தோக்ரா கலை அருங்காட்சியகம், ஜம்மு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோக்ரா கலை அருங்காட்சியகம்
தோக்ரா கலை அருங்காட்சியகம், ஜம்மு is located in ஜம்மு காஷ்மீர்
தோக்ரா கலை அருங்காட்சியகம், ஜம்மு
Location within ஜம்மு காஷ்மீர்
நிறுவப்பட்டதுஏப்ரல் 18, 1954 (1954-04-18)
அமைவிடம்முபாரக் மண்டி அரண்மனை வளாகம், ஜம்மு, இந்தியா
ஆள்கூற்று32°43′48″N 74°52′12″E / 32.7300°N 74.8700°E / 32.7300; 74.8700
வகைபாரம்பரிய மையம்
முக்கிய வைப்புகள்பஹாரி ஓவியங்கள், சா நாமா மற்றும் சிக்கந்தர்நாமா உள்ளிட்ட கையெழுத்துப் பிரதிகள்
சேகரிப்புகள்டோக்ரா ஆடைகள், சிற்பங்கள், நாணயங்கள், கையெழுத்துப்பிரதிகள்
சேகரிப்பு அளவு7216
இயக்குனர்நஸ்ரீன் கான்
உரிமையாளர்ஜம்மு காஷ்மீர் அரசாங்கம், இந்தியா
பொது போக்குவரத்து அணுகல்பேருந்து நிறுத்தம், பேரேட்

தோக்ரா கலை அருங்காட்சியகம், ஜம்மு (Dogra Art Museum, Jammu), முன்னர் தோக்ரா கலைக்கூடம் என்று அழைக்கப்பட்ட அருங்காட்சியகம் ஆகும். இது, இந்தியாவின் ஜம்மு மாநிலத்தில் முபாரக் மண்டி வளாகத்தின் பிங்க் ஹாலில் உள்ள தோக்ரா பண்பாட்டு பாரம்பரியத்தின் அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகத்தில் பசோலியைச் சேர்ந்த பஹாரி ஓவியப் பாணியில் அமைந்த சிறிய அளவிலான ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. .[1]

துவக்கம்[தொகு]

தோக்ரா கலை அருங்காட்சியகம், ஜம்மு ஒரு அரசு அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகம் ஜம்மு பகுதியில் மிகப் பெரிய அருங்காட்சியகம் என்ற சிறப்பினைப் பெற்றது. இது வட இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் உள்ள மூன்று பிரிவுகளில் ஒன்றான ஜம்மு பகுதியில் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் காப்பகங்கள், தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகங்களின் இயக்குநரகத்தின் பிரிவு இந்த அருங்காட்சியகம் ஜம்மு-காஷ்மீர் அரசாங்கத்தின் சுற்றுலா மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்ற அருங்காட்சியகம் ஆகும். 1875 ஆம் ஆண்டில் வேல்ஸ் இளவரசர் என்ற நிலையில் பிரிட்டிஷ் மன்னரான ஏழாம் எட்வர்ட் ஜம்மு வந்தபோது அந்த வருகையின் நினைவாக இந்த கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் பொது நூலகம் மற்றும் அருங்காட்சியகம் ஆகிய பிரிவுகள் அமைந்துள்ளன.

வரலாறு[தொகு]

அதன் ஆரம்ப நாட்களில் இந்த அருங்காட்சியகம் அஜீப் கர் என்று அழைக்கப்பட்டு வந்தது. அதற்கு "அருங்காட்சியகம்" என்ற சொல்லுக்கான உருது சொல்லாக அவ்வாறு அழைக்கப்பட்டது. அப்போது உருது நீதிமன்ற மொழியாக பயன்பாட்டில் இருந்து வந்தது. அப்போது இது ஒரு சிறிய கூடத்தில் செயல்பட்டு வந்தது. அந்தக் கூடத்தில் சில ஆயுதங்கள் மற்றும் பழைய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. தற்போது ஜம்மு மாநிலத்தின் சட்டமன்றம் புதிய செயலகத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டது. இது முந்தைய காஷ்மீர் மற்றும் ஜம்மு மாநிலத்தில் ஒரு அருங்காட்சியகத்தை அமைப்பதற்கான முதல் படியாக அமைந்தது. இந்திய ஒன்றியத்துடன் மாநிலங்கள் இணைந்த பின்னர், 1954 ஆம் ஆண்டில் அப்போதைய ஜம்மு-காஷ்மீரின் பிரதம மந்திரியாக இருந்த திரு பக்ஷி குலாம் முகமதுவின் தலைமையின் கீழ் ஒரு குழு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இக் குழுவில் கல்வி அமைச்சர் திரு குலாம் முகமது சாதிக், நிதி அமைச்சர், திரு ஜி.எல்.டோகிரா, திரு மாஸ்டர் சன்சார் சந்த் பாரு[2], மற்றும் பிரபல கலைஞரும் பேராசிரியருமான ஆர்.என்.சாஸ்திரி (இப்போது பதம்ஷ்ரி) ஆகியோர் உறுப்பினர்களாகச் செயல்பட்டு வந்தனர். புதிய செயலகத்தை ஒட்டியுள்ள காந்தி பவன் மண்டபத்தில் கலைப்பொருட்கள் காட்சிப்படுத்துவதற்காக இந்த குழுவிற்கு சில இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த அருங்காட்சியகத்தை இந்தியாவின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஏப்ரல் 18, 1954 ஆம் நாளன்று [3] ஜம்மு காந்தி பவனில் தோக்ரா கலைக்கூடம் என்ற பெயரில் திறந்து வைத்தார். பின்னர் இது ஒரு முழுமையான அருங்காட்சியகமாக மேம்படுத்தப்பட்டது. பின்னர், அதன் தற்போதைய கட்டிடமான, ஜம்முவில் உள்ள முபாரக் மண்டி வளாகம் என்ற இடத்திற்கு மாஸ்டர் சன்சார் சந்த் பாரு அதன் முதல் காப்பாளராக (தலைவராக) நியமிக்கப்பட்டார்.

சேகரிப்புகள்[தொகு]

இந்த அருங்காட்சியகத்தில் வரலாறு மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த 7216 பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தொகுப்புகளில் புகழ்பெற்ற பசோலியைச் சேர்ந்த பஹாரி ஓவியப் பாணியில் அமைந்த, ராஸ்மஞ்சரி தொடரில் அமைந்த, சிறிய அளவிலான ஓவியங்கள் உள்ளன. மேலும் சில அரிய ஓலைச்சுவடிகள் காட்சியில் உள்ளன. பாரசீக மொழியில் அழகாக விளக்கப்பட்ட சா நாமா மற்றும் சிக்கந்தர்நாமா உள்ளிட்ட கையெழுத்துப் பிரதிகள் அவற்றில் உள்ளன.

அக்னூரைச் சேர்ந்த சுடுமண் பாண்டங்கள், சிற்பங்கள், நாணயவியல், கையெழுத்துப் பிரதிகள், தோக்ரா உடைகள், நகைகள், ஆயுதங்கள் மற்றும் கவசங்கள், உலோகப் பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருள்கள் தொடர்பான கலைப்பொருட்கள் ஆகியவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பளிங்கு மண்டபத்தில் அதிக விலைமதிப்பிலான கற்களால் பதிக்கப்பட்ட, நுணுக்கமாக அலங்கரிக்கப்பட்ட பளிங்கு ஜரோக்காக்கள் அருங்காட்சியக சேகரிப்பின் சிறப்பினை மேலும் அழகுபடுத்துகின்றன. இருந்தாலும், இந்த அருங்காட்சியகம் பசோலியின் பஹாரி சிறிய அளவிலான ஓவியங்களுக்காகவே அனைவராலும் அறியப்படுகிறது. முகலாயப் பேரரசர் ஷாஜஹானுக்குச் சொந்தமான தங்க முலாம் பூசப்பட்ட ஒரு வில், தக்ரி எழுத்துப்பொறிப்போடு கூடிய கல் தகடு ஆகியவை அருங்காட்சியகத்தின் மிகவும் மதிப்புமிக்க பொருள்களில் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.[4]

பார்வையாளர்கள் தகவல்[தொகு]

இந்த அருங்காட்சியகம் காலை 10.00 மணி முதல் முதல் மாலை 5.00 வரை பார்வையாளர்கள் பார்ப்பதற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்திற்கு திங்கள் கிழமை விடுமுறை நாள் ஆகும். அருங்காட்சியக வளாகத்திற்குள் நுழைவதற்கு பார்வையாளர்களிடம் குறைந்தபட்ச நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]