தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம்
Appearance
राष्ट्रीय राजमार्ग एवं अवसंरचना विकास निगम लिमिटेड | |
சுருக்கம் | NHIDCL |
---|---|
உருவாக்கம் | 2014 |
வகை | பொதுத்துறை நிறுவனம் |
சட்ட நிலை | செயல்பாட்டில் |
நோக்கம் | தேசிய நெடுஞ்சாலைகள மேம்படுத்தல் மற்றும் பராமரிப்பு |
தலைமையகம் | நாடாளுமன்றச் சாலை, புது தில்லி, இந்தியா |
தலைமையகம் | |
சேவை பகுதி | இந்தியா நேபாளம் |
ஆட்சி மொழி | ஆங்கிலம் & இந்தி |
மேலாண்மை இயக்குநர் | சஞ்சல் குமார், இந்திய ஆட்சிப் பணி |
இயக்குநர் (நிர்வாகம் & நிதி) | அன்சு மணீஷ் கல்கோ, இந்தியப் பாதுகாப்பு கணக்குப் பணி |
இயக்குநர்கள் (தொழில்நுட்பம்) | அதுல் குமார் மற்றும் தருண் வைத்தியா, இந்தியப் பொறியியல் பணி |
மைய அமைப்பு | இயக்குநர்கள் குழு |
தாய் அமைப்பு | சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகாள் அமைச்சகம், இந்திய அரசு |
சார்புகள் | இந்திய அரசு |
வரவு செலவு திட்டம் | ₹30,000 கோடி (US$3.8 பில்லியன்) (2022-23 மதிப்பீடு.) |
வலைத்தளம் | www.nhidcl.com |
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் (National Highways and Infrastructure Development Corporation Limited (NHIDCL) இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகாள் அமைச்சகத்தின் கீழ் 2014ம் ஆண்டு முதல் இயங்கும் ஒரு அரசு பொதுத்துறை நிறுவனம் நிறுவனம் ஆகும். இது இந்தியா மற்றும் நேபாளத்தில் இமயமலை போன்ற உயரமான மலைப்பகுதிகளில் சாலைகள் மற்றும் சுரங்கச் சாலைகள் அமைத்து, பராமரிக்கிறது.
இயங்குகிறது.
திட்டங்கள்
[தொகு]இந்நிறுவனம் எல்லைப்புறச் சாலைகள் அமைப்புடன் இணைந்து இமயமலை போன்ற உயரமான மலைப்பகுதிகளில் அனைத்து காலத்திற்கு ஏற்ற வகையில் போக்குவரத்துச் சாலைகள், மேம்பாலங்கள், சுரங்கச் சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்கிறது.[1]
இவ்வமைப்பால் நிறுவப்பட்ட/நிறுவப்படுகின்ற சாலைகள் மற்றும் சுரங்கச்சாலைகள்
[தொகு]- சோஜி லா சுரங்கச்சாலை - காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோன்மார்க் நகரத்தையும், லடாக் ஒன்றியப் பிரதேசத்தின் கார்கில் மாவட்டத்தில் உள்ள திராஸ் நகரத்தையும் இணைக்கும் 14.2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சுரங்கச்சாலைத் திட்டம் ஆகும்.
- சிங்கோ லா சுரங்கச் சாலை- லடாக்-இமாச்சலப் பிரதேசம் எல்லையில், இமயமலையில் 5091 மீட்டர் (16,615 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.
- அடல் சுரங்கச்சாலை
- சில்க்கியாரா-பார்கோட் சுரங்கச் சாலை, உத்தரகாண்ட் மாநிலம்
- Z-Morh சுரங்கச் சாலை
- துப்ரி-புல்பாரி ஆற்றுப்பாலம், பிரம்மபுத்திரா ஆறு மீது கட்டப்பட்ட,. இப்பாலம் அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களை இணைக்கிறது
- கைலாயம்-மானசரவோர் சாலைத் திட்டம்
- தவாங் சாலைத் திட்டம் -அருணாச்சலப் பிரதேசம்
- இம்பால்-மோரே நெடுஞ்சாலை