திருவட்டா மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூலவர் கருவறை

திருவட்டா மகாதேவர் கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் திருவல்லாவில் மணிமலையாற்றின் (நதி) கரையில் அமைந்துள்ளது. இக்கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான இந்து கோவில் ஆகும். [1] இக்கோயிலைப் பற்றிய குறிப்புகள் வாழப்பள்ளி கல்வெட்டில் உள்ளன. அது கொடுங்கல்லூர் சேர (முந்தைய குலசேகரன்) மன்னன் ராம ராஜசேகரன் மற்றும் வாழப்பள்ளியில் உள்ள கோயிலுடன் தொடர்புடையதாகும். மலையாள மொழியில் எழுதப்பட்ட கொடுங்கல்லூர் சேர அரசனைக் குறிப்பிடும் ஆரம்பகால கல்வெட்டுப் பதிவு இதுவேயாகும். [2] [3] திரேதா யுகத்தில் பரசுராமர் இங்குள்ள சிவபெருமானின் சிலையை நிறுவியதாக நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்றன. [4] [5] கேரளாவில் உள்ள 108 பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[6]

வரலாறு[தொகு]

கேரளாவின் பழமையான கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். மஹோதயபுரம் நகரை ஆண்ட இரண்டாம் சேர வம்சத்தின் ஆட்சிக்காலத்தில் குலசேகரப் பெருமாள்களால் இக்கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. கேரளாவில் கிடைத்த பழமையான வாழப்பள்ளி செப்புத்தகடு, இந்தச் சிவன் கோயிலைப் பற்றி குறிப்பிடுகிறது. [7] திருவாடா கோயிலும் வாழப்பள்ளி மகா சிவன் கோயிலும் சேர சாம்ராஜ்ய காலத்திலிருந்தே மிகவும் தொடர்புடையனவாகும். [8]

கட்டிடக்கலை[தொகு]

திருச்சுற்று

திருவல்லாவில் மணிமலையாற்றின் (நதி) கரையிலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள இக்கோயில் மூலவர் கருவறை, நாலம்பலம், மண்டபம் ஆகிய கட்டடக்கூறுகளைக் கொண்டுள்ளது. மூவரான சுயம்பு சிவலிங்கம் ஒரு சதுர கருவறையின் உட்புறத்தில் உள்ளது. கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளது. தென்கிழக்கு மூலையில் கணபதி அமைந்துள்ளது. மூலவர் சன்னதியில் சுயம்பு லிங்கமும், இரண்டாவது சன்னதியில் பெரிய சிவலிங்கமும் தனித்தனியாக உள்ளன. [9]

படத்தொகுப்பு[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. "Thiruvalla - Thiruvatta Mahadeva Temple".
  2. Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 435.
  3. Veluthat, Kesavan. "The Temple and the State in Medieval South India." Studies in People’s History, vol. 4, no. 1, June 2017, pp. 15–23.
  4. "Thiruvatta Mahadeva Temple | Parasurama Built Mahadeva Temple -".
  5. "List of Siva temples in Kerala".
  6. "108 Shiva Temples in Kerala created by Lord Parasurama".
  7. Veluthat, Kesavan. "The Temple and the State in Medieval South India." Studies in People’s History, vol. 4, no. 1, June 2017, pp. 15–23.
  8. Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 435
  9. "Thiruvatta Mahadeva Temple | Parasurama Built Mahadeva Temple -". 27 March 2019.