பஹாரி ஓவியப் பாணி
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வட இந்தியாவிலுள்ள, பஞ்சாப் பகுதியின், மலைப்பகுதி மாநிலங்களான ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் வழங்கி வந்த, ராஜபுதனப் பாணி சார்ந்த ஓவியப் பாணி பஹாரி ஓவியப் பாணி (Pahari painting) எனப்படுகின்றது. பசோஹ்லி, குலு, குலெர், கங்ரா ஆகிய ஓவியப் பாணிகள் பஹாரிப் பாணியின் பிரிவுகளாகக் கருதப்படுகின்றன.
கலை இலக்கியத் துறைகளில் தேசிய உணர்வுகளின் எழுச்சியும், சமயத்துறையில், பக்தி வழியும், நாட்டுப்புற இலக்கியங்களும், பஹாரி ஓவியங்களுக்கான கருப்பொருட்களை வழங்கின. ராஜஸ்தான ஓவியங்கள் பெரும்பாலும் உருவப்படங்கள் மற்றும் அரசவைக் காட்சிகளை முதன்மைப் படுத்திய போது, பஹாரி ஓவியங்கள், காதல் மற்றும் பக்தி சார்ந்த கருப்பொருள்களை முதன்மைப் படுத்தின.