தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூலின் முதல் பக்கம்

பண்டைய உரையாசிரியர்களில் உச்சிமேல் கொள்ளும் புலவராகப் போற்றப்பட்டவர் நச்சினார்க்கினியர். இவரது காலம் 14 ஆம் நூற்றாண்டு. இவர் பல நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். அவற்றுள் ஒன்று தொல்காப்பிய உரை. இவரது உரையில் பல சிறப்புகள் உள்ளன. அவற்றுள் ஒன்று இவர் தமது உரைநூல்களில் 83 நூல்களை மேற்கோள் காட்டி எடுத்தாண்டுள்ளதாகும். அந்த நூல்கள்:

1-20[தொகு]

  1. அகத்தியம்
  2. அகநானூறு
  3. அணியியல்
  4. அவிநயம்
  5. அறநெறிச்சாரம்
  1. ஆசாரக்கோவை
  2. ஆசிரியமாலை
  3. இராமாயணவெண்பா
  4. இறையனாரகப்பொருள்
  5. ஏலாதி
  1. ஐங்குறுநூறு
  2. ஐந்திணை எழுபது
  3. ஐந்திணை ஐம்பது
  4. ஔவையார் பாடல்
  5. கடகண்டு
  1. கலித்தொகை
  2. களவழி நாற்பது
  3. காக்கை பாடினியம்
  4. கார்நாற்பது
  5. காரைக்காற் பேயார் பாடல்

21-40[தொகு]

  1. குணநாற்பது
  2. குறிஞ்சிப்பாட்டு
  3. குறுந்தொகை
  4. கூத்தநூல்
  5. கைந்நிலை
  1. கொன்றைவேந்தன்
  2. சிலப்பதிகாரம்
  3. சிறுகாக்கைபாடினியம்
  4. சிறுகுரீஇயுரை
  5. சிறுபஞ்சமூலம்
  1. சிறுபாணாற்றுப்படை
  2. சினேந்திரமாலை
  3. சீவகசிந்தாமணி
  4. சூளாமணி
  5. தகடூர்யாத்திரை
  1. தந்திரவாக்கியம்
  2. திணைமாலை நூற்றைம்பது
  3. திணைமொழி ஐம்பது
  4. திரிகடுகம்
  5. திருக்குறள்

41-60[தொகு]

  1. திருச்சிற்றம்பலக் கோவையார்
  2. திருப்பாட்டு
  3. திருமுருகாற்றுப்படை
  4. திருவாசகம்
  5. திருவாய்மொழி
  1. திருவுலாப்புறம்
  2. தொல்காப்பியம்
  3. நற்றிணைநானூறு
  4. நாடகநூல்
  5. நாலடியார்
  1. நெடுநல்வாடை
  2. பட்டினப்பாலை
  3. பதிற்றுப்பத்து
  4. பரிபாடல்
  5. பல்காப்பியம்
  1. பல்காயம்
  2. பழமொழி
  3. பன்னிருபடலம்
  4. பாரதவெண்பா
  5. புறநானூறு

61-80[தொகு]

  1. புறப்பொருள் வெண்பாமாலை
  2. பூதத்தார் அவையடக்கு
  3. பூதபுராணம்
  4. பெருங்கதை
  5. பெரும்பாணாற்றுப்படை
  1. பெரும்பொருள் விளக்கம்
  2. பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதி
  3. பொருநராற்றுப்படை
  4. மணிமேகலை
  5. மதுரைக்காஞ்சி
  1. மலைபடுகடாம்
  2. மாபுராணம்
  3. முத்தொள்ளாயிரம்
  4. முதுமொழிக் காஞ்சி
  5. முல்லைப்பாட்டு
  1. மூதுரை
  2. மோதிரப்பாட்டு
  3. யாப்பருங்கலம்
  4. யாழ்நூல்
  5. வசைக்கடம்

81-83[தொகு]

  1. வசைக்கூத்து
  2. வளையாபதி
  3. விளக்கத்தார் கூத்து

உரை நலம்[தொகு]

இவரது உரையில் காணப்படும் நயப்பாடுகளில் சில:

  • படிமை - தவ்வேடம் [1]
  • ஒடு - ஓடு, ஆல் - ஆன், மூன்றாம் வேற்றுமை உருபுகளை உயிர் வரும்போது ஓடு, ஆன் என எழுதுவது.
  • தொல்காப்பிய நூற்பாக்களுக்கு வேறு பாடம் கொள்ளுதல். [2]
  • பல ஈறுகளால் முடிவனவற்றைத் தொகுத்து முடித்தலின் தொகைமரபு எனப்பட்டது.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005
  • தொல்காப்பியம் எழுத்ததிகார மூலமும் மதுரைப் பரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையும், புன்னாலைக் கட்டுவன் பிரயஸ்ரீ சி. கணேசையர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் ஈழகேசரி அதிபதி நா. பொன்னையா அவர்களால் சுன்னாகம் திருமகள் அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டவை. 1937
  • தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழக வெளியீடு, 1962
  • தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழக வெளியீடு, 1965

அடிக்குறிப்பு[தொகு]

  1. சிறப்புப் பாயிர உரை
  2. இவரது செய்யுளியல் உரை பதிப்பில் கு. சுந்தரமூர்த்தி 30 தொல்காப்பிய நூற்பாப் பாடவேறுபாடுகளைக் காட்டியுள்ளார்.