தேசிய கங்கை நதி வடிநில ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய கங்கை நதி வடிநில ஆணையம் (National Ganga River Basin Authority) என்பது இந்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கங்கை நதிக்கான நிதி, திட்டமிடல், செயல்படுத்தல், கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரத்தைப் பெற்ற ஆணையமாகும். கங்கைக்கு நீர் வழங்கும் வடிநிலத்தை மாசுபாடு அல்லது அதிகப்படியான பயன்பாட்டிலிருந்து பாதுகாப்பதே இந்த அமைப்பின் நோக்கம் ஆகும். சூலை 2014 இல், இந்த அமைப்பானது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திலிருந்து நீர்வள ஆதாரங்கள், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது, முன்பு இது நீர்வள அமைச்சகமாக இருந்தது.[1]

மத்திய அரசு 20 செப்டம்பர் 2016 அன்று வெளியிட்ட அறிவிப்பில், தற்போதுள்ள அமைப்பிற்குப் பதிலாக "கங்கை நதிக்கான தேசியக் குழு (புத்துணர்வு, பாதுகாப்பு மற்றும் மேலாண்மை)" என்ற புதிய அமைப்பை உருவாக்க கங்கை நதி (புத்துயிரூட்டல், பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்) அதிகாரிகள் ஆணை 2016-இன் கீழ் முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள தேசிய கங்கை நதி வடிநில ஆணையத்திற்கு பதிலாக, கங்கை நதிப் படுகை தூய்மைப்படுத்துதல் மற்றும் மாசு தடுப்பு மேற்பார்வைக்கு இந்த புதிய அமைப்பு செயல்படும்.

நிறுவப்பட்டது தொடர்பான விவரம்[தொகு]

இது 20 பிப்ரவரி 2009 அன்று இந்திய அரசால் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986 இன் பிரிவு 3 (3) இன் கீழ் நிறுவப்பட்டது, இது கங்கையை இந்தியாவின் "தேசிய நதியாக" அறிவித்தது.[2]

கண்ணோட்டம்[தொகு]

பிரதம மந்திரி ,இந்த அமைப்பின் தலைவராக உள்ளார். மற்ற உறுப்பினர்களில் கங்கை நதியோடு தொடர்புள்ள அமைச்சகங்களின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் கங்கை நதி பாயும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் அடங்குவர். கங்கை நதி பாயும் மாநிலங்களான உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

தேசிய கங்கை நதி வடிநில ஆணையத்தின் முதல் கூட்டம் அக்டோபர் 5,2009 அன்று நடைபெற்றது.[3]

2010 ஆம் ஆண்டு இந்திய மத்திய பட்ஜெட்டில், தேசிய கங்கை நதி வடிநில ஆணையத்திற்கான ஒதுக்கீடு 500 கோடி ரூபாயாக இரட்டிப்பாகியது.

அமைப்பின் உறுப்பினர்கள்[தொகு]

இந்த அமைப்பில் மொத்தம் 23 உறுப்பினர்கள் உள்ளனர். 23 பேரில் 14 பேர் அரசு துறைகளைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ள 9 பேர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்.

குழுவின் அரசு உறுப்பினர்கள்[தொகு]

அரசாங்கத் துறையைச் சேர்ந்த உறுப்பினர்கள் பின்வருமாறு:

 

குழுவின் நிபுணர் உறுப்பினர்கள்[தொகு]

தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பின்வருமாறு: [4]  

மேற்கோள்கள்[தொகு]

  1. "Organizational history of the Ministry of Water Resources, River Development and Ganga Rejuvenation". Government of India இம் மூலத்தில் இருந்து 18 April 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150418013738/http://wrmin.nic.in/forms/list.aspx?lid=277. பார்த்த நாள்: 19 May 2015. 
  2. NGRBA பரணிடப்பட்டது 7 அக்டோபர் 2011 at the வந்தவழி இயந்திரம் Ministry of Environment, GoI.
  3. http://cpcb.nic.in/ngrba/about.html p.1.
  4. p.2. Composition of the Authority பரணிடப்பட்டது 10 சூலை 2012 at Archive.today Ministry of Ganga Rejuvenation

வெளி இணைப்புகள்[தொகு]