திருநாவாய் தாமரைக் காயல்
திருநாவாய் தாமரை ஏரி மற்றும் வலசை பறவைகள் உய்விடம் | |
---|---|
திருநாவாய் தாமரை ஏரி | |
![]() | |
அமைவிடம் | திருநாவாய் |
ஆள்கூறுகள் | 10°52′31″N 75°59′27″E / 10.8753722°N 75.9908723°E |
பூர்வீக பெயர் | തിരുന്നാവായ താമര കായൽ - ദേശാടന പക്ഷി സങ്കേതം (Malayalam) |
ஆற்று மூலங்கள் | பரதப்புழா |
பெருங்கடல்/கடல் மூலங்கள் | அரபிக்கடல் |
திருநாவாய் தாமரை ஏரி அல்லது திருநாவாய் புலம் பெயர் பறவைகள் சரணாலயம் [1] (Lotus Lake Wetland Thirunavaya Malappuram, மலையாளம்: തിരുന്നാവായ താമര കായൽ-ദേശാടന പക്ഷി സങ്കേതം ) என்பது கேரளத்தின் மலப்புறம் மாவட்டம், திருநாவாயில் உள்ள ஒரு சதுப்பு நிலம், [2] ஏரி மற்றும் சரணாலயம் ஆகும். இங்கு தெற்கு பள்ளர் தாமரை ஏரி, வலியபரபூர் தாமரை ஏரி, எடக்குளம் தாமரை ஏரி உட்பட பல தாமரை ஏரிகளை இங்கு காணலாம். [3] இந்த பறவைகள் சரணாலயத்திற்கு பல பறவைகள் வலசை வருகின்றன. [4]
திருநாவாய் தாமரை ஏரி
[தொகு]
இந்தியாவின், கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநாவாய் தாமரை ஏரி மற்றும் தாமரைப் பண்ணை பிரபலமான சுற்றுலாத் தலங்கலாகும். இந்த ஏரியில் உள்ள தாமரை செடிகள், ஏரிக்கு அருகில் உள்ள கோயில்களான, திருநாவாய் நவ முகுந்தன் கோயில் ஆகியவற்றிற்கு பிரபலமானது. இங்கிருந்து இந்தியாவின் பல மாநிலங்களுக்கு தாமரை மலர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. [5] இங்கிருந்து நேரடியாக இந்தியாவில் உள்ள பல கோவில்களுக்கு தாமரை மலர்கள் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. தாமரை ஏரியில் தாமரை சாகுபடியானது இங்குள்ள உள்ளூர் மக்களால் பெரும்பாலும் முஸ்லிம் விவசாயிகளால் செய்யப்படுகிறது. [6] [7] [8]
திருநாவாய் வலசை பறவைகள் சரணாலயம்
[தொகு]

நத்தை குத்தி நாரை, [9] கொக்கு போன்ற பல பறவைகள் இங்கு வலசை வருகின்றன. செப்டம்பர்-பெப்ரவரி பருவத்தில், வலசை வரும் அரிய பறவைகள் இங்கு காணப்படுவதுடன், அன்செரிபார்மஸ், குயில், ஆந்தை, கொக்கு, ஹெரான், நீர்க்காகம், மூர்ஹென், பாம்புத் தாரா, செம்பருந்து, [10] மற்றும் பிற பறவைகள் அப்போது இங்கு காணப்படுகின்றன. இந்த ஏரிக்கு இமயமலையிலிருந்தும், சில சைபீரியாவிலிருந்தும் வலசை வருகின்றன. [11]
நிலவியல்
[தொகு]தாமரை ஏரி மற்றும் சரணாலயம் 20 ஏக்கர்கள் (8.1 ha) பரப்பளவில் பாரதப்புழா ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ளது.
திருநாவாய் தாமரை ஏரியானது திருநாவாய் தொடருந்து நிலையத்திலுருந்து 0.5 கிலோமீட்டர்கள் (0.31 mi) தொலைவிலும், மாநில நெடுஞ்சாலை 66 எதிர் திசையில் புத்தனத்தாணி மற்றும் குட்டிப்புரம் செல்கிறது. கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் திருநாவாயிலிருந்து 40 கி.மீ (25 மைல்) தொலைவில் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lotus, Lotus Everywhere". Retrieved 28 December 2023.
- ↑ "View of New breeding site record of Oriental White Ibis Threskiornis melanocephalus (Aves: Threskiornithidae) at Thirunavaya wetlands, Kerala, India". Retrieved 28 December 2023.
- ↑ "Thirunavaya a second home for migratory birds". Retrieved 28 December 2023.
- ↑ "Migrant storks find Thirunavaya best to nest". Retrieved 28 December 2023.
- ↑ "Lotus farmers confident as pink flower finds value addition". Retrieved 28 December 2023.
- ↑ "തിരുനാവായ 'താമരയുടെ പിതാവ്' സെയ്തലവിക്ക ഇനി ഓർമ | thirunavaya lotus father saidalavikka died". Retrieved 28 December 2023.
- ↑ "Thirunavaya Lotus: Flowers of Harmony in Distress". Retrieved 28 December 2023.
- ↑ "താമരപ്പൂ കൃഷിപ്പെരുമയുമായി തിരുനാവായ; ഇത് മതേതരത്വത്തിന്റെയും കഥ | Lotus Cultivation | Thirunavaya | Nattupacha". Retrieved 28 December 2023.
- ↑ "Asian openbill leaves no room for other migrants at Tirunavaya". Retrieved 28 December 2023.
- ↑ "threatenedtaxa.org/index.php/JoTT/article/download/7896/8591/46418". Retrieved 28 December 2023.
- ↑ "അപൂർവയിനം ദേശാടനപക്ഷികളുടെ പ്രജനന കേന്ദ്രമായി തിരുനാവായ... | Thirunavaya a second home for migratory birds". Retrieved 28 December 2023.