திண்ம அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திண்ம அமிலங்கள் (Solid acids) வினை நிகழும் ஊடகத்தில் கரையும் தன்மையற்ற அமிலங்கள் ஆகும், இவை, பெரும்பாலும் பலபடித்தான வினைவேக மாற்றங்களில் வினைவேக மாற்றியாக பயன்படுத்தப்படுகின்றன..

உதாரணங்கள்[தொகு]

ஆக்சாலிக் அமிலம், மாலிக் அமிலம், டார்டாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம் போன்றவை திண்ம நிலையில் உள்ள அமிலங்களாகும். பெரும்பான்மையான திண்ம அமிலங்கள் கரிம அமிலங்களாக காணப்படுகின்றன.லூயி அமிலங்களாக செயல்படுகின்ற சிலிகோ அலுமினேட்டுகள் (செயோலைற்று, அலுமினா, சிலிகோ-அலுமினோ பாசுபேட்டு) மற்றும் கந்தகமேற்றப்பட்ட சிர்கோனியா ஆகியவை திண்ம அமிலங்களுக்கான உதாரணங்களில் உள்ளடங்குகின்றன. பல இடைநிலை உலோகங்களின், டைட்டானியா, சிர்கோனியா மற்றும் நியோபியா ஆகியவற்றை உள்ளிட் உலோக ஆக்சைடுகள் அமிலத்தன்மை உடையனவாக உள்ளன.[1] இத்தகைய அமிலங்கள் வெடித்தலில் பயன்படுத்தப்படுகின்றன. பல திண்ம பிரான்ஸ்டெட் அமிலங்கள் (கந்தகமேற்றப்ட்ட பாலிஸ்டைரீன், திண்ம பாசுபாரிக் காடி, நியோபிக் அமிலம் மற்றும் எடிரோபாலிஆக்சோமெடலேட்டுகள்) கூட, தொழில் முறையில் திண்ம அமிலங்களாக பயன்படுத்தப்படுகின்றன.[2]

பயன்பாடுகள்[தொகு]

திண்ம அமிலங்கள் பல தொழில் முறை செயல்முறைகளில் வினைவேக மாற்றத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பெரிய அளவிலான பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகளில் பயன்படுத்தப்படும் வெடித்தல் செயல்பாடுகளில் இருந்து பல்வேறு தொகுப்பு முறை வேதிப்பொருட்களின் தொகுப்பு முறை வரை பயன்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Boysen, Dane A.; Uda, Tetsuya; Chisholm, Calum R. I.; Haile, Sossina M. (2004-01-02). "High-Performance Solid Acid Fuel Cells Through Humidity Stabilization" (in en). Science 303 (5654): 68–70. doi:10.1126/science.1090920. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:14631049. Bibcode: 2004Sci...303...68B. http://science.sciencemag.org/content/303/5654/68. 
  2. Busca, Guido "Acid Catalysts in Industrial Hydrocarbon Chemistry" Chemical Reviews 2007, volume 107, 5366-5410. எஆசு:10.1021/cr068042e
  3. "Solid Acid Catalysis: From Fundamentals to Applications".
"https://ta.wikipedia.org/w/index.php?title=திண்ம_அமிலம்&oldid=2749882" இருந்து மீள்விக்கப்பட்டது