உள்ளடக்கத்துக்குச் செல்

தாஷ்கண்ட் பிராந்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாஷ்கண்ட் பிராந்தியம் ( Tashkent Region, உஸ்பெக் மொழி : Toshkent viloyati, Тошкент вилояти ) என்பது உஸ்பெகிஸ்தான் நாட்டின் ஒரு பிராந்தியப் ஆகும். இது நாட்டின் வடகிழக்கு பகுதியில், சிர் தாரியா நதிக்கும், தியான் சான் மலைகளுக்கும் இடையில் அமைந்துள்ள விலோயாட் (பகுதி) ஆகும். இந்த பிராந்தியமானது சர்வதேச எல்லைகளையும் கொண்டுள்ளது. இதன் சர்வதேச எல்லைகளாக வடக்கில் கசகஸ்தான் நாடும், கிழக்கில் கிர்கிசுத்தான் நாடும், தெற்கில் தஜிகிஸ்தான் நாடும் சர்வதேச எல்லைகளாக அமைந்துள்ளன. மேலும் அண்டை பிராந்தியங்களின் எல்லைகளாக தென் மேற்கில் சிர்தார்யா பிராந்தியம், வட மேற்கில் நமங்கன் பிராந்தியம் ஆகியவை உள்ளன. இந்த பிராந்தியமானது 15,300 கிமீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகை சுமார் 4,450,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்டங்கள்

[தொகு]
மாவட்ட பெயர் மாவட்ட தலைநகரம்
1 அக்குர்கன் மாவட்டம் அக்குர்கன்
2 பெக்காபாத் மாவட்டம் ஜாபர்
3 போஸ்டான்லிக் மாவட்டம் கசால்கெண்ட்
4 புகா மாவட்டம் , மோரோ
5 சைனாஸ் மாவட்டம் சைனாஸ்
6 கிப்ரே மாவட்டம் கிப்ரே
7 பார்க்கண்ட் மாவட்டம் பார்க்கண்ட்
8 பிஸ்கண்ட் மாவட்டம் பிஸ்கண்ட்
9 குய் சிர்ச்சிக் மாவட்டம் டஸ்ட்டோபோத்
10 ஓர்டா சிர்ச்சிக் மாவட்டம் டோய்டிபா
11 யாங்கியோல் மாவட்டம் குல்பகூர்
12 யுகோரி சிர்ச்சிக் மாவட்டம் யாங்கிர்பொசொர்
13 ஜாங்கியாடா மாவட்டம் கிலீஸ்

கண்ணோட்டம்

[தொகு]

தாஷ்கண்ட் பகுதி 15 நிர்வாக மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் நிர்வாக மையமாக 2017 முதல், நூராஃப்ஷோன் நகரம் உள்ளது. பிராந்தியத்தின் மற்ற நகரங்களாக ஆங்ரென் நகரம், ஓல்மாலிக் நகரம், ஓகாங்கரோன் நகரம், பெக்காபாத் நகரம், சிர்ச்சிக் நகரம், கசல்கென்ட் நகரம், கெல்ஸ் நகரம், பார்கண்ட் நகரம், யாங்கியாபாத் நகரம் மற்றும் யாங்கியோயல் நகரம் ஆகியவை உள்ளன. பிராந்தியத்தின் மாவட்டங்கள் 1. அக்குர்கன் மாவட்டம் ( தலிநகரம், அக்குர்கன் ), 2. பெக்காபாத் மாவட்டம் ( தலைநகரம், ஜாபர் ) 3. போஸ்டான்லிக் மாவட்டம் ( தலைநகரம், கசால்கெண்ட் ) 4. புகா மாவட்டம் ( தலைநகரம், மோரோ ) 5. சைனாஸ் மாவட்டம் ( தலைநகரம், சைனாஸ் ) 6. கிப்ரே மாவட்டம் ( தலைநகரம், கிப்ரே ) 7. பார்க்கண்ட் மாவட்டம் ( தலைநகரம், பார்க்கண்ட் ), 8. பிஸ்கண்ட் மாவட்டம் ( தலைநகரம், பிஸ்கண்ட் ) 9. குய் சிர்ச்சிக் மாவட்டம் ( தலைநகரம், டஸ்ட்டோபோத் ) 10. ஓர்டா சிர்ச்சிக் மாவட்டம் ( தலைநகரம், டோய்டிபா ), 11. யாங்கியோல் மாவட்டம் ( தலைநகரம், குல்பகூர் ) 12. யுகோரி சிர்ச்சிக் மாவட்டம் ( தலைநகரம், யாங்கிர்பொசொர் ), 13. ஜாங்கியாடா மாவட்டம் ( தலைநகரம், கிலீஸ் ) போன்றவை ஆகும்.

தாஷ்கண்ட் பிராந்தியத்தின் காலநிலை என்பது லேசான ஈரமான குளிர்காலம் மற்றும் வெப்பமான வறண்ட கோடைகாலங்களைக் கொண்ட கண்ட காலநிலை எனப்படும் ஐரோப்பிய காலநிலை ஆகும் .

தாஷ்கண்ட் பிராந்தியத்தின் இயற்கை வளங்களாக செப்பு, பழுப்பு நிலக்கரி, மாலிப்டினம், துத்தநாகம், தங்கம், வெள்ளி, அருமண் தனிமம், இயற்கை எரிவளி, பாறை எண்ணெய், கந்தகம், மேஜை உப்பு, சுண்ணக்கல் மற்றும் கிரானைட் ஆகியவை உள்ளன.

தரார்ஷ்கண்ட் பிராந்தியம் நாட்டில் பொருளாதார ரீதியாக மிகவும் வளர்ச்சியடைந்துள்ள பிராந்தியமாக உள்ளது. இங்கு உள்ள தொழில்துறைகளாக ஆற்றல் உற்பத்தி பொருள்களான, சுரங்கத் தொழில், உலோகம், உரங்கள், வேதிப் பொருள்கள், மின்னணுவியல், ஜவுளி, பருத்தி சுத்திகரிப்பு, உணவு பதப்படுத்துதல் மற்றும் பாதணிகள் போன்றவை உள்ளன.

முதன்மையாக நீர்ப்பாசனத்தை அடிப்படையாகக் கொண்ட மிகவும் வளர்ந்த விவசாயத் தொழிலை தர்ஷ்கண்ட் பிராந்தியம் கொண்டுள்ளது. இந்த பிராந்தியத்தின் முக்கிய பயிர்களாக பருத்தி மற்றும் சணல், ஆகியவை உள்ளன. என்றாலும் தானியங்கள், இன்னீரம் மற்றும் சுரைக்காய், பழம் மற்றும் காய்கறிகள் மற்றும் சிட்ரஸ் பழங்கள் விளைவிப்பதும் அதிகரித்து வருகின்றன. இதனோடு கால்நடை வளர்ப்பும் வேளாண் தொழிலில் முக்கிய இடத்தை வகிக்கிறது.

இந்த பிராந்தியத்தில் நன்கு வளர்ந்த போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதி உள்ளது, 360 கி.மீ க்கும் நீண்ட தொடருந்து பாதைகளை கொண்டுள்ளது. மற்றும் 3771   கி.மீ. க்கும் மேலான நீண்ட சாலை வசதியைக் கொண்டுள்ளது. இதுமட்டுமல்லாது தாஷ்கண்டில் ஒரு பெரிய சர்வதேச விமான நிலையம் உள்ளது, இது நாட்டின் முக்கிய விமான நிலையமாகும்.

இந்த பிராந்தியத்தில் சட்கல் தேசிய பூங்கா என்னும் தேசியப் பூங்கா அமைந்துள்ளது. மேலும் மலைகள் மற்றும் காடுகளும், தாஷ்கண்ட் பிராந்தியத்தில் அமைந்துள்ளன.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாஷ்கண்ட்_பிராந்தியம்&oldid=3077351" இலிருந்து மீள்விக்கப்பட்டது