பங்கபுரம்

ஆள்கூறுகள்: 14°55′00″N 75°16′00″E / 14.9167°N 75.2667°E / 14.9167; 75.2667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பங்கபுரம்
அரசர்களின் நகரம்
நகரம்
பங்கபுரம் is located in கருநாடகம்
பங்கபுரம்
பங்கபுரம்
கர்நாடகாவில் பங்கபுரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 14°55′00″N 75°16′00″E / 14.9167°N 75.2667°E / 14.9167; 75.2667
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்ஆவேரி
பரப்பளவு
 • மொத்தம்8 km2 (3 sq mi)
ஏற்றம்578 m (1,896 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்20,264
 • அடர்த்தி2,533/km2 (6,560/sq mi)
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்581 202
தொலைபேசி இணைப்பு எண்08378
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுஐஎன்-கேஏ
வாகனப் பதிவுகேஏ
இணையதளம்karnataka.gov.in

பங்கபுரம் (Bankapura) என்பது இந்திய மாநிலமான கருநாடகாவின் ஆவேரி மாவட்டத்திலுள்ள ஓர் பேரூராட்சியாகும். இது சிகான் வட்டத்திலுள்ளது. புனே-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை எண்-4 இலிருந்து 2.5 கி.மீ தூரத்திலும், ஆவேரி நகரிலிருந்து 22 கி.மீ. தூரத்திலும், ஹூப்ளி-தார்வாடிலிருந்து 45 கி.மீ தூரத்திலும் உள்ளது. ஒரு வரலாற்று தளமான, பங்கபுரம் நாகேசுவரர் கோயில், பங்கபுரம் கோட்டை, பங்கபுரம் மயில்கள் சரணாலயம் ஆகியவற்றிற்கு பிரபலமானது. இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளரான கனகதாசரின் பிறப்பிடமான பாதா, பங்கபுரத்துக்கு அருகில் உள்ளது.

அறிமுகம்[தொகு]

ஆவேரி மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பிரபலமான தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஆவேரி, சித்தேசுவர் கோயில், கலகநாதாவிலுள்ள கலகநாதேசுவர் கோயில், இரணபென்னூரின் சௌத்யாயதானபுராவில் உள்ள சிவன் கோயில், அங்கலில் உள்ள தாரகேசுவர் கோயில் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

வரலாறு[தொகு]

கர்நாடகாவின் பங்கபுரத்திலுள்ள நாகரேசுவரர் கோவிலில் காணப்படும் பழைய கன்னட கல்வெட்டு (11 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி - 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி)

சாளுக்கியர்களின் ஆட்சியின்போது, இங்கு பல கோயில்கள் கட்டப்பட்டன. ஆனால் சுமார் 1567இல் பிஜப்பூர் சுல்தான் அலி ஆதில் சாகியின் படையெடுப்பின் போது பெரும்பாலான கோயில்கள் அழிக்கப்பட்டன. இப்போது பாழடைந்த நிலையில் உள்ள ஒரு கோட்டை, இரங்கநாத நாகரேசுவரர் கோயில் மட்டுமே உள்ளது, இதில் சாம்பல் கல்லில் செதுக்கப்பட்ட 66 தூண்கள் உள்ளன. கோட்டையில் ஒரு பள்ளி வாசலும் உள்ளது. இந்த இடம் சமணர்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். ஒரு சமண மத உரையான ஆதிபுராணம், இங்கே இயற்றப்பட்டது. பங்கபுரம் கோட்டையானது பொ.ச. 454 களிலிருந்து பனவாசிகளின் கதம்பர்கள், கங்கர்கள், சோழர்கள், இராஷ்டிரகூடர்கள், போசசளர்கள், சாளுக்கியர்கள், விஜயநகர அரசர்கள், பிஜப்பூர் சுல்தான்கள், ஐதர் அலி, திப்பு சுல்தான் போன்றோரால் ஆளப்பட்டு வந்துள்ளது. 9ஆம் நூற்றாண்டின் போது, பங்கபுரத்துக்கு பங்கேயராசாவின் (பொ.ச. 898 இல்) பெயரிடப்பட்டது. அவர் இராஷ்டிரகூட மன்னர் முதலாம் அமோகவர்சனின் நிலப்பிரபுத்துவமாக இருந்தார். 11ஆம் நூற்றாண்டில் கதம்பர்கள் பொறுப்பேற்றனர். அதைத் தொடர்ந்து போசள மன்னன் விஷ்ணுவர்த்தனன் ஆட்சி செய்தான்.

பாமினியர்களின் படையெடுப்பு

16 ஆம் நூற்றாண்டில், பாமினி சுல்தானியர்கள் பங்கபுரத்தை தாக்கினர். பீஜப்பூரைச் சேர்ந்த முஸ்தபா கான் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்த போருக்குப் பிறகு கோட்டையை கைப்பற்றினார். ஐதர் அலியும் திப்புவும் கைப்பற்றுவதற்கு முன்பு சாவனூர் மற்றும் மராட்டியர்களின் நவாப்கள் குறுகிய காலத்திற்கு ஆட்சி செய்தனர். பின்னர், இது ஆங்கிலேயர் வசம் சென்றது. [1]

கல்வெட்டுகள்

இங்குள்ள நாகரேசுவரர் கோவிலின், முகமண்டபத்தின் நுழைவாயிலில், பழைய கன்னடத்தில் எழுதப்பட்ட பெரிய தெளிவான கல்வெட்டுகள் உள்ளன.

கன்னட இலக்கியத்தின் சிறந்த கவிஞரான இரன்னா, தனது ஆசிரியரான அஜித்சேனாச்சார்யாவை சந்திக்க இங்கு வந்ததாக அறியப்படுகிறது. [2]

பங்கபூர் கோட்டை[தொகு]

பாமினி சுல்தானியர்களால் கைப்பற்றப்பட்ட பாழடைந்த பங்கபுரம் கோட்டையின் உள்ளே, ஆரவட்டு கம்படா குடி என்று அழைக்கப்படும் சாளுக்கியர்களால் கட்டப்பட்ட கோயில் ஒன்று உள்ளது. இந்த ஊர் ஆட்சியாளர்களால் தொடர்ச்சியாக பல போர்கள் நடத்தப்பட்ட ஒரு முக்கியமான வரலாற்று இடமாகும்.

நாகரேசுவர் கோயில்[தொகு]

பங்கபுரம் நாகரேசுவரர் கோயில் கதவு வேலைப்பாடுகள்
நாகரேசுவரர் கோயில்

இங்குள்ள கோட்டை பகுதியில் 66 தூண்களைக் கொண்ட நாகரேசுவர் கோயில் உள்ளது (உள்ளூர்வாசிகள் இதை ஆரவட்டு கம்படா குடி என்று அழைக்கின்றனர் - அதாவது கன்னடத்தில் 60 தூண்கள் கோயில் என்று பொருள்) 11 ஆம் நூற்றாண்டில் சாளுக்கிய பாணியில் கட்டப்பட்டது. நன்கு செதுக்கப்பட்ட பல தூண்கள் உள்ளன. கோட்டை பகுதி 139.10 ஏக்கர் (0.5629 கிமீ 2) நிலப்பரப்பை உள்ளடக்கியது, இது 52.10 ஏக்கர் (210,800 மீ 2) பிரபலமாக அறியப்பட்ட மயில்களின் வனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது மூன்று தசாப்தங்களாக மயில்களின் தங்குமிடமாகும். எண் 16 கல்வெட்டுகளின்படி, இந்த இடத்தின் வரலாறு குறித்த குறிப்புகள் உள்ளன. இது சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த கோயில் ஒரு காலத்தில் சமண மதம் பற்றிய ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான மையமாக இருந்தது. முஸ்தபா கானின் ஆட்சியின் போது, கோயில் மண்டபத்தின் பின்புற மூலைகள், வெளிப்புற சுவர்களில் செதுக்கப்பட்டவை உட்பட அனைத்தும் முற்றிலும் சேதமடைந்தன. ஆனால் தூண்கள், கலைச் செதுக்கல்கள் , கூரை வடிவமைப்புகள் அப்படியே உள்ளன.

மயில் சரணாலயம்[தொகு]

பங்கபுரம் நாகரேசுவரர் கோயில்

பங்கபுரம் மயில் சரணாலயம் கருநாடகாவிலுள்ள இரண்டு மயில் சரணாலயங்களில் ஒன்றாகும். ஒன்று ஆவேரி மாவட்டத்தில் பங்கபுரம் கோட்டையின் உள்ளேயும், மற்றொன்று மண்டியா மாவட்டத்தில் ஆதிச்சுஞ்சனகிரியில் அமைந்துள்ளது.

புள்ளிவிவரங்கள்[தொகு]

2001 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி,[3] பங்கபுரத்தின் மக்கள் தொகை 20,264 ஆகும். ஆண்கள் 53% மற்றும் பெண்கள் 47%. ஊரின் சராசரி கல்வியறிவு விகிதம் 59% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விடக் குறைவு; ஆண்களில் 58% மற்றும் பெண்கள் 42% கல்வியறிவு பெற்றவர்கள். மக்கள் தொகையில் 14% 6 வயதுக்குட்பட்டவர்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Many pillared wonder - Nagareshwara temple at Bankapura". B V Prakash - Deccanherald. பார்க்கப்பட்ட நாள் 2013-06-03.
  2. "Archived copy". Archived from the original on 1 November 2011. பார்க்கப்பட்ட நாள் 9 June 2013.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பங்கபுரம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்கபுரம்&oldid=3136369" இலிருந்து மீள்விக்கப்பட்டது