பஞ்சாபி அலைந்துழல்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்கித்தான் வெளிநாடுவாழ் பஞ்சாபியர் இந்தியா
پنجابی / ਪੰਜਾਬੀ
மொத்த மக்கள்தொகை
(10 மில்லியன்[1])
மொழி(கள்)
பஞ்சாபிஆங்கிலம்
சமயங்கள்
இசுலாம் இந்து சமயம் சீக்கியம் கிறித்தவம்சைனம்சமயமின்மை
தொடர்புள்ள இனக்குழுக்கள்
இந்தியர் அலைந்துழல்வு, சீக்கிய அலைந்துழல்வு, பாக்கித்தானிய அலைந்துழல்வு, தெற்காசிய அலைந்துழல்வு

பஞ்சாபி அலைந்துழல்வு (Punjabi diaspora) அல்லது வெளிநாடுவாழ் பஞ்சாபியர் பஞ்சாப் பகுதியிலிருந்து உலகின் பிற பகுதிகளுக்கு புலம்பெயர்ந்த பஞ்சாபி மக்கள் இனக்குழுவாகும். பஞ்சாபியர் பாக்கித்தானிய, இந்தியப் புலம்பெயர்ந்தவர்கள் இரண்டிலும் உள்ள மிகப்பெரிய இனக்குழுக்களில் ஒன்றாகும். வெளிநாடுவாழ் பஞ்சாபியரின் மக்கள்தொகை ஏறத்தாழ 10 மில்லியன் ஆகும்; இவர்களில் பெரும்பான்மையோர் பிரித்தானியா, வட அமெரிக்கா, தென்கிழக்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்கின்றனர்.[1]

ஆத்திரேலியா[தொகு]

பஞ்சாபியர் ஆத்திரேலியாவிற்கு பஞ்சாபிலிருந்தும் உலகின் பிற பகுதிகளிலிருந்தும் குடிபெயர்ந்துள்ளனர். பெரும்பான்மையானவர்கள் சீக்கியர்களும் இந்துக்களும் ஆவர்; பஞ்சாபி முசுலிம்கள் சிறுபான்மையினரே.[2]

கனடா[தொகு]

பிரிட்டிசு கொலம்பியாவிலுள்ள இந்திய-கனடியர்களில் 85% பஞ்சாபி சீக்கியர்கள் ஆவர்.[3]

வளைகுடா நாடுகள்[தொகு]

வளைகுடா நாடுகளில், பாக்கித்தானிய வெளிநாடு வாழ்வோரில் பெரிய இனக்குழுவாக பஞ்சாபியர் உள்ளனர்.[4]

ஆங்காங்[தொகு]

ஆங்காங்கிலுள்ள இந்தியரிடையே மிகவும் பொதுவான மொழியாக கண்டோனீயத்தை அடுத்து பஞ்சாபி விளங்குகின்றது.[5] படைத்துறையில் பஞ்சாபியருக்கு மிகுந்த தாக்கம் உள்ளது; பிரித்தானியர் காலத்தில் (19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும்) பஞ்சாபி சீக்கியர்கள், பஞ்சாபி இந்துக்கள் மற்றும் பஞ்சாபி முசுலிம்கள் இரண்டு தனித்தனி படைப்பிரிவுகளில் இருந்தனர். இந்தப் படைப்பிரிவுகள்:

 • பஞ்சாப் படைப்பிரிவு: 25,000 துருப்புகள் (50% முசுலிம், 40% இந்து மற்றும் 10% சீக்கியர்)
 • சீக்கியப் படைப்பிரிவு: 10,000 துருப்புகள் (80% சீக்கியர், 20% இந்து)

1939இல் ஆங்காங் காவல்துறையில் 272 ஐரோப்பியர்கள், 774 இந்தியர்கள் (பெரும்பாலும் பஞ்சாபியர்) மற்றும் 1140 சீனர்கள் இருந்தனர்.[6] Punjabis dominated Hong Kong's police force until the 1950s.[7]

2006ஆம் ஆண்டு அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் கீழ் இந்த முன்னாள் பிரித்தானிய ஆட்புலத்தில் 20,444 இந்தியர்களும் 11,111 பாக்கித்தானியரும் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[8]

கென்யா[தொகு]

கென்யாவின் ஆசியர்களில் பெரும்பான்மையாக குசராத்திகள் இருப்பினும் இரண்டாவது பெரிய இனக்குழுவாக பஞ்சாபியர் உள்ளனர்.[9]

மலேசியா[தொகு]

மலேசிய இந்தியர்களில் பெரும்பான்மையோர் தமிழர்களாக இருப்பினும் பல பஞ்சாபிகள் மலேசியாவிற்கு புலம் பெயர்ந்துள்ளனர். 1993இல் 60, 000 பஞ்சாபியர் மலேசியாவில் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[10] இராபின் கொகென் மலேசியாவிலுள்ள சீக்கியரின் எண்ணிக்கையை 30, 000ஆக (1995) மதிப்பிட்டுள்ளார்.[6] அண்மைய மதிப்பீட்டின்படி 130,000 சீக்கியர் மலேசியாவில் வாழ்கின்றனர்.[11]

நியூசிலாந்து[தொகு]

நியூசிலாந்தில் இந்திய நியூசிலாந்தினரில் பெரிய குழுவாக பஞ்சாபியர் உள்ளனர்.[12]

சிங்கப்பூர்[தொகு]

1980இல் சிங்கப்பூர் இந்தியர்களில் ( இந்திய-சிங்கப்பூர்வாசிகளில் பெரும்பான்மையினரான தமிழர், மலையாளிகளை அடுத்து) மூன்றாவது பெரிய இனக்குழுவாக பஞ்சாபியர் இருந்தனர. இந்திய-சிங்கப்பூர் குடிகளில் பஞ்சாபியர் 7.8% ஆக இருந்தனர்.[13]

தாய்லாந்து[தொகு]

தாய்லாந்தில் வாழும் இந்தியர்களில் பெரும்பான்மையினர் பஞ்சாபியராவர்.[14]

ஐக்கிய இராச்சியம்[தொகு]

சவுத்தால் மாவட்டத்தின் பெயர்ப்பலகை ஆங்கிலத்திலும் பஞ்சாபியிலும் உள்ளது.

ஐக்கிய இராச்சியத்தில், தெற்காசியாவிலிருந்து நேரடியாக புலம் பெயர்ந்தவர்களில் (கரிபியன், பிஜி, மற்ற பகுதிகளிலிருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு குடிபெயர்ந்த தெற்காசியர்களைத் தவிர்த்து) மூன்றில் இருபகுதியினரில் பஞ்சாபியராவர். மற்ற மூன்றில் ஒருபகுதியினர் பெரும்பாலும் குசராத்திகளும் வங்காளிகளும் ஆவர்.[15] தெற்காசிய பிரித்தானிய சீக்கியரிலும் தெற்காசிய இந்து சமூகத்தினரிலும் பஞ்சாபிகள் பெரும்பான்மையினராக உள்ளனர்.

பெரும்பாலான "இருமுறை-புலம்பெயர்ந்தவர்களும்" பஞ்சாபியர் அல்லது குசராத்திகள் ஆவர்.[16]

ஐக்கிய இராச்சியத்து மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சீக்கியர்கள்[தொகு]

ஆண்டு பக்கள்தொகை
1951 10,000
1961 26,000
1971 120,000
1981 216,020
1991 269,000
2001 336,000

[17]

ஐக்கிய அமெரிக்கா[தொகு]

ஐக்கிய அமெரிக்காவில் மாநிலங்கள் வாரியாக பஞ்சாபியர்

ஐக்கிய அமெரிக்காவில் முதன்முதலில் குடியேறிய தெற்காசியர்கள் பஞ்சாபியர் ஆவர்; இவர்கள் பெரும்பாலும் மேற்கு கடலோரத்தில், குறிப்பாக கலிபோர்னியாவில் குடியேறினர்.[18] பாக்கித்தானி அமெரிக்கர்களில் பாதிபேர் பஞ்சாபியராவர்.[19] துவக்கத்தில் அமெரிக்காவில் குடியேறியவர்களில் 85% பேர் சீக்கியர்களாவர்; இவர்களை வெள்ளை அமெரிக்கர்கள் "இந்துக்கள்" என வகைப்படுத்தினர்.[20]கலிபோர்னியாவின் மத்திய பள்ளத்தாக்கில் குடியமர்ந்த இந்தியர்களில் 90% பேர் பஞ்சாபி சீக்கியர்களாவர்.[21]

மேற்சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 http://apnaorg.com/articles/ishtiaq8/ - Punjabis Without Punjabi
 2. Tony Ballantyne. Between Colonialism and Diaspora: Sikh Cultural Formations in an Imperial World. http://books.google.com/books?id=R9PXaUmk-sAC&pg=PA74&d. 
 3. Mahendra Gaur. Foreign policy annual. பக். 317. http://books.google.com/books?id=6lXZfWr68FAC&pg=PA317&d. 
 4. Ayesha Jalal (1995). Democracy and Authoritarianism in South Asia: A Comparative and Historical Perspective. Cambridge University Press. http://books.google.com/books?id=GNJHlFTPBT0C&pg=PA194&d. [தொடர்பிழந்த இணைப்பு]
 5. Martha Carswell Pennington (1998). Language in Hong Kong at Century's End. Hong Kong University Press. பக். 219. http://books.google.com/books?id=vvCWT8XHK8QC&pg=PA231&d. 
 6. 6.0 6.1 Robin Cohen (1995). The Cambridge Survey of World Migration. Cambridge University Press. பக். 70. http://books.google.com/books?id=di-dugl7o4kC&pg=PA70&d. 
 7. Carol R. Ember; Melvin Ember; Ian A. Skoggard (2004). Encyclopedia of Diasporas: Immigrant and Refugee Cultures Around the World. Volume I: Overviews and Topics; Volume II: Diaspora Communities. Springer. http://books.google.com/books?id=7QEjPVyd9YMC&pg=PA275&d. 
 8. Hong Kong SAR Government (2007). Census and Statistics Department 2006 Population By-census: Section A, Table A105. Hong Kong SAR Government இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303214021/http://www.bycensus2006.gov.hk/en/data/data3/statistical_tables/index.htm#A1. பார்த்த நாள்: 2016-07-23. 
 9. Wilfred Whiteley. Language in Kenya. http://books.google.com/books?id=GHlkAAAAMAAJ&d. 
 10. Amarjit Kaur (1993). Historical Dictionary of Malaysia. Scarecrow Press. http://books.google.com/books?id=G226AAAAIAAJ&d. 
 11. http://apnaorg.com/articles/ishtiaq8/
 12. "Indians - Indian communities - Te Ara Encyclopedia of New Zealand".
 13. Language Change Via Language Planning: Some Theoretical and Empirical Aspects with a Focus on Singapore. பக். 77 இம் மூலத்தில் இருந்து 2017-02-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170216033822/https://books.google.com/books?id=zRXR1EVYIHkC&pg=PA77&vq=Punjabis&dq=Punjabis+in+Singapore&source=gbs_search_s&cad=0#PPA77,M1. பார்த்த நாள்: 2016-07-24. 
 14. Kernial Singh Sandhu; A. Mani. Indian Communities in Southeast Asia. http://books.google.com/books?id=TeExjdWUmJYC&pg=PA915&d. 
 15. Roger Ballard, Marcus Banks (1994). Desh Pardesh. C. Hurst & Co. Publishers. பக். 19–20. http://books.google.com/books?id=74ZVFb37zuIC&pg=PA20&d. 
 16. Peter J. Claus; Sarah Diamond; Margaret Ann Mills. South Asian Folklore: An Encyclopedia : Afghanistan, Bangladesh, India, Nepal, Pakistan, Sri Lanka. பக். 158. http://books.google.com/books?id=ienxrTPHzzwC&pg=PA158&d. 
 17. http://books.google.co.uk/books?id=GDMTeC_WB0oC&pg=PA23&dq=british+sikhs+1951
 18. Parmatma Saran, Edwin Eames. The New Ethnics: Asian Indians in the United States. http://books.google.com/books?id=f0RmIjewCxkC&pg=PA127&d. 
 19. http://www.everyculture.com/multi/Le-Pa/Pakistani-Americans.html - Under "Language"
 20. David M. Reimers (2005). Other Immigrants: The Global Origins of the American People. NYU Press. பக். 61. http://books.google.com/books?id=F-NNO9jGfIQC&pg=PA61&d. 
 21. Margaret A. Gibson. Accommodation Without Assimilation. http://books.google.com/books?id=zz0HRk65MwUC&pg=PA2&d. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாபி_அலைந்துழல்வு&oldid=3528844" இலிருந்து மீள்விக்கப்பட்டது