நாட்சி ஜெர்மனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நாசி ஜேர்மனி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜெர்மன் பேரரசு
Großdeutsches Reich
1933–1945
கொடி தேசிய சின்னங்கள்
குறிக்கோள்
"Ein Volk, ein Reich, ein Führer."
தமிழில்: ஒரு மக்கள், ஒரு நாடு, ஒரு தலைவர்
நாட்டுப்பண்
1943 வரையான நாசி ஜெர்மனி.
தலைநகரம் பேர்லின்
மொழி(கள்) ஜெர்மன் மொழி
அரசாங்கம் தனிக் கட்சி ஆட்சி, சர்வாதிகாரம்
நாட்டுத் தலைவர்
 -  1925 – 1934 Paul von Hindenburg (குடியரசுத் தலைவர்)
 -  1934 – 1945 அடோல்ஃப் ஹிட்லர் (ஃபியூரர்)
 -  1945 Karl Dönitz (குடியரசுத் தலைவர்)
முதல்வர்
 -  1933 – 1945 அடோல்ஃப் ஹிட்லர்
 -  1945 ஜோசப் கோயபல்சு
 -  1945 Lutz Graf Schwerin von Krosigk
வரலாற்றுக் காலம் போர்களுக்கு இடைப்பட்ட காலம்/இரண்டாம் உலகப் போர்
 -  Machtergreifung[1] 30 சனவரி 1933
 -  Gleichschaltung 27 பெப்ரவரி 1933
 -  Anschluss 13 மார்ச் 1938
 -  போலந்து மீதான ஆக்கிரமிப்பு 1 செப்டெம்பர் 1939
 -  கலைப்பு 8 மே 1945
பரப்பளவு
 -  1937 [2] 6,33,786 km² (2,44,706 sq mi)
மக்கள்தொகை
 -  1937 est.[3] 6,93,14,000 
     அடர்த்தி 109.4 /km²  (283.3 /sq mi)
நாணயம் றைஹ்ஸ்மார்க்
முந்தையது
பின்னையது
வைமர் குடியரசு
சார் (நாடுகளின் கூட்டமைப்பு)
முதல் ஆஸ்திரியக் குடியரசு
செக்கோசிலவாக்கியக் குடியரசு (1918–1938)
Klaipėda Region
டான்சிக் விடுதலை பெற்ற நகர்
இரண்டாம் போலியக் குடியரசு
இயுப்பென்-மல்மெடி
லக்சம்பர்க்
அல்சாஸ்-லோரைன்
யூகோஸ்லாவிய இராச்சியம்
ஜேர்மனியில் கூட்டுப்படைகளின் ஆக்கிரமிப்பு வலயங்கள்
கூட்டுப்படை நிர்வாகத்தின் கீழான ஆஸ்திரியா
மூன்றாம் செக்கோசிலவாக்கிய குடியரசு
மக்கள் போலியக் குடியரசு
அல்சாஸ்-லொரைன்
இயுப்பென்-மால்மெடி
லக்சம்பர்க்
கலினின்கிராட் ஒப்லாஸ்து
சார் காப்புப்பகுதி
யூகோஸ்லாவிய சோசலிச கூட்டாட்சிக் குடியரசு

நாஜி ஜெர்மனி அல்லது நாட்சி ஜெர்மனி (Nazi Germany) என்பது அடால்ப் ஹிட்லர் மற்றும் அவரது நாஜி கட்சியின் கீழ் இருந்த ஜெர்மனி நாட்டை குறிக்க வழங்கப்படும் ஆங்கிலப்பெயராகும். ஹிட்லர் ஜெர்மனியை 1933 முதல் 1945 ஆம் ஆண்டு வரை சர்வாதிகாரியாக ஆண்டார். இவரது ஆட்சிக்காலத்தில் ஜெர்மனி உலகின் பெரிய பாசிச சக்தியாக உருவெடுத்தது.

ஹிட்லரின் நாடுபிடிக்கும் ஆசையால் ஐரோப்பா முழுவதும் பதட்டம் நிலவியது. இது இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்டது. போர் காலத்தில் இந்நாடு மனித குலத்துக்கு எதிரான குற்றச் செயல்களில் பெருமளவில் ஈடுபட்டது. நாஜி படைகள் இரண்டாம் உலகப்போரில் தோற்கடிக்கப்பட்ட பின்பு நாஜிக்களின் ஆட்சி ஜெர்மனியில் முடிவுக்கு வந்தது.

வரலாறு (கண்ணோட்டம்)[தொகு]

இரண்டாம் உலக மகாயுத்தம்: 1939-1945[தொகு]

1930 ஆம் ஆண்டின் பின் சர்வாதிகாரியான ஹிட்லர் பலநாடுகளில் தாக்குதல்களை நடத்தில் அந்நாடுகளை தன் வசப்படுத்தினார், அவ் வேளையில் செப்டம்பர் முதலாம் திகதி 1939 ஆம் ஆண்டு ஜெர்மன் படைகள் போலந்து நாட்டை தாக்குதல் நடத்தின, அப்பொழுதே இரண்டாம் உலக மகாயுத்தம் பல மில்லியன் பட்டாளங்களுடன் ஆரம்பமானது. ஹிட்லர் போலந்தை 59,000 படை வீரர்களைக் கொண்டு இலகுவில் கைப்பற்றினார். குறைந்த தொழில்நுட்பம் காரணமாகப் போலந்து 900,000 வரையிலான பண்த்தொகையை இழந்தது.

ஹிட்லர் மேலும் நாடுகளைக் கைப்பற்றும் நோக்கைத் தொடர்ந்தார். பிரான்சில் நடந்த போரின் போது ஹிட்லர் பிரான்சுவை கைப்பற்றினார். ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி 1939 ஆம் ஆண்டு ஹிட்லர் ஐக்கிய இராச்சியத்திற்கு ஓர் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். பல நாடுகள் தன் வசம் இருப்பதாகவும் ஐக்கிய இராச்சியத்தையும் போரை தடுத்து நிறுத்த தம்மிடம் சரணடையும் படியும் இல்லாவிடின் அவர்கள் மீது படையெடுப்பதாகவும் அக்கடிதத்தில் கூறியிருந்தார், எனினும் அக்காலத்தில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சேர்ச்சில் மறுத்துவிட்டார், அன்றிலிருந்தே இரண்டாம் உலக மகா யுத்தம் ஆரம்பமானது. ஐக்கிய இராச்சியப் போர் 1940 ஆம் ஆண்டு ஜூலையில் இருந்து செப்டம்பர் வரை முழுவதும் நீடித்தது. இறுதியில் யுத்தம் ஜெர்மானிய விமான படைக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது. மீண்டும் சேர்மனி பின்வாங்கியது. ஹிட்லர் யுத்தத்தில் தோற்றதால் கவலையும் சீற்றமும் அடைந்தார். இன்று லண்டன் மீதான செருமனியின் குண்டுவீச்சுத் தாக்குதல் ஆரம்பமானது ஐக்கிய இராச்சிய விமானம் ஒன்று செருமானிய நகரம் ஒன்றை தாக்கியது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

ஹிட்லர் சோவியத் யூனியனை தக்குவதற்கு ஆணையிட்டார். எனவே செருமானியப் படைகள் 1941 ஆம் ஆண்டு சூன் மாதம் 22ஆம் திகதி குளிர்காலத்தில் சோவியத் யூனியனை நோக்கிப் புறப்பட்டனர். அப்போது ரஷ்யக் குளிர் கடுமையாக இருந்ததால் பல படை வீரர்கள் உறைந்து விட்டனர். ஸ்ராலின்கிராட் எனும் இடத்தில் சோவியத்துகளுடன் நடந்த போர் நடக்கும் வரை சோவியத்துகளை ஹிட்லரின் படை ஒவ்வொரு போரிலும் வென்று கொண்டே சென்றது. ஸ்ராலின்கிராட் எனும் இடத்தில் சோவியத்துகளுடன் நடந்த போர் நடக்கும் முன் ஒவ்வொரு போரிலும் ஒரு செருமானிய படைவீரன் இறந்தால் அதற்குச் சமனாக 5 சோவியத் யூனியன் படைவீரர்கள் இறந்தனர். எனினும் ஸ்ராலின்கிராட் எனும் இடத்தில் நடந்த யுத்தத்தில் ஒரு சோவியடத்து வீரனுக்கு ஒரு செருமானிய வீரன் என்றே எறப்பு எண்ணிக்கை இருந்தது ஏனினில் அப்போது செருமானிய வீரர்களின் எண்ணிக்கையைப்போல் இரு மடங்கு வீரர்களின் எண்ணிக்கை கொண்ட படையை சோவியத் யூனியன் வைத்திருந்தது. செருமானியர்கள் தமது உத்வேகத்தை இழந்தனர். பல போர்வீரர்கள் இரந்ததோடு மட்டுமன்றி சிலர் காயமும் அடைந்தனர் அதன் மூலம் சோவியத்துக்களிடம் இருந்து போரிடும் முறையை கற்றுக்கொண்டனர். மொத்தமாக சோவியத் யூனியனோடு போர் செய்து 4 மில்லியன் போர் வீரர்கள் வரை இறந்தனர்.

அதன் பின் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்சு, சோவியத் யூனியன் மற்றும் பல்வேறு நாடுகளும் இணைந்து செருமானிய படைகளை தோற்கடித்தன. ஹிட்லர் 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டதொடு யுத்தம் அதே ஆண்டு மே மாதம் எட்டாம் திகதி நிறைவுற்றது.


மேற்கோள்கள்[தொகு]

  1. ஜெர்மன் தேர்தல், 1933
  2. Statistisches Bundesamt (Federal Statistical Office), Statistisches Jahrbuch 2006 für die Bundesrepublik Deutschland, p. 34.
  3. Germany — Country Study
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்சி_ஜெர்மனி&oldid=2404382" இருந்து மீள்விக்கப்பட்டது