சிர்தார்யா பிராந்தியம்
சிர்தார்யா பிராந்தியம் ( Sirdarya Region, உஸ்பெக் மொழி : Sirdaryo viloyati, Сирдарё вилояти) என்பது உஸ்பெகிஸ்தானின் பிராந்தியங்களில் ஒன்றாகும், இது நாட்டின் மையத்தில் சிர் தாரியா ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. இந்த பிராந்தித்தின் எல்லைகளாக பன்னாட்டு எல்லைப் பகுதிகளாக வட மேற்கில் கசக்கஸ்தான் நாட்டு எல்லையும், தென் கிழக்கில் தஜிகிஸ்தான் நாட்டு எல்லைப் பகுதிகளும் அமைந்துள்ளன. இது அல்லாமல் உள் நாட்டு பிராந்தியங்களுடன் எல்லையைக் கொண்டுள்ளது. அவை வட கிழக்கலி தாஷ்கண்ட் பிராந்தியம் மற்றும் மேற்கில் ஜிசாக் பிராந்தியத்துடன் எல்லைகளைக் கொண்டு உள்ளது. இது 4,276 சதுர கிலோமீட்டர்கள் (1,651 sq mi) ,[1] பரப்பளவு கொண்டுள்ளது. மேலும் இந்த பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகள் பாலைவனமாகும், நிலவும் தோப்பு புல்வெளி பிராந்தியத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியைக் கொண்டு உள்ளது. பிராந்தியத்தின் மக்கள் தொகை 803,100 ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நிர்வாகம்
[தொகு]சிர்டாரியோ பிராந்தியம் 9 நிர்வாக மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தின் தலைநகரமாக குலிஸ்டன் நகரம் (நகரின் மக்கள் தொகை தோராயமாக 77,300 ஆகும்) உள்ளது. பிராந்தியத்தின் குறிப்பிடத்தக்க பிற நகரங்கள் மற்றம் மாநகரங்களானது பாக்ஸ்ட் நகரம், பாயோவட் நகரம், ஃபர்ஹோட் நகரம், கஹ்ராமன் நகரம், சாய்ன் நகரம், சிர்தாரியோ நகரம், கவாஸ்ட் நகரம், ஷிரின் நகரம் மற்றும் யாங்கியர் நகரம் ஆகியவை ஆகும். சிர்டாரியோ பிராந்தியம் தற்போதய நிலையில் ஒன்பது நிர்வாக மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை 1. அகால்டின் மாவட்டம் ( தலைநகரம், சர்தோபா ), 2. பேயாட் மாவட்டம் ( தலைநகரம், பேயாட் ) 3. குலிஸ்தான் மாவட்டம் ( தலைநகரம், திகோனோபாத் ), 4. கவாஸ்ட் மாவட்டம் ( தலைநகரம், கவாஸ்ட் ), 5. மேக்னாதாபாத் மாவட்டம் ( தலைநகரம், காக்ராமன் ), 6. மிர்சாபாத் மாவட்டம் ( நவ்ருஸ் ), 7. சைகுனாபாத் மாவட்டம் ( தலைநகரம, சைக்குன் ), 8. ஷரோஃப் ரஷிடோவ் மாவட்டம் ( தலைநகரம், பக்தாபாத் ), 9. சிர்தாரியோ மாவட்டம் ( தலைநகரம், சிர்தாரியோ ) ஆகும்.
மக்கள்வகைப்பாடு
[தொகு]இப்பகுதியின் மக்கள் தொகை பிரதான நெடுஞ்சாலையில் ஓரங்களில் உள்ளது. இது முழு பிராந்தியத்தையும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது: அவை மேற்கு மற்றும் கிழக்கு ஆகும். பிராந்தியத்தின் முதன்மையான மக்களாக உஸ்பெக்கி மக்கள் உள்ளனர். தெற்கில் சிறுபான்மை மக்களாக தாஜிகிஸ்தான் நாட்டின் (முக்கியமாக கவாஸ்ட் மாவட்டம்) எல்லையில் தாஜிக் சிறுபான்மை மக்கள் உள்ளனர்.
மாவட்டங்கள்
[தொகு]எண் | மாவட்ட பெயர் | மாவட்ட தலைநகரம் |
---|---|---|
1 | அகால்டின் மாவட்டம் | சர்தோபா |
2 | பேயாட் மாவட்டம் | பேயாட் |
3 | குலிஸ்தான் மாவட்டம் | திகோனோபாத் |
4 | கவாஸ்ட் மாவட்டம் | கவாஸ்ட் |
5 | மேக்னாதாபாத் மாவட்டம் | காக்ராமன் |
6 | மிர்சாபாத் மாவட்டம் | நவ்ருஸ் |
7 | சைகுனாபாத் மாவட்டம் | சைக்குன் |
8 | ஷரோஃப் ரஷிடோவ் மாவட்டம் | பக்தாபாத் |
9 | சிர்தாரியோ மாவட்டம் | சிர்தாரியோ |
காலநிலை
[தொகு]காலநிலை என்பது பொதுவாக வறண்ட கண்ட காலநிலை எனப்படும் ஐரோப்பிய காலநிலை நிலவுகிறது. இங்கு குளிர்காலம் மற்றும் கோடை வெப்பநிலைக்கு இடையில் தீவிர வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.
பொருளாதாரம்
[தொகு]பிராந்தியத்தின் பொருளாதாரமானது பருத்தி மற்றும் தானிய பயிர் விளைச்சளை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது. நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை வளர்ப்பு வலுவான நம்பகத்தன்மை கொண்ட வேளாண் பணிகளாக உள்ளன. சிறு பயிர்களில் தீவன செடிகள், காய்கறிகள், இன்னீரம், சுரைக்காய், உருளைக் கிழங்கு, மக்காச்சோளம், பலவகையான பழங்கள் மற்றும் திராட்சை ஆகியவை அடங்கும். தொழில் துறையில் கட்டுமான பொருட்கள், நீர்ப்பாசன உபகரணங்கள் மற்றும் அறுவடையான பருத்தியை பதப்படுத்துதல் ஆகியவை முக்கியத் தொழில்களாக உள்ளன.
சிர்தார்யாவில் உஸ்பெகிஸ்தானின் மிகப்பெரிய நீர் மின் ஆற்றல் நிலையங்களில் ஒன்று உள்ளது, இது நாட்டின் மூன்றில் ஒரு பங்கு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Passport of the Syrdarya region". Officiel website of Sirdaryo Region. Archived from the original on 1 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 30 April 2018.