உள்ளடக்கத்துக்குச் செல்

நமங்கன் பிராந்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நமங்கன் பிராந்தியம் (Namangan Region, உஸ்பெக் மொழி : Namangan viloyati/Наманган вилояти, نەمەنگەن ۋىلايەتى; உருசிய மொழி : Наманганская область, Namanganskaya oblast) என்பது உஸ்பெகிஸ்தானின் பிராந்தியங்களில் ஒன்றாகும், இது நாட்டின் தூரக் கிழக்கு பகுதியில் ஃபெர்கானா பள்ளத்தாக்கின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது சிர் தாரியா ஆற்றின் வலது கரையில் உள்ளது. மற்றும் கிர்கிசுத்தான், தஜிகிஸ்தான், தாஷ்கண்ட் பிராந்தியம், பெர்கானா பிராந்தியம் மற்றும் ஆண்டிஜன் பிராந்தியத்துடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. இந்த பிராந்தியம் 7,900 கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகை சுமார் 2,530,000 என மதிப்பிடப்பட்டுள்ளது, இதன் மக்களில் 62% க்கும் அதிகமானோர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மத்திய ஆசியாவின் முக்கிய நீர்வழிப்பாதையான சிர் தார்யா என்ற ஆறு நமங்கன் பிரதேசத்தில் தொடங்குகிறது. நரியன் மற்றும் கார தர்யா நதிகளின் சேர்கையிலிருந்து சிர் தார்யா ஆறு உருவாகிறது. நமங்கன் பகுதி பல்வேறு இயற்கை வளங்களால் மிகவும் நிறைந்துள்ளது. குறிப்பாக, இப்பிராந்தியத்தின் மிங்புலாக் மாவட்டத்தில் எண்ணெய் எடுக்கிறது மற்றும் கசன்சே மற்றும் பேப் மாவட்டங்களில் பெரிய அளவில் தங்கம் மற்றும் வைர இருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யுரேனியம், வெள்ளி, அலுமினியம், டங்ஸ்டன், இரும்பு, தாமிரம், கிரானைட் மற்றும் பளிங்கு போன்றவூயும் பெருமளவில் உள்ளன. ஃபெர்கானா பள்ளத்தாக்கை உள் நகர பகுதிகள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் இரண்டு பெரிய மலை சுரங்கங்கள் உள்ளன, அவை நமங்கன் பிரதேசத்தில் அமைந்துள்ளன.

மாவட்டங்கள்

[தொகு]

நமங்கன் பிராந்தியம் 11 நிர்வாக மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

வ.எண் மாவட்ட பெயர் மாவட்ட தலைநகரம்
1 சர்தக் மாவட்டம் சர்தக்
2 சஸ்ட் மாவட்டம் சஸ்ட்
3 கசன்சே மாவட்டம் கசன்சே
4 மிங்புலக் மாவட்டம் ஜுமாசுவே
5 நமங்கன் மாவட்டம் தஸ்புலக்
6 நரியன் மாவட்டம் கக்குலாபாத்
7 பேப் மாவட்டம் பேப்
8 துரகுர்கன் மாவட்டம் துரகுர்கன்
9 உச்ச்குர்கன் மாவட்டம் உச்ச்குர்கன்
10 யுச்சி மாவட்டம் யுச்சி
11 யாங்கிகுர்கன் மாவட்டம் யாங்கிகுர்கன்

இங்கு நிலவும் காலநிலை என்பது பொதுவாக ஐரோப்பியத் தட்பவெப்பமாகும் . இங்கு குளிர்காலம் மற்றும் கோடை வெப்பநிலைகளுக்கு இடையில் தீவிர வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.

இந்த பிரதேசத்தின் இயற்கை வளங்களில் பெட்ரோலியம், இயற்கை எரிவளி, தங்கம், ஈயம், செப்பு, குவார்ட்ஸ் மற்றும் ஆண்டிமனி ஆகியவை அடங்கும். பிரதானமாக விவசாயத்தில் பருத்தி, தோட்டக்கலை மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பில், அங்கோரா ஆடுகளின் மதிப்புமிக்க மென்மயிருக்காக அவை இனப்பெருக்கம் செய்தல் உள்ளிட்டவை நடக்கின்றன.

இங்கு நடக்கும் தொழில்களானது முதன்மையாக ஜவுளியை அடிப்படையாக கொண்டது. இங்கு இரண்டு பெரிய பட்டு உற்பத்தி வளாகங்கள், ஒரு துணி நெய்யும் உற்பத்தி ஆலை, பருத்தி நூல் நூற்பாலை, மற்றும் ஏராளமான சிறிய ஜவுளி, தோல் மற்றும் காலணி தொழிற்சாலைள். பாரம்பரிய உஸ்பெக் கைவினைப்பொருட்கள், குறிப்பாக கத்திகள் போன்றவை உற்பத்தி செய்வதற்கான ஒரு மையமாகவும் இந்த பகுதி உள்ளது.

பொருளாதாரம்

[தொகு]

2014 ஆம் ஆண்டின் முதல் பாதியில், நமங்கன் பிராந்தியத்தின் மொத்த பிராந்திய உற்பத்தியானது UZS 2,214 பில்லியனைக் கொண்டுள்ளது, இது 2013 ஆம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 9.8% அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியானது, தொழில் 13%, விவசாயம் - 7.6%, கட்டுமானம் - 5.7%, வர்த்தகம் - 13.6%, சேவைத் துறை - 16% வளர்ந்துள்ளது.

விவசாயத்தின் முக்கிய உற்பத்தியாக பருத்தி, தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், அத்துடன் கால்நடை வளர்ப்பு போன்றவை உள்ளன. மேலும் ஜவுளி, உணவு பதப்படுத்துதல், இயந்திரங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் உற்பத்தி ஆகியவை பிராந்தியத் தொழிலில் முதன்மையாக உள்ளன.

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நமங்கன்_பிராந்தியம்&oldid=3317236" இலிருந்து மீள்விக்கப்பட்டது