தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய விளையாட்டு பல்கலைக்கழ்கம்
National Sports University
வகைமத்தியப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2018
துணை வேந்தர்சிறீ ஆர்.சி.மிசுரா
அமைவிடம், ,
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்www.nsu.ac.in

தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம் (National Sports University) இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்திலுள்ள இம்பால் நகரில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகமாகும்.[1][2][3] பிரதமர் நரேந்திர மோடி 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் தேதி இப்பல்கலைக் கழகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.[4][5] 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் விளையாட்டுக் கல்விக்கு கவனம் செலுத்தும் முதல், மற்றும் ஒரே பல்கலைக்கழகம் தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகமாகும்.[6]

விளையாட்டு அறிவியல், விளையாட்டு தொழில்நுட்பம், விளையாட்டு மேலாண்மை, விளையாட்டு பயிற்சி உள்ளிட்ட பல துறைகள் வளர்ச்சியடைய இப்பல்கலைக்கழகம் உதவுகிறது. தொழில்நுட்ப முறை பயிற்சி, உயர்திறன் பயிற்சி போன்றவற்றை அமைத்துக் கொடுத்து விளையாட்டு வீரர்கள் பயன் பெற இப்பல்கலைக்கழகம் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் நவீன விளையாட்டு நூலகம் உள்ளது. தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டு இதழ்கள், அச்சுப் புத்தகங்கள் மற்றும் பல்வேறு பல்லூடக வளங்களைக் கொண்ட மின் நூலகமும் மின்னணு தரவுத்தள வசதிகளும் உள்ளன. தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகத்திற்காக மணிப்புர் அரசு 325.90 ஏக்கர் நிலப்பகுதியை ஒதுக்கியது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 25 July 2015. பார்க்கப்பட்ட நாள் 25 July 2015.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Manipur government starts process of land acquisition for national sports varsity". Daily News and Analysis. 25 November 2014. பார்க்கப்பட்ட நாள் 9 July 2017.
  3. "BJP Conducts Second Consultative Meeting On Sports University Issue". Kangla Online. 6 July 2015. பார்க்கப்பட்ட நாள் 9 July 2017.
  4. "PM lays foundation stone of National Sports University & various development projects at Imphal | DD News". ddinews.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-17.
  5. Karmakar, Rahul (2018-03-16). "Manipur inspires India: NarendraModi" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/news/national/manipur-inspires-india-narendra-modi/article23274879.ece. 
  6. "List of Central Universities included in the UGC list as on 01.11.2019" (PDF). UGC. 1 November 2019. பார்க்கப்பட்ட நாள் 21 November 2019.
  7. "நாட்டின் முதல் தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம்". தினமணி. https://www.dinamani.com/india/2018/jun/03/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2931986.html. பார்த்த நாள்: 18 May 2021. 

புற இணைப்புகள்[தொகு]