தெனிசு சலிவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெனிசு சலிவன்
Dennis Sullivan
2007 இல் சலிவன்
பிறப்புதெனிசு பார்னெல் சலிவன்
பெப்ரவரி 12, 1941 (1941-02-12) (அகவை 82)
உரோன் துறை, மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைகணிதம்
பணியிடங்கள்இசுட்டோனி புரூக் பல்கலைக்கழகம்
சிட்டி பல்கலைக்கழகம், நியூயார்க்
கல்வி கற்ற இடங்கள்ரைசு பல்கைக்கழகம் (இ.க)
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (முனைவர்)
ஆய்வேடுமுக்கோண உருவக சமன்பாடுகள் (1966)
ஆய்வு நெறியாளர்வில்லியம் பிரௌடர்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
அரோல்ட் ஏபல்சன்
கர்ட்டிசு மெக்மலன்
விருதுகள்

தெனிசு பார்னெல் சலிவன் (Dennis Parnell Sullivan, பிறப்பு: பெப்ரவரி 12, 1941) அமெரிக்கக் கணிதவியலாளர் ஆவார். இயற்கணித இடவியல், வடிவியல் இடவியல் மற்றும் இயக்கவியல் அமைப்புகளில் பணிபுரிந்ததற்காக அறியப்படுகிறார். நியூயார்க் நகரப் பல்கலைக்கழக பட்டதாரி மையத்தில் தலைவராகவும், இசுட்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் உள்ளார்.

இவருக்கு 2010 ஆம் ஆண்டிற்கான கணிதத்துக்கான ஊல்ஃப் பரிசும், 2022 ஆம் ஆண்டிற்கான ஏபெல் பரிசும் கிடைத்தன.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சலிவன் 1941 பெப்ரவரி 12 இல் மிச்சிகனில் பிறந்தார்.[1][2] இவரது குடும்பம் விரைவிலேயே இயூசுட்டனுக்கு இடம்பெயர்ந்தது.[1][2]

ரைசுப் பல்கலைக்கழகத்தில் வேதிப் பொறியியல் படிப்பிற்காக சேர்ந்தார், ஆனால் குறிப்பாக ஊக்கமளிக்கும் கணிதத் தேற்றங்களை எதிர்கொண்ட போது, இரண்டாம் ஆண்டில் தனது முக்கியப் பாடத்தை கணிதத்திற்கு மாற்றினார்.[2][3] 1963 இல் இளங்கலை பட்டம் பெற்றார்.[2] தனது முனைவர் பட்டத்தை பிரின்சுட்டன் பல்கலைக்கழகத்தில் 1966 இல் முக்கோண உருவக சமன்பாடுகள் பற்றிய ஆய்வுக்காகப் பெற்றுக் கொண்டார்.[2][4]

பணி[தொகு]

சலிவன் 1966 முதல் 1967 வரை நேட்டோ ஆய்வூதியம் பெற்று வாரிக் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.[5] 1967 முதல் 1969 வரை கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)யிலும், 1969 முதல் 1973 வரை மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்திலும் பணியாற்றினார்.[5] 1973 முதல் 1974 வரை பார்சு-சுத் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும், 1974 முதல் மேம்பட்ட அறிவியல் ஆய்வுகள் நிறுவனத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.[5][6] 1981 இல், இவர் நியூயார்க் நகரப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் மையத்தின் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.[7] 1996 இல் இச்சுட்டோனி புரூக் பல்கலைக்கழகத்தின் கணிதப் பீடத்தில் சேர்ந்தார்.[5] வடிவவியல் மற்றும் இயற்பியலுக்கான சைமன்ஸ் மையத்தை நிறுவுவதில் சல்லிவன் ஈடுபட்டு, அதன் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக உள்ளார்.[8]

விருதுகளும் சிறப்புகளும்[தொகு]

 • 1971 வடிவவியலுக்கான ஒசுவால்ட் வெப்லென் பரிசு[9]
 • 1981 எலி கார்ட்டன் பரிசு, பிரான்சிய அறிவியல் கழகம்[2][6]
 • 1983 அறிவியலுக்கான தேசியக் கழக உறுப்பினர்[10]
 • 1991 அமெரிக்க கலை, அறிவியல் கழக உறுப்பினர்[11]
 • 1994 அறிவியலுக்கான கிங் ஃபைசல் பன்னாட்டுப் பரிசு[5]
 • 2004 அறிவியலுக்கான தேசியப் பதக்கம்[5]
 • 2006 இசுட்டீல் வாழ்நாள் சாதனையாளர் பரிசு[5]
 • 2010 கணிதத்துக்கான வுல்ஃப் பரிசு, "இயற்கணித இடவியல் மற்றும் பொதுவடிவ இயங்கியல்" பங்களிப்புக்காக.[12]
 • 2014 பல்சான் பரிசு[2][13]
 • 2022 ஏபெல் பரிசு[2][14]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சலிவன் கணிதவியலாளர் மொய்ரா சாசு என்பவரைத் திருமணம் புரிந்தார்.[3][15]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Lua error in Module:Citation/CS1 at line 3818: attempt to index local 'arch_text' (a nil value)..
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Chang, Kenneth (March 23, 2022). "Abel Prize for 2022 Goes to New York Mathematician". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து March 23, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220323110725/https://www.nytimes.com/2022/03/23/science/abel-prize-mathematics.html. 
 3. 3.0 3.1 Cepelewicz, Jordana (March 23, 2022). "Dennis Sullivan, Uniter of Topology and Chaos, Wins the Abel Prize". Quanta Magazine இம் மூலத்தில் இருந்து March 23, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220323123752/https://www.quantamagazine.org/dennis-sullivan-uniter-of-topology-and-chaos-wins-the-abel-prize-20220323/. 
 4. கணித மரபியல் திட்டத்தில் Dennis Sullivan
 5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 "Dennis Parnell Sullivan Awarded the 2022 Abel Prize for Mathematics". March 23, 2022 இம் மூலத்தில் இருந்து March 24, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220324003919/https://news.stonybrook.edu/university/dennis-parnell-sullivan-awarded-the-2022-abel-prize-for-mathematics/. 
 6. 6.0 6.1 "Dennis Sullivan, Mathematician" இம் மூலத்தில் இருந்து November 22, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211122204026/https://www.ihes.fr/en/professeur/dennis-sullivan-2/. 
 7. "Science Faculty Spotlight: Dennis Sullivan". April 29, 2017 இம் மூலத்தில் இருந்து March 24, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220324160540/https://www.gc.cuny.edu/news/science-faculty-spotlight-dennis-sullivan. 
 8. "Dennis Sullivan Awarded the 2022 Abel Prize in Mathematics". March 23, 2022. https://scgp.stonybrook.edu/archives/36854. 
 9. "Oswald Veblen Prize in Geometry" இம் மூலத்தில் இருந்து January 5, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200105064133/http://www.ams.org/prizes-awards/pabrowse.cgi?parent_id=34. 
 10. "National Academy of Sciences" இம் மூலத்தில் இருந்து May 15, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210515183249/http://www.nasonline.org/member-directory/members/49958.html. 
 11. "American Academy of Arts and Sciences" இம் மூலத்தில் இருந்து March 24, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220324160540/https://www.amacad.org/person/dennis-parnell-sullivan. 
 12. "Wolf Prize Winners Announced" (in en) இம் மூலத்தில் இருந்து March 24, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220324160541/https://www.israelnationalnews.com/news/135820. 
 13. Kehoe, Elaine (January 2015). "Sullivan Awarded Balzan Prize". Notices of the American Mathematical Society 62 (1): 54–55. doi:10.1090/noti1198. 
 14. "2022: Dennis Parnell Sullivan | The Abel Prize" இம் மூலத்தில் இருந்து March 23, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220323111559/https://abelprize.no/abel-prize-laureates/2022. 
 15. Desikan, Shubashree (March 23, 2022). "Abel prize for 2022 goes to American mathematician Dennis P. Sullivan". தி இந்து. https://www.thehindu.com/sci-tech/science/abel-prize-for-2022-goes-to-american-mathematician-dennis-p-sullivan/article65251992.ece. 

வெளி இணைப்புகள்[தொகு]

 • O'Connor, John J.; Robertson, Edmund F., "தெனிசு சலிவன்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
 • கணித மரபியல் திட்டத்தில் தெனிசு சலிவன்
 • Sullivan's homepage at CUNY
 • Sullivan's homepage at SUNY Stony Brook
 • Dennis Sullivan பரணிடப்பட்டது 2018-05-28 at the வந்தவழி இயந்திரம் International Balzan Prize Foundation
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெனிசு_சலிவன்&oldid=3585762" இருந்து மீள்விக்கப்பட்டது