திருவண்ணாமலையில் போக்குவரத்து
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருவண்ணாமலை நகரம் பெரும்பாலும் சென்னை, வேலூர், திருச்சி, திருப்பூர், சேலம், தஞ்சாவூர், கோயம்புத்தூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாநிலத்தின் மற்ற முக்கிய நகரங்களுடன் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது.[1]
ஹைதராபாத், பெங்களூர், திருப்பதி, புதுச்சேரி, மங்களூர், ஷிமோகா [2] போன்ற பிற மாநிலங்களின் முக்கிய நகரங்களுடனும் பேருந்து மூலம் இணைக்கப்பட்டுள்ளது .
தொடருந்துப் போக்குவரத்து
[தொகு]திருவண்ணாமலையில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரயில் நிலையம் தென்னக இரயில்வே யின் பழைய மெயின் லைன் எனப்படும் சித்தூர், காட்பாடி, வேலூர், ஆரணி, திருவண்ணாமலை, திருக்கோவிலூர், கடலூர் ரயில் பாதையில் திருவண்ணாமலை உள்ளது. இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1867 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. திருவண்ணாமலை ரயில் பாதை மின்மயமாக்க பட்ட ரயில் பாதையாகும்.
திருவண்ணாமலை வழியாக பிற நகரங்களுக்கு செல்லும் ரயில்கள்:
- பெங்களூர் - எஸ்வந்த்பூர்
- கொல்கத்தா - ஹௌரா
- திருப்பதி
- மும்பை
- ராமேஸ்வரம்
- கடலூர்
- பாண்டிச்சேரி
- மன்னார்குடி
- மாயவரம்
- கும்பகோணம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திண்டுக்கல்
- மதுரை ஆகிய ஊர்களும் ரயில் சேவை உள்ளது.
விமான நிலையம்
[தொகு]அருகில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்கள் சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி.