உள்ளடக்கத்துக்குச் செல்

செயோலைற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செயோலைற்று
ZSM-5 என்ற செயோலைற்றின் நுண்துளை மூலக்கூற்று கட்டமைப்பு

செயோலைற்று (Zeolite) நுண்துளையுடை, அலுமினோசிலிகேட்டு கனிமம் ஆகும். இவை பொதுவாக வணிகரீதியான பரப்புக் கவர்ச்சிப் பொருட்களாகவும் வேதி வினையூக்கிகளாகவும் பயன்படுகின்றன.[1] செயோலைற்று என்ற சொல் 1756இல் சுவீடிய கனிமவியலாளரான அக்செல் பிரெடிரிக் குரான்சுடெட்டால் உருவாக்கப்பட்டது; இவர் இத்தகைய பொருளொன்றை சூடுபடுத்தியபோது ஏராளமான நீராவி வெளிப்பட்டதைக் கண்டு இப்பொருள் நீரைக் கவர்ந்திருப்பதை அவதானித்தார். இதனால் இப்பொருளுக்கு சியோலைட்டு எனப்பெயரிட்டார்; கிரேக்கத்தில் ζέω (zéō), என்பதற்கு "கொதிக்க" என்றும் λίθος (líthos), என்பதற்கு "கல்" என்றும் பொருளாகும்.[2]

செயோலைற்றுக்கள் இயற்கையில் கிடைக்கின்றன; தொழிற்சாலைகளிலும் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. அக்டோபர் 2012 நிலவரப்படி 206 தனித்தனி செயோலைற்று கட்டமைப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன; இவற்றில் 40க்கும் மேலாக இயற்கையில் கிடைக்கின்றன.[3][4]

மேற்சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயோலைற்று&oldid=3299522" இலிருந்து மீள்விக்கப்பட்டது