பகுப்பு பேச்சு:சென்னை நகரத்தந்தைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மேயர்களை அதிகாரபூர்வமாகத் தமிழில் எவ்வாறு அழைக்கிறார்கள்?--Kanags \உரையாடுக 06:09, 3 அக்டோபர் 2015 (UTC)

விளக்கம்[தொகு]

மேயரை மாநகர தந்தை என்று முன்பு குறிப்பிட்டனர். ஆனால் அதைவிட எளிதான மேயர் என்ற ஆங்கிலச் சொல்லையே தமிழ்ச்சொல்லாக ஆக்கி மேயர் எனெறால் மேன்மையானவர் என்ற போருள் தந்து பயன்படுத்துகின்றனர். இந்தச் சொல்லே பொருத்தமாக எனக்குப் படுகிறது.arulghsrArulghsr (பேச்சு) 06:20, 3 அக்டோபர் 2015 (UTC)

அப்படியானால் மேயர் என்று தான் அதிகாரபூர்வமாக அழைக்கிறார்களா? மேயருக்கு அதிகாரபூர்வ வலைத்தளம் ஏதும் உள்ளதா? முன்னர் ஸ்டாலின் மேயராக இருந்த போது ஊடகங்கள் சென்னை நகர முதல்வர் என்று குறிப்பிட்டதாக ஞாபகம்.--Kanags \உரையாடுக 06:26, 3 அக்டோபர் 2015 (UTC)

சென்னை நகர முதல்வர் என்ற வழக்கு தமிழகத்தில் இல்லை மு. க. ஸ்டாலினின் இனையதளத்திலும்[1] மேயர் என்ற சொல்லே கையாளப்பட்டுள்ளது.arulghsrArulghsr (பேச்சு) 06:44, 3 அக்டோபர் 2015 (UTC)

அரசும் ஊடகங்களும் பிழையான தமிழை அல்லது ஆங்கிலத்தை தமிழாக்குவது இயல்பு என்பதால், அகராதி (விக்சனரியில் mayor) விக்கி நியமத்தின்படி (விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு- விக்கிப்பீடியா பக்கங்களின் பெயர்கள் / (கட்டுரைத்தலைப்புகள்) தமிழில் இருக்க வேண்டும்.) பெயர் மாற்றப்பட்டுள்ளது. --AntanO 02:20, 10 சூன் 2016 (UTC)

இந்த பெயர் மாற்றைத்தை எதிர்க்கிறேன் சென்னை மேயர் என்ற சொல்தான் அதிகாரப்பூர்வ சொல் சென்னை மாநகராடசி இணையதளத்தில் காண்க [2] பழையபடி சென்னை மேயர்கள் என பெயர் மாற்றவேண்டும் arulghsrArulghsr (பேச்சு) 15:05, 10 சூன் 2016 (UTC)

தமிங்கில பெயர்களை த.வி ஏற்பதில்லை. எனவே மாற்றம் தேவையில்லை. மேயர் என்பது அதிகாரபூர்வ தமிழ்ச் சொல்லா? --AntanO 15:12, 10 சூன் 2016 (UTC)

ஆம் இது அதிகாரப்பூர்வ சொல்தான் மேலே நான் சுட்டிய சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும். அல்லது மாநகர தந்தைதான் அதிகாரப்பூர்வ சொல் என்பதற்கு தாங்கள் ஆதாரத்தை சுட்டவும். நன்றி arulghsrArulghsr (பேச்சு) 15:19, 10 சூன் 2016 (UTC)

அகராதியில் இருந்து காட்டுங்கள். --AntanO 15:22, 10 சூன் 2016 (UTC)
அருளரசன் அவர்களே நகரத்தந்தை என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப் பட்ட சொல்லே. தமிழ்நாடு அரசு இதனை அங்கிகரிக்க வேண்டும் என்றில்லை, தமிழர்கள் நாம் அங்கிகரித்தாலே போதும். சிறியதாக உள்ள காரணத்தினால் மேயர் என்றே நாளிதழ்களும், இணையதளங்களும் எழுதுகின்றன. எனவே வாதங்களில் நேரத்தினை வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமாக நேரத்தினை செலவிடுவோம். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:29, 10 சூன் 2016 (UTC)