உள்ளடக்கத்துக்குச் செல்

பல்சான் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்சான் பரிசு
Balzan Prize
விளக்கம்மானிடவியல், சமூகவியல், பண்பாடு, மற்றும் அறிவியல் துறைகளில் ஆற்றிய ஆய்வுகளுக்காக
நாடு இத்தாலி
வழங்குபவர்பன்னாட்டு பல்சான் பரிசு நிறுவனம், மிலான்
முதலில் வழங்கப்பட்டது1961
இணையதளம்http://www.balzan.org

பல்சான் பரிசு (Balzan Prize) என்பது பன்னாட்டு பல்சான் பரிசு நிறுவனம் (International Balzan Prize Foundation) ஆண்டுதோறும் மானிடவியல், சமூகவியல், பண்பாடு, மற்றும் அமைதி ஆகிய துறைகளில் நான்கு புகழ் பெற்றவர்களுக்கு வழங்கும் ஒரு பணப்பரிசாகும்.

ஆண்டு தோறும் இந்நிறுவனம் கூடி அடுத்த ஆண்டுக்கான விருதாளர்களையும் அவர்களுக்கான பணப்பரிசின் அளவையும் தெரிவு செய்கிறது. இப்பரிசுகளுக்கான நியமனங்கள் மே மாதத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பரிசாளர்கள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்படுகிறது. 2001ம் ஆண்டில் இருந்து பரிசுத் தொகை 1 மில்லியன் சுவிஸ் பிராங்குகளாக அதிகரிக்கப்பட்டது. ஆனாலும் இப்பரிசுத் தொகையின் அரைப்பங்கு இளம் ஆய்வாளர்களின் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது ஒரு நிபந்தனை ஆகும்.

பல்சான் பரிசு குழுவில் ஐரோப்பாவின் பெரும் அறிவியலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இப்பரிசு நோபல் பரிசுக்கு இணையாக, அறிவியல், பண்பாடு, மானுடவியல் துறைகளில் புகழ் பெற்ற ஒரு பரிசு ஆகும். 2004 இல் இதன் பரிசுத் தொகை 3 மில்லியன் அமெரிக்க டாலர்களாக (நோபல் பரிசுத் தொகை 1.3 மில்லியன்கள் மட்டுமே) இருந்தாலும் நோபல் பரிசு பல்சான் பரிசை விட அதிகம் புகழ் பெற்றதாக விளங்குகிறது.

வரலாறு[தொகு]

இந்நிறுவனத்தின் சொத்துக்கள் இத்தாலியரான "யூஜீனியோ பல்சான்" (Eugenio Balzan; 1874-1953), என்பவரால் வழங்கப்பட்டது. இவர் தனது சொத்துக்களை சுவிட்சர்லாந்தில் முதலிட்டார். 1933இல் பாசிசத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து இத்தாலியை விட்டுப் புறப்பட்டார். இவர் தனது சொத்துக்களைத் தனது மகள் "அஞ்சலா லீனா பல்சான்" (1892–1956), என்பவருக்கு விட்டுச் சென்றார். அஞ்சலா நோய் வாய்ப்பட்டு, இறக்கும் தருவாயில் பன்னாட்டு பல்சான் பரிசு நிறுவனம் என்ற நிறுவனத்தைத் தோற்றுவித்து தனது சொத்துக்கள் அனைத்தையும் இந்நிறுவனத்துக்கு வழங்கினார். இந்நிறுவனத்தின் பரிசுகள் அனைத்தும் மிலானில் உள்ள அலுவலகத்திலும், பரிசுப் பணம் சூரிக்கிலும் நிர்வகிக்கப்படுகின்றன.

இந்நிறுவனத்தின் முதலாவது பரிசு 1961 இல் 1 மில்லிய சுவிஸ் பிராங்க் நோபல் பரிசு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. 1962ம் ஆண்டுக்குப் பின்னர் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் 1978 இல் அன்னை தெரேசாவுக்கு வழங்கப்பட்டது.

1978 முதல் ஆண்டு தோறும் நால்வருக்கு பின்வரும் துறைகளில் வழங்கப்பட்டு வருகிறது:

பல்சான் பரிசு பெற்ற சிலர்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்சான்_பரிசு&oldid=1548391" இலிருந்து மீள்விக்கப்பட்டது