உள்ளடக்கத்துக்குச் செல்

கடச்சிரா அருள்மிகு திருக்கபாலம் சிவன் கோவில்

ஆள்கூறுகள்: 11°49′33″N 75°27′40″E / 11.8258205°N 75.4611646°E / 11.8258205; 75.4611646
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடச்சிரா அருள்மிகு திருக்கபாலம் சிவன் கோவில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:கண்ணூர்
அமைவு:பேரளசேரி, கடச்சிரா
ஆள்கூறுகள்:11°49′33″N 75°27′40″E / 11.8258205°N 75.4611646°E / 11.8258205; 75.4611646
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரள பாணி

கடச்சிரா அருள்மிகு திருக்கபாலம் சிவன் கோவில், இந்தியாவின் கேரள மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தில் பெரளசேரியில், அஞ்சரகண்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும்.

கடச்சிரா அருள்மிகு திருக்கபாலம் சிவன் கோவில்

கோவில்[தொகு]

இது ஒரு பழமையான இந்து சமயக் கோவிலாகும். இந்த ஆலயம் தட்சிணாமூர்த்தியின் உறைவிடம் ஆகும். சிவபெருமானின் அம்சமாகக் கருதப்படும் தட்சிணாமூர்த்தி அனைத்து வகையான அறிவுக்கும் குரு ஆவார்.[1] [2] இக்கோவிலில், ஒன்றுக்கொன்று அருகருகே, இரண்டு கிழக்கு நோக்கிய சன்னதிகள் உள்ளன. கோவிலின் தென்புறமுள்ள சன்னதியில் அருள்மிகு திருக்கபாலேச்வரர் (சிவன்) குடிகொண்டுள்ளார். வடபுறம் உள்ள சன்னதியில் சிவபெருமான் யோகவடிவில் காட்சி தருகிறார்.

வரலாறு[தொகு]

நாட்டுப்புறக் கதைகளின்படி, பரசுராம முனிவர் இச்சிலையை நிறுவியதாகக் கருதப்படுகிறது. கேரளாவில் உள்ள 108 புகழ்பெற்ற சிவன் கோவில்களின் இதுவும் ஒன்று. [3] [4] 108 சிவாலயங்களுள் குறிப்பிடப்படும் மூன்று திருக்கபாலீஸ்வரம் கோவில்களில் இதுவும் ஒன்று. மற்ற இரண்டு சிவன் கோவில்கள் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள நிரணம் (நிரணம் திருக்கபாலீஸ்வரம் தட்சிணாமூர்த்தி கோவில்) மற்றும் கோழிக்கோடு மாவட்டத்தில் நாதாபுரம் (நாதபுரம் இரிங்கன்னூர் சிவன் கோவில்) ஆகியனவாகும். [5]

அமைவிடம்[தொகு]

கண்ணூர் - கூத்துபரம்பா மாநில நெடுஞ்சாலையில், பேரளச்சேரி சந்திப்புக்கு அருகில் உள்ள கடச்சிராவில் இக்கோவில் அமைந்துள்ளது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேலும் காண்க[தொகு]

கோவில் புகைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thrikkapaleswaram - Siva Temple". www.shaivam.org.
  2. Dictionary of Hindu Lore and Legend (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-51088-1) by Anna Dallapiccola
  3. "108 Shiva Temples in Kerala created by Lord Parasurama - 47. Trukkapaleeswaram Mahadeva Temple Peralassery". www.vaikhari.org.
  4. "List of 108 Siva Temples in Kerala". www.thekeralatemples.com.
  5. "108 Shiva temples of Kerala - Worshiped by Parasurama Information 46. Trukkapaleeswaram Mahadeva Temple Nadapuram, 47. Trukkapaleeswaram Mahadeva Temple Peralassery, 48. Trukkapaleeswaram Mahadeva Temple Niranam". www.vaikhari.org.