலாறு
[தொகு]பஞ்சாபில் விளையாட்டு பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்கிட சூன் 2017-ல் பஞ்சாப் அரசு முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து சூலை 2019-ல் இப்பல்கலைக்கழகத்திற்கு மகாராஜா பூபிந்தர் சிங்கின் பெயரிட முடிவு செய்யப்பட்டது. பின்னர் இப்பல்கலைக்கழகம் ஆகத்து 2019-ல் மகாராஜா பூபிந்தர் சிங் பஞ்சாப் விளையாட்டு பல்கலைக்கழக சட்டம், 2019[2] மூலம் நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து புது தில்லி, பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகாரம் வழங்கியது. இப்பல்கலைக்கழக முதல் துணைவேந்தராக ஜக்பீர் சிங் சீமா நியமிக்கப்பட்டார்.
வளாகம்
[தொகு]பஞ்சாப் விளையாட்டு பல்கலைக்கழகம் பேராசிரியர் குர்சேவாக் சிங் அரசு உடற்கல்வி கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாகத் தொடங்கப்பட்டது. [3] இப்பல்கலைக்கழகத்திற்கு 97 ஏக்கர்கள் (39 ha) நிலம் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள சிதோவால் கிராமத்தில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அருகில் ஒதுக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "State Universities in Punjab". www.ugc.ac.in. University Grants Commission. பார்க்கப்பட்ட நாள் 16 October 2019.
- ↑ "The Maharaja Bhupinder Singh Punjab Sports University Act, 2019". Punjab Gazette. 29 August 2019. பார்க்கப்பட்ட நாள் 16 October 2019.
- ↑ "Against 100 seats, only 35 students enrolled for 1st session in sports university". Hindustan Times. 2019-09-19. பார்க்கப்பட்ட நாள் 2019-10-04.