உள்ளடக்கத்துக்குச் செல்

நீலப் பைங்கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீலப் பைங்கிளி
Malabar parakeet
நீலப் பைங்கிளி-ஆண்
நீலப் பைங்கிளி - பெண்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
சிட்டாசிபார்மிசு
குடும்பம்:
சிட்டாசிடே
பேரினம்:
சிட்டாகுலா
இனம்:
P. columboides
இருசொற் பெயரீடு
Psittacula columboides
(விகோர்சு, 1830)[2]

நீலப் பைங்கிளி (Psittacula columboides) என்பது தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளைச் சேர்ந்தந்த ஒரு கிளி இனமாகும்.

விளக்கம்

[தொகு]

மைனா அளவுள்ள இது சற்று மெளிந்த தோற்றம் கொண்டது. நாண்ட கூரிய வாலுடன் சுமார் 38 செ.மீ. நீளம் கொண்டது. மேல் அலகு நல்ல வாழ்ந்த சிவப்பு நிறத்திலும், கீழ் அலகு கருத்த முனையோடு மங்கிய சிவப்பாக இருக்கும். விழிப்படலம் மஞ்சள் நிறத்திலும், கால்கள் பசுமை தோய்ந்த ஈய நிறத்தில் இருக்கும். தலையும், முதுகும், மார்பும் இளஞ்சிவுப்புத் தோய்ந்த சாம்பல் நிறமாக இருக்கும். நீலம்தோய்ந்த பச்சையும், கருப்புமான கோடு பின் தலையில் இருக்கு காணலாம். கீழ் முதுகும், பிட்டமும், வால் மேல் இறகுகளும் பசுமை கலந்த நீலமாக இருக்கும். வாலின் நடு இறகும், இறக்கைகளும் நீல நிறத்தில் இருக்கும். வால் முனை மஞ்சளாக இருக்கும்.

பெண் பறவைக்கு பின் தலையில் கருப்புக்கோடு இருக்காது. மார்பும் முதுகும் ஆண் பறவையைவிட சற்று நிறங்குன்றிக் காணப்படும்.

காணப்படும் பகுதிகளும் உணவும்

[தொகு]

மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகளில் பசுமைமாறாக் காடுகளில் 500மீ முதல் 1500மீ வரை காணலாம். மலையடிவாரங்களில் காணப்படும் செந்தலைக் கிளியையும் இதனையும் சில சூழல்களில் ஒன்றாகக் காணலாம். காட்டுவாசிகள் குடியிருப்பைச் சார்ந்த அவர்களது பயிடும் நிலங்களிலும் கைவிடப்பட்ட காபி, ரப்பார் தோட்டங்களிலும் 4 முதல் 5 வரையான குழுவாகத் திரியும். தானியங்கள், விதைகள், கொட்டைகள் ஆகியவற்றை உணவாகக் கொள்ளும். இது மலைவாழ்மக்கள் பயிரிடும் நிலங்களிலும் விளைச்சலின்போது அழிவை உண்டு பண்ணும். குரல் முன்னதை ஒத்ததெனினும் சற்றுக் கடூரமான தொனியில் ஒலிக்கும்.</ref> and possibly further east in the Kolli Hills.[3]

இனப்பெருக்கம்

[தொகு]

சனவரி முதல் மார்ச் வரை மரங்களில் குடைவுசெய்து நான்கு வெள்ளை முட்டைகள் இடும். மரங்கொத்தி, குக்குறுவான் கூடுகளையும் திருத்தி அமைத்துப் பயன்படுத்திக் கொள்வதும் உண்டு. [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Psittacula columboides". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Vigors, NA (1830) Notice on some new species of birds. Zoological Journal 5:273-275.
  3. Karthikeyan, S (1996). Bird attracting trees and birds of Shevaroys and Kolli Hills. 36. பக். 49–51. https://archive.org/stream/NLBW36_3#page/n8/mode/1up. 
  4. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க . ரத்னம் -மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:69

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Psittacula columboides
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலப்_பைங்கிளி&oldid=3779125" இலிருந்து மீள்விக்கப்பட்டது