நாதபுரம் இரிங்கண்ணூர் சிவன் கோயில்
நாதபுரம் இரிங்கண்ணூர் சிவன் கோயில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் இரிங்கண்ணூர் கிராமத்தில் (எடச்சேரி பஞ்சாயத்து) அமைந்துள்ள சிவபெருமானுக்கென அமைக்கப்பட்ட ஒரு பழமையான இந்து கோயில் ஆகும். இக்கோயிலில் தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கிய நிலையில் தனிச்சன்னதியில் உள்ளார். பரசுராமர் இக்கோயிலின் மூலவரை அமைத்ததாக நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்றன. கேரளாவில் உள்ள 108 புகழ்பெற்ற சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.[1] [2] 108 சிவன் கோயில்களில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று திருக்கபாலீஸ்வரம் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[3]
கோயில் கட்டிடக்கலை
[தொகு]கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மிகப்பழமையான கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[4] நாதபுரத்தில் எடச்சேரி ஊராட்சியில் இக்கோயில் அமைந்துள்ளது. மிகவும் அழகாக உள்ள இந்தக்கோயில், மகா கோயில்களைப் போலக் கட்டப்பட்டுள்ளது. மூலவரின் கருவறையானது உரிய கட்டுமான விகிதத்தில் கம்பீரமாக கேரளக் கோயில் கட்டிடக்கலைப் பாணியில் உள்ளது. இரண்டு அடுக்குகள் கொண்ட மூலவர் சன்னதியானது செவ்வக வடிவக் கூரையுடன் உள்ளது. கருவறையின் நான்கு பக்கங்களிலும் கதவுகள் உள்ளன. இருப்பினும் கிழக்குப் பக்க கதவுகள் மட்டும் பயன்பாட்டில் உள்ளன.
கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கில் ஒரு பெரிய கோபுரம் இருந்தது. கோயிலின் மூலவரான சிவன் சதாசிவன் வடிவில் உள்ளார். இங்குள்ள மூலவருக்கு (சிவலிங்கம்) இரண்டு கண்கள் மட்டுமே உள்ளன. கோயில் அமைந்துள்ள இரிங்கண்ணூர் என்ற இந்த கிராமத்தின் பெயரானது இரு (இரண்டு=ரண்டு) +கண்ணு (கண்கள்=கண்கள்) +ஓர் (இடம்=ஊர்) கிராமப் பெயர் ) உருவானது என்பதிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது; . வடகரா மாவட்டத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய பாரம்பரிய கட்டுமானத்தில் இந்தக் கோயிலும் ஒன்றாகும். கோயிலும், குளமும் அண்மையில் புதுப்பிக்கப்பட்டன.
துணைத் தெய்வங்கள்
[தொகு]மேலும் காண்க
[தொகு]- 108 சிவன் கோயில்கள்
- கேரளாவின் கோவில்கள்
- கடச்சிரா ஸ்ரீ திருக்கபாலம் சிவன் கோவில்
- நிரணம் திருக்கபாலீஸ்வரம் தட்சிணாமூர்த்தி கோவில்
படத்தொகுப்பு
[தொகு]-
மூலவர் கருவறை
-
திருச்சுற்று
-
அம்பலவட்டத்திலிருந்து கருவறை
-
இருதள கருவறையின் பக்கவாட்டுத்தோற்றம்
-
கருவறை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "108 Shiva Temples in Kerala created by Lord Parasurama - 46. Trukkapaleeswaram Mahadeva Temple Nadapuram".
- ↑ "List of 108 Siva Temples in Kerala".
- ↑ "108 Shiva temples of Kerala - Worshiped by Parasurama Information 46. Trukkapaleeswaram Mahadeva Temple Nadapuram, 47. Trukkapaleeswaram Mahadeva Temple Peralassery, 48. Trukkapaleeswaram Mahadeva Temple Niranam".
- ↑ "The New Indian Express (Daily) Published: Published: 11th July 2014 08:52 AM IST".