தி வாம்பயர் டைரீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி வாம்பயர் டைரீஸ்
Vampire-diaries-logo 261 130.png
வகைசூப்பர்நேச்சுரல் நாடகம்
திகில்
கற்பனை
காதல்
Based onதி வாம்பயர் டைரீஸ் நாவல் மூலம்
எல்.ஜே.ஸ்மித்
Developed byகெவின் வில்லியம்சன்
ஜூலி ப்ளேக்
நடிப்புநீனா டோப்ரேவ்
பவுல் வெஸ்லி
இயன் சோமர்ஹால்டர்
ஸ்டீவன் ஆர். மெக்குயின்
சாரா கேனிங்
கட் கிரஹாம்
மைகேல் த்ரேவீனோ
மேத்திவ் டேவிஸ்
ஜோசப் மோர்கன்
மைக்கேல் மலர்கி
கயலா எவேல்
சேக் ராயர்ரிக்
காண்டைஸ் அக்கோலா
இசையமைப்பாளர்கள்மைக்கேல் சுபி
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிகள்ஆங்கிலம்
சீசன்கள்5
எபிசோடுகள் எண்ணிக்கை111
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பாளர்கள்லெஸ்லி மோர்கேன்ச்டீன்
பாப் லெவி
கெவின் வில்லியம்சன்
ஜூலி ப்ளேக்
திரைப்பிடிப்பு இடங்கள்அட்லான்டா
கோவிங்க்டன், ஜோர்ஜியா
சிகாகோ
வான்கூவர், பிரிட்டிசு கொலம்பியா, கனடா
தொகுப்பாளர்கள்லான்ஸ் ஆண்டர்சன்
டைலர் குக்
நாதன் ஈஸ்டேர்லிங்
ஓட்டம்45 நிமிடங்கள்
ஒளிபரப்பு
திரைப்படம்1080i (16:9 HDTV)
ஒளிபரப்பான காலம்செப்டம்பர் 10, 2009 (2009-09-10) –
நடப்பு
Chronology
தொடர்புடைய தொடர்கள்தி ஒரிஜினல்ஸ்
வெளியிணைப்புகள்
இணையதளம்
தயாரிப்பு இணையதளம்

தி வாம்பயர் டைரீஸ் (The Vampire Diaries) இது ஒரு அமெரிக்க நாட்டு சூப்பர்நேச்சுரல் தொடர். இந்த தொடரைக் கெவின் வில்லியம்சன் மற்றும் ஜூலி ப்ளேக் இயக்க, நீனா டோப்ரேவ், பவுல் வெஸ்லி, இயன் சோமர்ஹால்டர், ஸ்டீவன் ஆர். மெக்குயின், சாரா கேனிங், கட் கிரஹாம், மைகேல் த்ரேவீனோ, மேத்திவ் டேவிஸ், ஜோசப் மோர்கன், கயலா எவேல், மைக்கேல் மலர்கி, சேக் ராயர்ரிக், காண்டைஸ் அக்கோலா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தத் தொடர் மனிதர்களுக்கும், வாம்பயர் எனப்படும் ரத்தம் குடிக்கும் மனிதர்களுக்கும் (ரத்த காட்டேரி) மற்றும் வோல்ப் எனப்படும் ஓநாய் மனிதர்களுக்கும் நடக்கும் காதல், வெறுப்பு, துயரம், பயம், போன்றவற்றை மையமாகக வைத்து எடுக்கப்பட்டுளது. இந்தத் தொடர் 5 பகுதிகளை வெற்றிகரமாக கடந்து 6வது பகுதி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த தொடர் ’தி சவ்’ என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது.

நடிகர்கள்[தொகு]

நடிகர்கள் பாத்திரம் குறிப்புகள்
நீனா டோப்ரேவ் எலெனா கில்பர்ட் (முதன்மை நாயகி) இந்த தொடரில் இவருக்கு இரட்டை வேடம். நிகழ்காலத்தில் இவரின் பெயர் எலெனா கில்பர்ட். இவர் ஸ்டெபன் மற்றும் அவரின் சகோதரன் டாமன்னின் காதலி. இவர்களின் காதல் ஒரு முக்கோண காதல். இவர் இந்த காதாபாத்திரத்தில் ஒரு பயந்த அப்பாவி பெண்ணாக நடித்துள்ளார். (பருவங்கள்: 1,2,3,4,5)
கேத்ரீன் பியர்ஸ் போன ஜென்மத்தில் இவரின் பெயர் கேத்ரீன் பியர்ஸ். இவர் ஒரு வாம்பயர் (ரத்தம் குடிக்கும் பெண்/ரத்த காட்டேரி) ஸ்டெபன் மற்றும் அவரின் சகோதரன் டாமன்னை ரத்தம் குடிக்கும் மனிதர்களாக மாற்றியவரே இவர் தான். இவரின் காதாபாத்திரம் பகுதி 2 லிருந்து பகுதி 5 வரை உள்ளது. (பருவங்கள்: 2,3,4,5)
பவுல் வெஸ்லி ஸ்டெபன் சல்வடோரே (முதன்மை நாயகன்) இவன் எலெனாவின் காதலன் மற்றும் டாமன்னின் சகோதரன். இவரின் காதாபாத்திரம் பகுதி 1 லிருந்து பகுதி 4 வரை நல்ல ரத்த காட்டேரியாக நடித்துவந்தார். பகுதி 5 இவரின் காதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டு எல்லோருக்கும் எதிரியான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவரின் வயது 2000ம் ஆகும். (பருவங்கள்: 1,2,3,4,5)
இயன் சோமர்ஹால்டர் டாமன் சல்வடோரே இவன் எலெனாவின் காதலன் மற்றும் ஸ்டெபன்னின் சகோதரன். இவன் ஒரு சுயநலம் கொண்டவன், இரக்கம் அற்றவன், எல்லோரையும் கொண்டு அவர்களின் ரத்தம் குடிக்கும் ரத்த காட்டேரி. (பருவங்கள்: 1,2,3,4,5)
ஸ்டீவன் ஆர். மெக்குயின் ஜெர்மி கில்பர்ட் எலெனாவின் இளைய சகோதரன். (பருவங்கள்: 1,2,3,4,5)
சாரா கேனிங் ஜென்னா சோமர்ஸ் இவர் எலெனா மற்றும் ஜெர்மியின் அத்தை. (பருவங்கள்: 1,2,3,5)
கட் கிரஹாம் போனி பென்னட் இவர் எலெனாவின் சிறந்த தோழி. இவர் மிகவும் சக்திவாய்ந்த சூனியக்காரி. இவள் தனது சக்தியை வைத்து எல்லோரையும் கப்பாற்றுகின்றால் மற்றும் இறந்தவர்களுக்கு மறு ஜென்மம் கொடுக்கின்ற நல்ல கதாபாத்திரம். (பருவங்கள்: 1,2,3,4,5)
மைகேல் த்ரேவீனோ டைலர் லாக்வுட் இவன் ஒரு ஓநாய் மனிதன். ஜெர்மி மற்றும் மேட்டின் சிறந்த நண்பன். (பருவங்கள்: 1,2,3,4,5)
மேத்திவ் டேவிஸ் அலெரிக் சல்ட்ஜ்மன் இவர் ஒரு ஆசிரியார் மற்றும் ஜென்னா மீது இவருக்கு காதல். (பருவங்கள்: 1,2,3,4,5,6)
ஜோசப் மோர்கன் ஒரிஜினல் வாம்பயர் கிளவுஸ் இவர் முதன்மை கதாபாத்திரமாக பகுதி 3ல் நடித்துள்ளார். இவர் ஒரு பாதி வாம்பயர் (ரத்த காட்டேரி) மற்று பாதி ஓநாய் மனிதன்.
கயலா எவேல் விக்கி டோனோவன் மாட் டோனுவனின் சகோதரி. டாமன்னால் வாம்பயர் (ரத்த காட்டேரி) மாற்றபடுகின்றால். (பருவங்கள்: 1,2,3,5)
சேக் ராயர்ரிக் மாட் டோனுவன் எலெனாவின் சிறுவயது தோழன் மற்றும் பழைய காதலன். இவன் விக்கியின் சகோதரன். பகுதி 3ல் இருந்து எல்லோருடமும் நல்ல நண்பனாக இருக்கின்றான். (பருவங்கள்: 1,2,3,4,5)
காண்டைஸ் அக்கோலா கரோலின் ஃபோர்ப்ஸ் எலெனா மற்றும் போனியின் நல்ல தோழி. பகுதி 1 லிருந்து 3 வரை டாமன்னால் தன்வசப்படுத்தி வைத்துள்ளான். (பருவங்கள்: 1,2,3,4,5)
மைக்கேல் மலர்கி என்ஸோ (Enzo) இவர் பகுதி 6ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். (பருவங்கள்: 5,6)

அத்தியாயங்கள்[தொகு]

பருவம் அத்தியாயங்கள் சீசன் தொடக்க காட்சி சீசன் இறுதிக்காட்சி
1 22 செப்டம்பர் 10, 2009 மே 13, 2010
2 22 செப்டம்பர் 9, 2010 மே 12, 2011
3 22 செப்டம்பர் 15, 2011 மே 10, 2012
4 23 அக்டோபர் 11, 2012 மே 16, 2013
5 22 அக்டோபர் 3, 2013 மே 15, 2014
6 அக்டோபர் 2, 2014 2015

மறுதயாரிப்பு[தொகு]

இந்த தொடர் பன்னா என்ற பெயரில் எம் டிவி இந்தியாவில்[1] மறுதயாரிப்பு செய்யப்பட்டு ஒளிபரப்பாகவுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_வாம்பயர்_டைரீஸ்&oldid=2983362" இருந்து மீள்விக்கப்பட்டது